Friday, May 7, 2010

அஜ்மலுக்கு தூக்கு எப்போது?


shockan.blogspot.com
இந்தியாவில் இந்த தண்டனையே விதிக்கப்படக்கூடாது என எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வரும் நிலையில், தூக்கு தண்டனையை நியாயப் படுத்தி இருக்கிறது கசாப்புக்கு கொடுக் கப்பட்ட தீர்ப்பு. 166 உயிர்களை பலி கொண்ட மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட கொடூரமான தீவிரவாதியான அஜ்மல் கசாப்புக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு உலகம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது.

"அஜ்மல் கசாப் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதுகிறது இந்த நீதிமன்றம். இப்படிப்பட்ட கொடும் குற்றவாளியை உயிரோடு விட்டுவைத் தால் அது சமூகத்துக்கும், இந்திய அரசுக் கும் பெரிய அச்சுறுத்தலாக மாறும்'’’ - கசாப்பின் மீதான வழக்கு குறித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தஹலி யானியின் அழுத்தமான தீர்ப்பு இது.

அஜ்மல் கசாப் மீதான 86 குற்றச் சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கடந்த திங்களன்று அறிவித்த நீதிபதி தஹலியானி... 3 நாள் இடைவெளிக்கு பிறகு அஜ்மல் கசாப்புக்கு கொலை, கொலைச் சதி, தேசத்துக்கு எதிரான போர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளுக் காக தூக்கு தண்டனையும், 4 குற்றங் களுக்காக ஆயுள் தண்டனையும் தருவ தாக தீர்ப்பு வழங்கியதைக் கேட்டு... நியாயம் வென்றதாக மகிழ்ந்தனர் கோர்ட்டில் குவிந்திருந்த மக்கள். தனக்கான தண்டனைகளைக் கேட்டு அழுதான் குற்றவாளி அஜ்மல் கசாப்.

காந்தகார் விமான கடத்தலில் பணயக்கைதிகளாக இருந்த பயணிகளை மீட்க தீவிரவாதிகள் விடுவிக் கப்பட்டதை தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டிய நீதிபதி தஹலியானி, அஜ் மல் கசாப் உயிரோடு இருந்தால் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்கலாம் என்றும் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார். ""166 பேர் மரணமடையவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடை யவும் காரணமான அஜ்மல் கசாப் போன்றவர்களை விடுவித்தால் சட்டத்தின் மீது இருக் கும் பயம் போய் விடும்'' என்கிறார் அரசு வழக் கறிஞரான உஜ்வல் நிக்காம்.

அஜ்மல்லுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டி ருந்தாலும் அது உடனடியாக நிறைவேற்றப் படாது. தூக்கு தண்டனையை ஐகோர்ட், சுப்ரீம்கோர்ட் உள்ளிட்டவை உறுதி செய்த பிறகு... குடியரசுத் தலைவரும் கருணை மனுவை நிராகரித்தால் மட்டுமே தூக்கு தண்டனை நிறைவேற்றப் படும். சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனையை உறுதி செய்த பிறகும், நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அஃப்சல் குரு உள்ளிட்ட 29 பேரின் தண்டனையே இன்னும் நிறை வேற்றப்படவில்லை என்பதை சீனியர் வக்கீல் கள் குறிப்பிடுகின்றனர்.

""உலகையே மிரட்டிய ட்வின் டவர்ஸ் தாக்குதலில் கூட யாருக்கும் குற்றவாளி என தீர்ப்பு வாங்கித்தர முடியாத நிலையில் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிக்கு தூக்கு தண் டனை வாங்கித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார்கள் சர்வதேச பத்திரிகையாளர்கள்.

நாள் ஒன்றுக்கு 8.5 லட்சம் செலவிட்டு பாதுகாக்கப்படும் அஜ்மல் கசாப்பை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பதே மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரின் குரலாகவும் இருக்கிறது.

No comments:

Post a Comment