Sunday, May 9, 2010

சிங்கம் சீக்கிரம் வருவதன் பின்னணி! விஜய் படங்களிலேயே இதுவரை காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது சுறா


shockan.blogspot.com
விஜய் படங்களிலேயே இதுவரை காணாத படுதோல்வியைச் சந்தித்துள்ளது சுறா. படம் வெளியான நான்காவது நாளே திரையரங்குகள் வெறிச்சோட, விநியோகஸ்தர்கள் கை பிசைய ஆரம்பித்துவிட்டனர்.

இதுவே ரஜினி படமாக இருந்தால், இந்நேரம் கொடி பிடித்து கோஷம் போட்டு உண்ணாவிரதம் இருந்து ஊரைக் கூட்டியிருப்பார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும். அவரும் பணத்தை திருப்பிக் கொடுத்து அனுப்பியிருப்பார்.

ஆனால் சன் பிக்சர்ஸ் படம்... பகைத்துக் கொள்ள முடியாதே... அதனால் பவ்யமாக நிலைமையை எடுத்துச் சொன்னார்களாம். பல திரையரங்குகளில் இந்த வாரத்தோடு சுறாவை தூக்கிவிட்டு வேறுபடம் திரையிடும் முடிவைச் சொல்ல, 'கொஞ்சம் பொறுங்கள்.. சிங்கம் படத்தைத் தருகிறோம்' என்று கூறியுள்ளது சன் பிக்சர்ஸ்.

திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது மே 28-ம் தேதியே சிங்கத்தை ரிலீஸ் செய்வதன் பின்னணி இதுதான் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு. அதே நேரம், 'சிங்கம் படத்தை ரிலீஸ் செய்வது ஓகே... ஆனால் இன்னும் ஒரு வாரம் முன்கூட்டி ரிலீஸ் பண்ணால், எங்கள் நஷ்டத்தின் அளவாவது குறையுமே!' என்று அங்கலாய்க்கிறார்கள்.

ஆனால் விஜய்யோ, இந்த உண்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல், 'விமர்சனம் பத்திக் கவலையில்ல... என் படம் பிரமாதமா போகிறதாக்கும்' என்று ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்!

No comments:

Post a Comment