Friday, May 7, 2010

ஒருவர் தம்மையே ‘கடவுள்’ என்று சொல்லிக் கொள்வதை உங்களால் எப்படி நம்ப முடிந்தது?


shockan.blogspot.com
மன அமைதிக்காகவும், தியானம் செய்வதற்காகவும் நான் அடிக்கடி ராம கிருஷ்ண மடத்துக்குச் செல்வதுண்டு. 2004-ம் வருடம் சென்னையில் நித்யானந்தா தியான வகுப்புகள் எடுப்பதாகக் கேள்விப்பட்டு, ஆர்வத்தின் பேரில் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். ஒரு புத்துணர்வும் மனஅமைதி யும் கிடைத்தது. அடுத்த இரண்டு வருடம் தொடர்ந்து அவரது தியான வகுப்புகளில் கலந்து கொண்டேன். இதன் மூலம் தான் எனக்கு நித்யானந்தாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 2006-ல் அவர் கேட்டுக் கொண் டதற்காக, அவருடைய ஆசிரமத்தில் சிஷ்யனாக இணைந்து கொண்டேன்" என்று சொல்லும் லெனின் கருப்பன், நித்யானந்தாவின் பேரில் புகார் கொடுத் துள்ள அவரது சிஷ்யர். நித்யானந்தாவை பெங்களூரு போலீஸார் கைது செய்திருக் கும் இச் சமயத்தில், லெனின் கருப்பனோட பேசினோம்...

நித்யானந்தாவுக்கு ஆயிரக்கணக்கான கோடி சொத்து சேர்ந்தது எப்படி?

தியான வகுப்புகளுக்கு பணம் வாங்கு வார். ஒரு பக்தர் தன் வீட்டுக்குக் கூப்பிட்டு பாதபூஜை செய்தால் 25,000 ரூபாய். வீட்டில் அவரே பூஜை செய்தால் நாலு லட்சம். வெளிநாடுகளில் டாலர் கணக்கில் கொட்டு வார்கள். தவிர, புத்தகங்கள் விற்பனை மூலம் நல்ல வசூல். முழு சொத்து விவரமும் நித்யானந்தாவின் தம்பியான கோபி என்கிற நித்யஈஸ்வரானந்தாவுக்குத்தான் தெரியும்."

நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறாரே?

(சிரிக்கிறார்). புத்தகம், சி.டி., டி.வி.டி. வெளியீட்டுப் பிரிவுக்கு நான்தான் பொறுப்பு. புரா ணங்கள், இதிகாசங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள், ரமணர், ராமகிருஷ்ணர், ஓஷோ ஆகியோர் உபதேசங் களிலிருந்து நித்யானந்தா பேசுவதற்கு பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க 200 பேர் கொண்ட குழு இருந்தது. நல்ல பேச்சாற்றல் கொண்ட நித்யானந்தா, அந்த பாயிண்டுகளைத் தொகுத்துப் பேசுவார். பின்னர் அவை புத்தகங்களாக வரும். எதுவும் அவரது ஒரிஜினல் சரக்கல்ல; அவரது தியான வகுப்புகளும் வேத, உபநிஷத்துகளை அடிப்படையாகக் கொண்டவைதான். இந்து சமயம் சொல்லாத எதையும் புதிதாக அவர் சொல்லவில்லை."

பல பிரபலங்கள் தங்கள் நோய்களை நித்யானந்தா குணமாக்கியதாகச் சொல்கிறார் களே?

கடுமையான தியானமும், யோகாவும் பல நோய்களை 50 சதவிகிதம் கட்டுப்படுத் தும். இதுதான் பலருக்கு நடந்திருக்கிறதே தவிர, நித்யானந்தாவின் ஆசியால் அல்ல; அதுவும் கை, கால், கழுத்து வலி போன்ற வைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் நிவாரணம் கிடைத்திருக்கிறது."

ஒருவர் தம்மையே ‘கடவுள்’ என்று சொல்லிக் கொள்வதை உங்களால் எப்படி நம்ப முடிந்தது?

அந்த செட்-அப்பில் நாம் அறிமுக மாகும்போதே, அவரைப் பற்றி அப்படியொரு பிரமிப்பை உருவாக்கி விடுகிறார்கள். நாம் ஆசிரம வளாகத்தில் நுழைந்து விட்டோ மென்றால், ஏதோ மூளைச்சலவை செய்யப் பட்டு, வசியம் செய்தது போல் ஆகிவிடு வோம். இது ஒரு மாயைதான். அதிலிருந்து விடுபட முடியாததால்தான், பல பெண்கள் பாலியல் கொடுமை உட்படப் பல்வேறு பிரச்னைகளில் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறார்கள்.

நித்யானந்தாவை நீங்கள் சந்தேகிக்க ஆரம்பித்தது எப்போது?

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணே என்னிடம் சொன் னார். எனக்குக் கடுமையான அதிர்ச்சி. ஒரு மாதம் பெரிய மனப்போராட்டம். அதன் பின்னர்தான், இந்த நம்பிக் கைத் துரோகியை அம் பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, உயிரைப் பணயம் வைத்து காமிரா வில் படம் எடுக்க ஏற்பாடு செய்தேன். சாதாரணமாக நித்யா னந்தா இருக்கும் அறைக்குள் யாரும் நுழைய முடியாது. ஏழு கட்ட பாது காப்பு உண்டு. ஆசி ரமத்தில் முப்பத் தெட்டு அறைகள். ஒன்றுக்கொன்று தொடர்பு கிடையாது. நித்யானந்தா தங்கியிருக் கும் கட்டடத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. இனி எந்தப் பெண்ணும் நித்யா னந்தாவால் பாதிக்கப்படக்கூடாது" என்ற எண்ணத்தில் துணிந்து செயல்பட்டேன். இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் களும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பெண்களும் அவரால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள்.

அப்படியானால் இவரால் பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் ஏன் புகார் கொடுக்கவில்லை?

மீடியா இந்த விவ காரத்தை நாறடிக்கும் என்பதால் பயப்படுகிறார் கள். அது தவிர, ஆசிரம பிரம்மச்சாரிகளிடம், சில தாந்த்ரீகங்களைத் தெரிந்து கொள்ளப் பாலியல் தொடர்புகள் நடைமுறைப்படுத்தப் படும். அவற்றை வெளியில் சொல்லக் கூடாது" என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பயந்த நிலை முன்பு இருந்தது."

சட்டப்படி நித்யானந்தா பேரில் நடவடிக்கை எடுக்க முடியுமா? அதற்கு இடம் இருக்கிறதா?

அவர் இனி தப்ப முடியாது. கர்நாடகக் காவல் துறை முத லில் கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருந்தது. இப் போது கைது செய்த பின் சரியான திசை யில் விசாரணை போகிறது."

No comments:

Post a Comment