Wednesday, May 12, 2010

நித்யானந்தாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிரமம்


shockan.blogspot.com
சாமியார் நித்யானந்தாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது. பாதுகாப்பு கருதி, அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில்லை என்று, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சாமியார் நித்யானந்தா, பல கட்ட விசாரணைக்கு பின், ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது. இந்த வழக்கு, இன்று மாலை 3 மணிக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ஹூன்குந்த் விசாரிக்கிறார்.



கர்நாடகாவில் இன்று இரண்டாவது கட்ட கிராம ஊராட்சி தேர்தல் நடந்து வருவதால், சாமியார் நித்யானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு இல்லையென, ராம்நகர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே, சாமியார் நித்யானந்தாவை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமாட்டார்கள் என தெரிகிறது. அவரது சார்பில் அவரது வக்கீல் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இவ்வழக்கில் முக்கிய சாட்சியான நடிகை ரஞ்சிதா, இன்னும் சி.ஐ.டி., போலீசாரிடம் ஆஜராகாததால், சாமியார் நித்யானந்தாவுக்கு, 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வேண்டும் என, சி.ஐ.டி., போலீசார் கேட்க உள்ளனர்.

No comments:

Post a Comment