Wednesday, May 19, 2010
மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை!
shockan.blogspot.com
ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர்.
2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்'' என்கிறார்.
உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திரிகோண மலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரி விக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில் படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.
விடியற்காலை நேரத்தில் திரிகோண மலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டிய னை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணு வத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல் கிறது. உள்ளே இருந்த இளை ஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர் களும் பதிலளித்துக் கொண்டே பயணிக் கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ""அது எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. இறங் கியவுடன், "வாருங்கோ..' என்றபடி என்னை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தி யான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர் கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச் சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது '' என்கிறார்.
காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனதைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்ட வர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது. அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்த படியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்பு களில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப் பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையி லேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.
""நீங்க எங்களை மன்னிக் கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்'' என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ""ரொம்ப நன்றிங்க அய்யா... ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்'' என்கிறார்கள் புலிகள்.
பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியி லேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ""தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ'' என்கிறார் ஒரு புலி. ""சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்'' என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ""எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது'' என்கிறார்கள் புலிகள்.
அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார் கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டி யனை நோக்கி வேகமாகவும் கம்பீர மாகவும் வருகிறது அந்த உருவம்.
நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக் கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ""வாருங்கோ... வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்'' என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.
புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளை கள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.
2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது. முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப் போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.
பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ""யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்.
எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.
செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்து வது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்கு வது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல் படுவோம்.
சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்'' என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரி கையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment