Friday, May 7, 2010

ஈழ அகதிகளின் தற்கொலையை தடுத்த நக்கீரன்! -ஆக்ஷன் ரிப்போர்ட்!


shockan.blogspot.com
24-ந் தேதி இரவு 10.15.

நம் செல்லுக்கு வந்த மலேசிய பத்திரிகை நண்பர் அருள்தாஸ்... மிகுந்த பதட்டத்தோடு “""பினாங்கு கடற்கரைப் பகுதியில்... ஒரு கப்பல் பழுதாகி நிற்குது. அதில் ஈழத் தமிழர்கள் 75 பேர் உணவு கூட இல்லாம பரிதவிச்சிகிட்டு இருக்காங்க. அவங்களை மலேசிய போலீஸ் கைது செய்ய முயற்சிப்பதால்.. கூண்டோடு கடலில் குதிச்சி... தற்கொலை செய்துக்கப் போவதா அவங்க அறிவிச்சிருக்காங்க. மரணத்தின் விளிம்பில் இருக்கும் அந்த ஈழத் தமிழர்களைக் காப்பாத்த... நக்கீரன்தான் முயற்சி எடுக்கணும்''’என்றபடி... அந்தப் பழுதானக் கப்பலில் இருக்கும் கண்ணன் என்பவரின் செல் எண்ணையும் கொடுத்தார்.

இந்த இரவு நேரத்தில் இப்படியொரு தகவலா? என திகைத்துப்போன நாம்... அடுத்த நொடியே கப்பலில் இருந்த கண்ணனைத் தொடர்புகொண்டு "என்ன நடந்தது?' என்றோம்.

அழுகை பிதுங்க பேச ஆரம்பித்தவர் ""எங்கட எதிரில் மரணம் நிக்கிது. இந்த நேரத்தில்... நக்கீரன் லைனில் வந்தது ஆறுதல். எங்கட கப்பல்ல 6 பெண்கள், 8 பிள்ளையள், 61 ஆண்கள்னு 75 பேர் இருக்கம். கடைசிச் சண்டையில் சிங்களன் ’ஷெல்’அடிச்சி... குண்டுபோட்டதில் எங்கட சொந்த பந்தங் கள் கொத்துக்கொத்தா செத்து மடிஞ் சாங்க... அவங்களை அடக்கம் பண்ணக் கூட முடியாம... குழந் தை குட்டியளோட தப்பி ஓடினோம். ஆனா ஆர்மிக்காரங்க எங்களைப் பிடிச்சி வதைமுகாம்ல அடைச்சி... சித்திரவதை பண் ணாங்க. அதை தாக்குப் பிடிக்க முடியாம 19-ந் தேதி முகாம்ல இருந்து தப்பிச்சி... வடக்குக் கடல் பகுதியில் நின்ன இந்தக் கப்பல்ல ஏறினோம். உயிர் பொழச்சா போ தும்னு இலக்கில்லாம மனம்போன போக்கில் கப்பலைச் செலுத்தி னோம். 23-ந்தேதி கப்பல் பழுதாகி பாதியில நின்டுச்சி. கொண்டுவந்த சாப்பாடும் தீர்ந்து போக... பசிக் கொடுமையோட எங்க இருக் கோம்னு கூட தெரியாம தவிச்சிக் கிட்டு இருந்தப்ப... ஒரு மலேசிய ஆர்மி கப்பல் வந்துச்சி. எங்களை விசாரிச்சாங்க. நாங்க எங்க பரிதாப நிலையச்சொல்லி.. எங்களைக் கைது பண்ணிடாதீங்கய்யான்னு கெஞ்சினோம். சரி வாங்க. உங்க கப்பலை சரி பண்ணிக் கொடுக்குறோம்ட்டு கப்பலோட எங்களை கடற்தளத்துக்கு கொண்டு போனாங்க. அங்க உங்களைக் கைது பண்ணி... உங்கட நாட்டுக்கே அனுப்பப் போறோமுண்டு சொன்னாங்க. "திரும்பி இலங்கைக்குப் போனா எங்களை சித்திர வதை பண்ணிக் கொன்னே போட்ருவாங்க. அதுக்கு பதில் நாங்க இங்கேயே கடல்ல குதிச்சி நிம்மதியாச் சாகறோம்'னு சொன் னோம். அதனால் மலேசிய ராணுவமும் போலீஸும் ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்க கைது பண்ண நினைச்சால் நாங்க கடல்ல குதிப்பதைத் தவிர வேற மார்க்கமில்லை''’’என்றார் பலவீனமான குரலில்.





