Saturday, May 15, 2010

ஜெயா டிவி நிகழ்ச்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்


shockan.blogspot.com
கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜெயா டிவியில் ஜாக்பாக்ட் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை குஷ்பு.

இவர் நேற்று முன் தினம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஜாக்பாக்ட் நிகழ்ச்சியினர், ‘’தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.

திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.

அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை’’என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment