Sunday, May 9, 2010

நிரா ராடியா விவகாரம்!


shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... பூகம்பம் முடிஞ்சபிறகும் சின்னச் சின்ன நிலஅதிர்வுகள் ஏற்படுற மாதிரி, மழைவிட்டும் தூவானம் விடாத மாதிரி கலைஞரின் டெல்லி விசிட் வெற்றிகரமா முடிஞ்சபிறகும் மீடியாக்களில் பரபரப்பு ஓயலை.''

""மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பற்றியும், அழகிரி விவகாரம், சட்டமன்றத் தேர்தல் பற்றியும் நேஷனல் பத்திரி கைகளில் செய்தி வந்துக்கிட் டேதானே இருக்குது.''

""மத்திய அமைச்சர் ஆ.ராசா வும் நிரா ராடியாங்கிற பெண்மணியும் செல்போனில் பேசிய விஷயம் பற்றி பயனீர் பத்திரிகை எழுதி பரபரப்பை உண்டாக்கியது. இப்ப அந்தப் பேச்சுவிவரங்களை ஹெட்லைன்ஸ் டுடே சேனல் திடீர்னு ஒளிபரப் பியது.''

""அதில் ஸ்பெக்ட்ரம் சம்பந்தமா எதுவுமில்லையே... 2009-ல் மத்திய அமைச்சரவை அமைக்கப் படும்போது யார், யாருக்கு என்ன பதவிங்கிறது சம்பந்தமான பேச்சுகள் தானே இருந்தது.''


""ஆமாங்க தலைவரே... யார் இந்த நிரா ராடியாங்கிற பரபரப்பு மேல்மட்டம் வரை இருந்ததால் அது சம்பந்தமா விசாரித்தேன். டாடா நிறுவனத்தின் பி.ஆர்.ஓ.வான நிரா ராடியா அரசு வட்டாரத்தில் செல்வாக்குள்ள லேடி. பல டீலிங்குகளில் சம்பந்தப்பட்டவர் என்கிறதால 3 வருஷமா இவரோட போனை வருமானவரித் துறையினர் டேப் பண்ணுறாங்க. யார் யார்கிட்ட பேசினாருங்கிற விவரம் வெளியானதில் ராசா, கனிமொழி ஆகியோரோடு நிரா ராடியா பேசிய விபரங்கள் தெரிய வந்தது, இன்னும் பல மந்திரிகளோடும் நிரா ராடியா பேசியிருக்கிறார்.''

""ராசாவோடு ராடியா பேசியது சம்பந்தமா ஜெ. ஏற்கனவே அறிக்கை விட்டிருந்தாரே?''

""இன்னும் பல மணி நேரத்துக்கான உரையாடல்கள் டேப் ஆகியிருப்பதாகவும், அதையும் பார்ட் பார்ட்டா ரிலீஸ் செய்வோம்னு விஷயத்தை ஒளிபரப்பிய சேனல் தரப்பு சொல்லுது. ஆனால், உரையாடலில் சம்பந்தப்பட்டவங்களோ, அரசியல்ரீதியான இந்த பேச்சுக்களைத் தவிர நிரா ராடியாவோடு வேறு எதுவும் பேசலைன்னு உறுதியா சொல்றாங்க.''

""டெல்லி சந்திப்புகளின்போது ஆ.ராசா விவகாரம் பற்றி பேசப்பட்டதா செய்திகள் வெளியாகுதே?''

""தலைநகர காங்கிரஸ் வட்டாரத்தில் பேசுனேங்க தலைவரே... .. .. சோனியாகாந்தியை கலைஞர் சந்தித்தப்ப ராசாவுக்கு ஆதரவான குரல்தான் சோனியாவிடமிருந்தே வெளிப்பட்டிருக்குது. தொலைத்தொடர்ப்புத்துறை சம்பந்தமா சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் எந்த முறைகேடும் நடக்கலைன்னுதான் எங்களுக்கு ரிப்போர்ட் வந்திருக்குதுன்னு கலைஞரிடம் சொன்ன சோனியா, ராசா சொந்தக்காரங்க நடத்தும் நிறுவனங்கள் சம்பந்தமான விவகாரத்திலும் எந்த முறைகேடும் இல்லை. எதிர்க்கட்சிகள்தான் பரபரப்புக்காக ராசா விஷயத்தை பார்லி மெண்ட்டில் விடாமல் கிளப்பிக்கிட்டே இருக்குது. இது ஒரு இஷ்யூவே இல்லைன்னு சொன்னாராம். அப்ப கலைஞர், தலித் சமுதாயத்திலிருந்து வளர்ந்து வரும் இளைஞரா ஆ.ராசா இருப்பதால அவரோட வளர்ச்சியைப் பிடிக்காத ஆதிக்க சக்திகள் இப்படி அவதூறுகளைப் பரப்புதுன்னு சொல்லி யிருக்காரு.''

""மீடியாக்கள்கிட்டேயும் இதே கருத்தைத்தான் கலைஞர் சொன்னாருப்பா!''

""பிரதமரை சந்தித்தப்பவும் இந்தக் கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார் கலைஞர். சி.பி.ஐ விசாரணையில் ராசா மீது எந்தக் குற்றச்சாட்டும் வைக்கப்பட லைன்னு சொன்ன பிரதமர், நானும் பிரதமர் அலுவலகமும் எங்க மினிஸ்டர் பக்கம்தான் நிற்போம். வீண் பரபரப்புகளைக் கண்டுக்க வேண்டியதில் லைன்னு சொல்லிட்டாராம்.''

""அழகிரி விவகாரமா என்ன பேசப்பட்டதாம்?''

""மத்திய அமைச்சரான அழகிரி, பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் கலந்துக்க ணும்ங்கிறதுதான் பிரதமரோட வலியுறுத்தல். அழகிரி தமிழி லேயே பேசலாம்.. அது ஒரு விஷயமா.. கூட்டத் தொட ருக்கு வரணும். அவ்வளவு தான்னு கலைஞரிடம் பிரதமர் சொன்னாராம். அழகிரி கிட்டேயும் மனமாற்றம் ஏற் பட்டிருப்பதா அவரோட வட்டாரம் சொல்லுது. டெல்லியில் கலைஞருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கிடைத்த மரியாதையைப் பார்த்துட்டு, அப்பாவுக்கு உள்ள செல்வாக்கை உணர்ந்த அழகிரி, நான் இங்கேயே இருந்து வேலைகளை கவனிக்கிறேம்ப்பா.. இந்தியா முழுக்க என் துறையில் உள்ள பிரச்சினைகளை சரிபண்றேன். இனிமே பாருங்க.. இந்தியாவே பாராட்டுற அளவுக்கு என் செயல்பாடுகள் இருக்கும்னு உறுதிமொழி கொடுத்திருக்காரு. நல்லா பண்ணுப்பா.. இதுதானே வேணும்னு கலைஞரும் சொல்லியிருக்காரு.''

""ம்...''

""பர்சனல் ட்ரிப்பா அமெரிக்கா வுக்குப் போறாரு அழகிரி. அது முடிஞ்சு வந்ததும், தன்னோட துறை சம்பந்தப் பட்ட பணிகளில் ரொம்ப மும்முரமா இருப்பாருன்னு எதிர்பார்க்கப்படுது. ஸ்பிக் உரத் தொழிற்சாலையை மீண்டும் திறக்கப்போவதா ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தார். அங்கே மிஷின் ரெடியாகாததால திறப்புவிழா தள்ளிப் போகுது. அந்த மிஷினை சீக்கிரம் ரெடிபண்ணச் சொல்லி திறப்புவிழாவை நடத்த ணும்னு அழகிரி வேகப்படுத்திக்கிட்டிருக்காரு.''

""தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துறது பற்றியும் டெல்லியில் கலைஞர் ஆலோசித்ததா செய்திகள் கசிந்ததே?''

""அது சம்பந்தமா எதுவும் பேசலைங்கிறதுதான் டெல்லி வட்டாரத்திலிருந்து கிடைக்கிற உறுதியான தகவல். இப்ப தேர்தலை முன்கூட்டியே நடத்துறதுக்கான அவசியம் எதுவுமில்லைன்னு கலைஞர் நினைப்பதால் அந்த சப்ஜெக்ட் பற்றி எதுவும் பேசலையாம். ராஜ்யசபாவில் காலியாகும் 6 இடங்கள் சம்பந்தமாகத்தான் தமிழக அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்துக்கிட்டிருக்குது.''

""ஜூன் 11-ல் ராஜ்யசபா எம்.பி. தேர்தல்னு அறிவிக்கப் பட்டிருக்குதே?''

""ஆமாங்க தலைவரே... ... தமிழக சட்டமன்றத்தில் 234 எம்.எல்.ஏ.க்களோடு 1 நியமன எம்.எல்.ஏ.வையும் சேர்த்து 235 பேர். தி.மு.க.வில் சபாநாயகரையும் சேர்த்து 100 ஓட்டு இருக் குது. காங்கிரசுக்கு 36, விடுதலைச் சிறுத்தைகள் கணக்கில் 2, எக்கட்சியையும் சாராத எஸ்.வி.சேகர், நியமன எம்.எல்.ஏன்னு உதிரி ஓட்டுகளும் தி.மு.க. கூட்டணி பக்கம் இருக்குது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு வேணும். தி.மு.க.வுக்கு 2 எம்.பி. சீட் கிடைச்சிடும். இதற்கான 68 எம்.எல்.ஏ.க்கள் போக மீதி 32 பேர் இருக்காங்க. இவங்களோடு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு சேர்ந்தாலே மூணாவது எம்.பி.யும் தி.மு.க.வுக்கே கிடைக்க வாய்ப்பிருக்குது. காங்கிரசுக்கு 1 எம்.பி. சீட் உறுதி.''

""ஆக... தி.மு.க கூட்டணிக்கு 4 எம்.பின்னு சொல்லு!''

