Friday, May 7, 2010

போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!



இருப்பதை இல்லாததுபோல் மறைக்காதீர்கள்; இல்லாததை இருப்பதுபோல் காட்டிக்கொள்ளாதீர்கள்.

இவைதாம் போலித்தனங்கள்.

நடிக்காதீர்கள். அது எடுபடாத நீங்கள் நீங்களாய் இருங்கள். மற்றவர்களுக்காய் ஏதும் நாடகமாடாதீர்கள்.

இவைதாம் பலரும் விரும்புபவை.

ஆனால் எல்லா நேரத்திற்கும் இவ்விதிகள் பொருந்துமா என்றால் இல்லை.

இயற்கையாக இருப்பவர்களை செயற்கைத்தனங்களை வெறுத்து ஒதுக்குபவர்களை இந்த நாடக உலகம் எப்படி உற்றுநோக்குகிறது. எத்தகைய சான்றிதழை அவர்களுக்கு வழங்குகிறது என்பதையும் கணக்குப் போட்டுப் பார்க்கத்தான் வேண்டும். வசதி இல்லாவிட்டால் மதிக்காத உலகம் இது.

வாடகைக் கார் எடுத்து எங்கோ நிறுத்திக் கணக்குப் பார்த்துக் காசு கொடுத்து நடந்து போய்த் திருமண இல்லத்தில் இறங்குபவர்கள் உலகம் புரியாதவர்கள். “திருமண இல்லத்தின் வாசலில் 90 டிகிரியில் வண்டியை நிறுத்துப்பா” என்று சொல்லி ஜிங்ஜிங்கென்று இறங்கிக் கொள்ளவேண்டும்.

‘ஓ! கார்ல வந்து இறங்குற அளவு வசதி வந்துருச்சா?’ (உலகம்)

மோட்டார் சைக்கிளில் போய் இறங்கி, நிகழ்ச்சி நடக்கிற இடத்திற்கெல்லாம் ஹெல்மெட்டைக் கையில் வைத்துக் கொள்கிறவர்களுக்கு (ஓ! இன்னும் ஹெல்மெட் கேஸ்தானாநீ? உலகம்) ஒரு வார்த்தை வண்டியிலேயே வைத்து ஹெல்மெட்டைப் பூட்டுங்கள். உரியவர்கள் உங்களை, காரில் வந்திருப்பார் என்று எண்ணிக்கொள்ளட்டுமே!

தங்கச் சங்கிலிக்கு வசதி இல்லையா? இருக்கவே இருக்கிறது ஒரு கிராம் கவரிங் சங்கிலி. எவர் குறை சொல்லமுடியும் இதை?

வாயைத் திறந்து பச்சைப் பொய்களைச் சொல்லும் போலித்தனங்களைத் தவிர, சிறுசிறு அளவில் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிற செயல்களில் தவறே இல்லை.

No comments:

Post a Comment