Tuesday, May 25, 2010

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?


shockan.blogspot.com

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!

இப்போது விருதகிரி எனும் படத்தை இயக்கி நடித்துவரும் விஜயகாந்த், அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்கிறாராம். அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் எம்ஜிஆரின் இந்தப் படத்தில் நடித்து வெளியிட்டால், எம்ஜிஆரின் தொண்டர்களின் மனதைக் கவரலாம் எனக் கணக்குப் போட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏற்கெனவே தன்னை கறுப்பு எம்ஜிஆர் என்று தனது ரசிகர்கள் அழைப்பதை அமைதியாக அனுமதித்தவர் விஜயகாந்த். அடுத்து கருப்புக் கண்ணாடியும், தொப்பியும் அணிவது மட்டும்தான் பாக்கி, என்கிறார்கள் விமர்சகர்கள்!

No comments:

Post a Comment