""ஆமாங்க தலைவரே.. ஆனா, காங்கிரசில் 2 எம்.பிக்கள் வேணும்ங்கிற எதிர்பார்ப்பு இருக்குது. அதாவது தி.மு.க.வுக்கு வாய்ப்புள்ள 3-வது எம்.பியை தங்கள் கட்சிக்குத் தரணும்னு நினைக்கிறாங்க. இதற்கிடையில் பா.ம.க. விடம் 18 எம்.எல்.ஏக்கள் இருப்பதால், தி.மு.க தயவோடு அன்புமணியை மறுபடியும் ராஜ்யசபா எம்.பி.யாக்கிடணும்னு தைலாபுரம் தோட்டம் கணக்கு போடுது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தப்ப தி.மு.கவை கடுமையா விமர்சித்த பா.ம.க, இப்ப சட்டமன்றத்தில் தி.மு.கவுக்கு ஆதரவா போடுற ஜால்ரா சத்தத்தைக் கேட்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே ஆச்சரியப்படு றாங்க. எல்லாம் எம்.பி. பதவியை மனசிலே வைத்துதான்.''

""டெல்லியில் கலைஞர் பேட்டி கொடுக்குறப்ப, பா.ம.கவுக்கு எம்.பி. சீட் தருவது சம்பந்தமா காங்கிரசிடம் எதுவும் பேசலைன்னு சொல்லி யிருந்தாரே?''

""ஆனாலும் பா.ம.க. தரப்பில் முயற்சிகள் தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்குது. கலைஞரை ராமதாசும் அவரோட மனைவியும் சந்திக்க விரும்புறாங்க. அப்பாயிண்ட் மெண்ட் கிடைக்கலை. சித்ரா பவுர்ணமி யன்னைக்கு நடந்த பா.ம.க மாநாட்டில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் தலைமையில் கலைஞரை சந்தித்து மனு கொடுப்பதுன்னு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்குது. முன்னாள் மத்திய இணை யமைச்சர் வேலுவும் கோ.க.மணியும் கலைஞரை சந்தித்து, எங்க அய்யா, ராஜ்யசபா சீட் எதிர்பார்க்குறார்னு சொல்லியிருக்காங்க. கலைஞரோ, பென்னா கரம் இடைத்தேர்தலில் என்னை அவர் ரொம்ப தரக்குறைவா பேசியதால கட்சித் தொண்டர்கள் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்காங்கன்னு சொல்ல, அது தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சு. மனசிலே வச்சுக்க வேணாம்னு சொன்னாங்களாம்.''

""அடுத்த தகவல்?''

""தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைப்பது தொடர்பான மசோதா புதன்கிழமையன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது. மறுநாள் லோக்சபாவில் மசோதா நிறைவேறும் நேரத்தில், இங்கே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முடித்துவிட்டு டி.வி. முன் உட்கார்ந்த கலைஞர், எப்போது மசோதா நிறைவேறும், ஏன் லேட்டாகுதுன்னு கேட்டுக்கிட்டே இருந்தார். லோக்சபாவில் நிறைவேறியதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்று, தமிழகத்தில் மேலவை அமையும்.''

""செம்மொழி மாநாட்டுக்காக கலைஞர் எழுதிய பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் பாடல் பதிவையும் முடித்துவிட்டார். நாட்டுப்புறப் பாட்டுக்கலைஞர்களான கே.ஏ.குணசேகரன், சின்னப்பொண்ணு, நாகூரைச் சேர்ந்த 3 சூஃபி இசைப் பாடகர்கள் இவங்களோடு அருணாசாய்ராம், நித்யஸ்ரீ, ஜெயஸ்ரீ உள்ளிட்ட கர்நாடக இசைக் கலைஞர்களும், டி.எம்.எஸ்-சுசீலா என சினிமா ஜாம்பவான்களும் இந்தப் பாட்டுக்கு குரல் கொடுத்திருக்காங்க. எல்லாத்துக்கும் ஹைலைட்டா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து யுவன் சங்கர் ராஜாவும் கலைஞரின் செம்மொழிப் பாடலை பாடியிருப்பதால, வந்தேமாதரம் போல இதுவும் ரொம்ப எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்குது.''

""நான் வேற ஏரியாவிலிருந்து வேற மாதிரி யான ஒரு தகவலைச் சொல்றேன்... உலக அதிசயத்தின் பெயரில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத் தடுப்புபிரிவு போலீசார் ரெய்டு நடத்தினப்ப, 3 பேர் சிக்குனாங்க. மாட்டிக்கிட்டதால அவங்க எதுவும் பேசலை. மூணுபேரையும் ரிமாண்ட் பண்ணிட்டாங்க. அதற்கப்புறம் பெயிலில் வெளியே வந்தப்ப தான், இவங்களா அவங்கன்னு அவங்களுக்கு வேண்டியவங்க ஷாக்காயிட்டாங்க. தேசிய கட்சியின் மாநிலத் தலைவரோட கார் டிரை வர், பி.ஏ, தலைவரோடு எல்லா இடத்துக்கும் கூடவே போகிறவர் இந்த 3 பேரும்தான் அந்த 3 பேர்.''

No comments:

Post a Comment