Sunday, May 9, 2010

வேண்டாம் கமல் படம்.. சின்னப் படமே போதும்! - மிஷ்கின்


shockan.blogspot.com
கமல் ஆபீஸுக்குப் போனதையே பயங்கர பில்டப்போடு சொல்லி வரும் இயக்குநர்களுக்கு மத்தியில், மூன்று மாதம் தனி ரூம் எடுத்து கமலுக்காக ஸ்கிரிப்ட் எழுதிய ஒருவர் 'வேண்டாம் கமல் படம்..' என்று சொல்கிறார் என்றால்....? ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

உன்னைப் போல் ஒருவன் படத்துக்குப் பிறகு கமல் படத்தை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் கமல் டிக் பண்ண பெயர் மிஷ்கின்.

இருவரும் நிறைய டிஸ்கஸ் பண்ணி, கடைசியில் புத்தர் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பீரியட் படம் பண்ணப்போவதாக பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று கமலின் அடுத்த படம் உதயநிதிக்காக என்றும், அதை இயக்குபவர் கமலின் ஆஸ்தான இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்துக்கு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியெனில் மிஷ்கின்? அவரை செட்டில் செய்து அனுப்பிவிட்டார் கமல் என்றார்கள்.

இந்த நிலையில்தான் யுத்தம் படத்தை சேரனை வைத்து ஆரம்பித்துள்ள மிஷ்கின், இதனை வெற்றிப் படமாக்கும் வெறியில் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரம் பார்த்து அவரிடம் ஒரு பிரபல பத்திரிகை பேட்டிக்குப்போய், கமல் படம் என்னாச்சு என்று கொளுத்திப்போட, 'அது போயே போச்சு... நான் இப்போ ஹேப்பியா இருக்கேன். நிம்மதியா சின்ன படம் பண்றேன். இதுவே போதும்' என மனக்குமுறலை நாகரீகமாக் கொட்டியுள்ளார்.

'விளக்கமாக சொல்லலாமே' என மிஷ்கினைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

'இதற்கெல்லாம் எதுக்கு விளக்கம். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. அதே நேரம் அந்தப் படம் பண்ணாதது நல்லதுதான்.. இது போதும்னு நெனக்கிறேன்' என்றார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம், இப்போது கமலுக்காக கதை சொன்னேன் என்று சொல்ல ஆரம்பித்துள்ளார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்!

No comments:

Post a Comment