Saturday, May 15, 2010

என் விருப்பம் போல் கலைஞரை இயக்கினேன்: கௌதம் மேனன்


shockan.blogspot.com
தமிழக முதல்வர் கருணாநிதி எழுதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடலுக்கான ஒலி ஒளி குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் முதல் முறையாக இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் கிராமி விருது பெற்றதற்கான பாராட்டுவிழா சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைப்பெற்றது.



இந்த விழாவில் பேசிய செம்மொழி மாநாடுப் பாடலை இயக்கிய கௌதம் மேனன் பேசுகையில்,



கலைஞர் இயற்றி பாடலை, ரகுமான் இசையமைத்து அதை நான் இயக்கியது என்பது மிகப்பெரிய சந்தோஷம். டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை அனைவரையும் ரகுமான் பாட வைத்தார். அதேபோல் நானும் டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை அனைவரையும் இந்தப் பாடலில் காட்டியிருக்கிறேன். பாடலுக்கு இசையமைத்த ரகுமானை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அவரையும் காட்டிவிட்டேன்.



மிகப்பெரிய கனவு. கலைஞரை அவரது அலுவத்தில் இருப்பது போன்று படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரும் சம்மதித்தார். எங்களுடைய சினிமா வரலாற்றில் ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லுவார்கள். கலைஞரும் அப்படித்தான். என் விருப்பம் போல் நான் அவரை இயக்கினேன். அவரும் ஒரே டேக்கில் நடித்து முடித்து கிளம்பிவிட்டார்.



இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கனிமொழி அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment