Tuesday, May 11, 2010

மிகமிக ரகசியமாக பயண ஏற்பாடுகள்: அமேதியில் ராகுல் காந்தியுடன் பில்கேட்ஸ் இன்று திடீர் விசிட்


shockan.blogspot.com
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் அவருடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இன்று திடீர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தலித் விவசாயி வீட்டுக்கு ராகுலுடன் பில்கேட்சும் செல்கிறார். பயண ஏற்பாடுகள் அனைத்தும் மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தலித் விவசாயிகளின் வீட்டில் தங்குவது, சாப்பிடுவது, இரவில் அவர்கள் வீட்டில் கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்குவது ஆகியவற்றை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டில் இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் முல்பாண்டுடன் அமேதி தொகுதியில் ஒரு தலித் வீட்டில் தங்கினார்.
அதேபோல தற்போது உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சை கிராமத்துக்கு இன்று அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment