Monday, May 24, 2010
அஜீத்தின் 50வது பட இயக்குநர் யார்? குழப்பத்தில் ரசிகர்கள்!
shockan.blogspot.com
தயாநிதி அழகிரி தயாரிக்கும் அஜீத்தின் 50வது படத்தை கவுதம் மேனன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அதில் ஒரு கல்லை விட்டெறிந்துள்ளார் கவுதம் மேனன்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், அஜீத்தின் படத்தை நான் இயக்குகிறேனா இல்லையா என்பதை அவரிடம்தான் (அஜீத்) கேட்க வேண்டும். காரணம் இந்தப் படத்தின் இயக்குநர் நான் என்று அறிவிக்கப்பட்டதோடு சரி. இதுவரை அஜீத்தோ, மற்ற யாருமே என்னிடம் இதுகுறித்துப் பேசவில்லை.
இப்போதைக்கு என் கைவசம் இரு படங்கள் உள்ளன. விண்ணைத் தாண்டி வருவாயா இந்திப் படத்தை இயக்குகிறேன். இதிலும் த்ரிஷா நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் படம்
ஒன்றையும் இயக்கவிருக்கிறேன்" என்றார்.
ஏற்கெனவே சிவாஜி பிலிம்சுக்காக அஜீத்தும் கவுதம் மேனனும் இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் ட்ராப்பானது. அதன்பிறகுதான் அசல் படத்தை இயக்கினார் சரண்.
இந்த முறையும் அப்படி நடந்து விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment