Wednesday, May 19, 2010

Sex டார்ச்சர்! நடிகை Statement





விபச்சார வழக்கு... தொழிலதிபரை பிளாக்மெயில் செய்தது... என சிறை வாசம் அனுபவித்த நடிகை பத்மா நாராயணன் விடுதலையாகி விட்டார்.

"வீராச்சாமி' படத்தில் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடலிங் மங்கை... "பத்து பத்து', "உனது விழியிலே' படங்களில் நடித்தவர்.

கும்பகோணம் அப்பா, குஜராத் அம்மாவின் கூட்டுத் தயாரிப்பான பத்மா இப்போது லஸ்யா என பெயர் மாறியிருக்கிறார்.

"புழல்', "மன உறுதி', "ஏழுச்சாமி', "7-ஆவது நாள்' படங்களில் நடித்து வரும் லஸ்யாவின் வாக்குமூலம் இதோ...





""பணம், பதவி இரண்டும் கொண்ட ஒரு பெரிய மனிதனின் ஆசை வார்த்தை களை நம்பி, "உண்மையாக என்மீது அன்பு கொண்டவர்' என்று எண்ணி அவரோடு பழகத் தொடங்கினேன். அவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை அறியாமல் உண்மையான நேசத்தோடு பழகிய என்னை சரியான நேரத்தில் வஞ்சித்தார் அந்தப் பெரிய மனிதர். சூதுவாது- கள்ளம் கபடம் ஏதுமே இன்றி, அதுவரை துன்பத்தின் நிழல்கூட அறியாமல் வாழ்ந்த என்னை சகதியில் தள்ளத் திட்டமிட்டார். அந்தப் பெரிய மனிதர் என்னுடைய இளமை, அழகு, உடல் சுகம் இதற்காகவே என்னோடு பழகினார் என்பதை அறிந்தபோது நான் அதிர்ந்தேன். நீ ஒரு சினிமாக்காரிதானே! நீ என்றுமே என்னுடைய காம இச்சையைத் தணிக்கும் கருவியாகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த மனிதர் கேவலமாகச் சொன்னபோது நான் துடித்து விட்டேன். அவரது உண்மையான முகம் தெரிந்து இடி விழுந்ததுபோல் ஆனேன். "உன்னுடைய உறவே தேவையில்லை' என்று தூக்கி எறிந்துவிட்டு வந்தேன்.

கொஞ்ச நாட்கள்தான். மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு, "நான் பேசியது, நடந்து கொண்டது எல்லாமே தவறுதான்' என்று சொல்லி என்னிடம் மன்னிப்பு கேட்டார் அந்தப் பெரிய மனிதர். அதை உண்மை என்று நம்பி மீண்டும் அவரோடு பழகத் தொடங்கினேன். ஆனால் "இவளைப் பழி வாங்க வேண்டும்' என்று மனதில் வைத்துக் கொண்டு வெளியே நல்லவர் போல நடந்து கொண்டார் என்பதை நான் உணரவில்லை. ஒரு நாள் பர்த்டே பார்ட்டி என்று சொல்லி நல்லபடியாகப் பேசி என்னை வரவழைத்து, அதன்பின் டின்னர் என்று கூறி அறைக்குள் அழைத்துச் சென்று நானும் அவரும் பழகிய நாட்களில் திருட்டுத்தனமாக எடுத்த சில புகைப்படங்களை லாப்-டாப்பில் போட்டுக் காண்பித்தார். நானும் அவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. "இனி வாழ்நாள் முழுவதும் என் ஆசைநாயகியாக இருந்தே தீர வேண்டும்! மறுத்தால் இந்தப் புகைப்படங்களை எடுத்து இன்டர்நெட்டில் அனுப்பி விடுவேன். உன் மானம் போய் விடும். உன் பெற்றோரும் தற்கொலை செய்து கொள்வார்கள்' என்று பச்சையாக பிளாக்மெயில் செய்தார். அதைக் கேட்டவுடன் மரண அடி விழுந்ததுபோல் அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும் அவரின் மிரட்டலுக்குப் பயந்து அவரிடம் மண்டியிட என் மனம் ஒப்பவில்லை. "நீயும் ஒரு மனிதனா?' என்று கோபமாகப் பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறி னேன். பிறகுதான் எனக்கு சோதனை ஆரம்ப மானது. போனில் தொடர்ந்து மிரட்டல் வந்த படியே இருந்தது. அதையே நான் இன்னொரு போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டேன். அந்த புத்திசாலித்தனமான காரியம்தான் எனக்கு ஆதரவான சாட்சியாக மாறி அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க, அவர் செய்த சூழ்ச்சிகளை முறியடிக்க பின்னால் எனக்கு உதவியது.





அவர் என்மீது கூறிய பொய் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால், வழக்கை தொடர்ந்து நடத்தினால் பல வருடங்கள் கம்பி எண்ண வேண்டும் என்று பயந்து, தானே தனது குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று அவமானத்துடன் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து 27-7-2009 அன்று வழக்கிலிருந்து விடுதலை ஆனேன். நான் குற்றமற்றவள் என்று கோர்ட் ஆர்டரை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். "பாட்ஷா' படத்தில் ரஜினி சார் ஒரு வசனம் சொல்வார். ""நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார்; ஆனால் கைவிட மாட்டார்' என்று அதற்கு நான்தான் சரியான உதாரணம். கடந்த ஆறு மாதங்களாக மன வேதனையாலும் அழுத்தத்தாலும் வெளி உலகில் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மெல்ல மெல்ல எனக்கு நானே ஆறுதல்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெற்றேன்.

இப்போது நிறைய்ய படங்களில் நடித்து வருகிறேன். கவர்ச்சி நடிப்பின் மூலம் நமீதாபோல் நானும் புகழ் பெறுவேன்'' எனச் சொல்லி முடித்தார் லஸ்யா!

ஹி... ஹி... நீச்சல் ட்ரெஸ்ல நடிப்பீங்களா?

""டபுள் பீஸ்... நோ... நோ...!

சிங்கிள் பீஸ்... ஓ.கே.!''

No comments:

Post a Comment