"அவசரப்பட்டு விபரீத முடிவுகளை எடுக்கவேண்டாம். உதவ முயல்கிறோம்' என அவருக்கு தெம்பூட்டிவிட்டு... நக்கீரன் இணையத்தில் இவர்கள் குறித்த செய்தியை உடனடியாக பதிவுசெய்து உலகத் தமிழர்களின் கவனத்திற்குக் கொண்டு போனோம். அதோடு... சர்வதேச தமிழ் உணர்வாளர்கள் பலரையும் அந்த இரவிலேயே தொடர்புகொண்டு விபரங்களைத் தெரிவித்தோம். நார்வே தமிழீழ மக்களவை பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி பரபரத்தார்கள். சென்னையில் இருக்கும் மலேசியத் தூதரகத்தின் முன் நாம் தமிழர் இயக்கமும் தமிழ்தேச பொதுவுடமைக் கட்சியும் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்தியது. சீமான் போன்றவர்கள் மலேசிய அரசைக் கண்டித்து குரல்கொடுக்க ஆரம்பித்தனர். உலகத் தமிழர்கள் மத்தியில் பரபரப்புத் தீ பற்றிக்கொண்டது.

மறுநாள் காலை பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் ராமசாமியைத் தொடர்பு கொண்ட நாம்... சிக்கலில் இருக்கும் ஈழத்தமிழர்களை மீட்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். அடுத்த கொஞ்ச நேரத்தில் ""போலீஸ் எங்களைக் கைது செய்ய நெருங்குது. பெண்போலீஸ் எங்கட கப்பலில் நுழைய முயற்சி பண்றாங்க. கப்பல்ல இருக்கும் அத்தனை பேரும் கடல்ல குதிக்கத் தயாராயிட்டாங்க. இதுதான் உங்களுடன் நாங்கள் பேசும் கடைசிப் பேச்சாக இருக் கும்''’என்று கப்பலில் இருந்த கண்ணன் விம்மியபடி சொல்லி செல்லை அணைக்க... பகீரானோம். நமது ரத்த ஓட்டம் எகிறியது. மீண்டும் கண்ணனைத் தொடர்பு கொண்டபோது ரிங் போனபடியே இருந்தது. இந்தத் தகவலையும் பினாங்கு துணை முதல்வரின் கவனத் துக்கு நாம் அவசரமாகக் கொண்டுபோக... ""நான் அங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். கவலைப்படா தீர்கள்''’என்றார். அந்தக் கப்பலுக்குள் நுழைந்த துணை முதல்வர்... ""கைது செய்யவோ உங்களை இலங்கைக்கு நாடு கடத்தவோ நான் விடமாட்டேன்''’என்று உறுதி கொடுத்து அவர்களை இறங்கவைத்தார். தற்கொலை முயற்சியைக் கைவிட்டு ஈழத் தமிழர்கள்.. பத்திரமாக தரை இறங்க... உலகத்தமிழர்கள் பலரும் நக்கீரனுக்கு நன்றி தெரிவித்தனர்.





ஈழ அகதிகளின் தற்கொலை முடிவை தடுத்துவிட்ட மகிழ்ச்சியில் பேசிய பினாங்கு துணை முதல்வர் ராமசாமி நம்மிடம் ""நக்கீரன் சொன்ன பிறகுதான் ஈழத்தமிழர்கள் இங்கு கப்பலில் பரிதவிக்கும் விசயமே எனக்குத் தெரிய வந்தது. நான் கப்பலில் இருக்கும் தமிழர்களைச் சந்திக்கப் போகும்போது துணை முதல்வரான என்னையே போலீஸ் அனுமதிக்காம தடுத்துச்சு. அதையும் மீறித்தான் போனேன். நான் போவதற்கு முன்... கப்பலில் இருந்து ஈழ அகதிகளை தரை இறக்க மலேசிய போலீஸ் எதை எதையோ செய்து பார்த்திருக்கிறது. உச்சகட்டமா கப்பலுக்கு மின்சார ஷாக்கூட கொடுத்து... அவங்க அத்தனை பேரையும் இறங்க வைக்க முயற்சி பண்ணியிருக்காங்க. வாழ்க்கையையே வெறுத்த நிலையில் இருந்த அந்த அகதிகள்... இந்தக் கொடுமையையும் தாங்கிக்கிட்டு... அடுத்து கடல்ல குதிக்க ரெடியாகிக்கிட்டு இருந்தாங்க. அந்த நேரத்தில் அங்க போன நான்... உங்களை இலங்கைக்கு அனுப்பாம இருக்க நான் உத்தரவாதம் தர்றேன்னு சொல்லி... அவங்களை சமாதானப் படுத்தி... அவங்களை கப்பல்ல இருந்து இறங்க வச்சேன். எங்களை அகதிகளா ஏற்க விரும்பும் நாட்டுக்கு எங்களை இதே கப்பல்லயே அனுப்பிவச்சுடுங்கன்னு கோரிக்கை வச்சாங்க. அவங்க வந்த கப்பல் ரொம்ப மோசமா டேமேஜ் ஆகியிருந்தது. அதனால் உரிய பாதுகாப்போடு உங்களை நாங்க பார்த்துக்கறோம்னு சொன்னேன். பிறகு அவங்க அத்தனை பேருக்கும் சாப்பாடு கொடுத்து முகாம்ல தங்க வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அவங்களை அனுப்பி வச்சேன்''’’என்றார் உற்சாகமாய்.

இந்த மகிழ்ச்சியான நிலை நீடிக்கவில்லை. சாப்பாடு கொடுத்து பினாங்கு முகாமுக்கு கௌரவமாக அவர்களை அழைத்துச்சென்ற மலேசிய போலீஸ்... திடீரென எல்லோர் கைகளையும் பின்புறமாக பிணைத்து... விலங்கு போட்டுக் கைது செய்து... கோலாலம்பூர் முகாமில் ஆண்களைத் தனியாகவும் பெண்களைத் தனியாகவும் குழந்தைகளைத் தனியாகவும் அடைத்துவிட்டது. கேட்க நாதியற்ற இனம், தமிழினம் என்ற நினைப்பு மலேசியாவுக்கும் வந்துவிட்டது. அதனால்தான் இப்படி. உடனே குழந்தைகளை எங்களுடன் தங்கவையுங்கள் என்றபடி கைதான பெண்கள் சிறையி லேயே உண்ணாவிரதம் தொடங்கினர். கைது நிலையிலேயே நம்மைத் தொடர்புகொண்ட கண்ணன், மாறன், ராசு ஆகியோர் ""பினாங்கு துணை முதல்வரையே மலேசிய அரசு மதிக் கலை. அவர் போனதும் எங்களுக்கு விலங்கு போட்டு கைது பண்ணித்தான் கோலாலம்பூர் முகாமுக்குக் கொண்டு வந்தாங்க. இங்கயும் வதைமுகாம் வாழ்க்கைதான் எங்களுக்கு. தாய் தமிழகமாவது எங்களை அகதிகளா ஏத்துக்கணும்... தாயுள்ளம் படைத்த கலைஞரய்யா எங்களை வாழவைக்க ணும்''’என்றார்கள் கெஞ்சலாக.

மீண்டும் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியைத் தொடர்பு கொண்டு இதை நாம் விவரிக்க... “""ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வதாக நான் உத்தர வாதம் அளித்தேன். ஆனால் மலேசிய அரசாங்கம் எனக்கே தெரியாமல்... அவங்களைக் கைது பண்ணியிருக்கிறது, இனி விடமாட்டேன். நானும் தமிழன்தான். அந்த உணர்வோடு அவர்களுக்கு உதவுவேன். ஈழத் தமிழர்கள் தமிழகம் செல்ல விரும்பினால்.... கலைஞர் அவர்களை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னால்... இந்த முயற்சியில் உட னடியாக இறங்குவேன். இனி பினாங்கு சட்டசபையிலும் ஈழத் தமிழர்களுக்காக உரக்கக் குரல்கொடுப்பேன்'' என்றார் உண்மையான அக்கறையோடு.

மலேசியாவில் வதைபடும் ஈழத் தமிழர்களுக்கு தமிழகம் இடம் தரவேண்டும். இதற்கு கலைஞர் மனது வைக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை.

No comments:

Post a Comment