Wednesday, May 19, 2010
பொதுத் தேர்தல் டிரெய்லர்!
shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... ஈழ மண்ணில் நடந்த அந்தக் கொடூரம் ஓராண்டுக்குப் பிறகும் உண்மையான தமிழர்களின் இதயத்தில் வலியை உண்டாக்கிட்டிருக்குது.''
""2009 மே 17, 18 தேதிகளில் ராஜபக்சே அரசாங்கம் கொத்துக்குண்டுகளை வீசி, 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களைக் கொன்று, குற்றுயிராய்க் கிடந்தவர்கள் மேலே புல்டோசரை ஏற்றி சாகடித்து, மொத்தமாகப் புதைத்த கொடூரம் ஹிட்லர் ஆட்சியிலும் நடந்ததில்லையே!''
""அந்தக் கொடூர நினைவுகளின் முதலாமாண்டு நிறைவு நாளில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்டன முழக்கம் எழுப்பினாங்க. தமிழகத்தில் பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், பெரியார் இயக்கங்கள், நாம் தமிழர் இயக்கம் போன்ற கட்சிகளும், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட மே 17 இயக்கம், ஐ.டி. துறையில் பணியாற்றுவோர் உருவாக்கிய சேவ் தமிழ்ஸ் இயக்கம் எல்லாரும் பல வகைகளிலும் கண்டனத்தையும் கண்ணீரையும் பதிவு செய்தாங்க. மே 17, 18 தேதிகளை போர்க் குற்ற நாளாகவும், இலங்கையை இனப்படு கொலை நாடாகவும் சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும்ங்கிறதுதான் இவங்களோட கோரிக்கை.''
""தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள், தேர்தல் களத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்குது. மாஜி மந்திரி ராஜகண்ணப்பன் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் வீட்டுக் கல்யாணத்தை நடத்திய ஜெ., தேர்தலுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் தயாரா இருக்கணும்னு சொன்னார். தேர்தல் தொடர்பா ஆலோசிப்பதற்காக 27-ந் தேதி செயற்குழு கூட்டத்தையும் ஜெ. கூட்டுறார். பொதுத்தேர்தலில் எந்தக் கூட்டணியில் யார் இருப்பாங்கங்கிறதுக்கு ராஜ்யசபா தேர்தல் ஒரு ட்ரெய்லரா இருக்கும்ங்கிறது அரசியல் வல்லுநர்களோட எதிர்பார்ப்பு.''
""ஆமாங்க தலைவரே... .. சென்னையில் உள்ள பல கிளப்புகளில் இப்ப ஹாட்டா பந்தயம் கட்டுறது இந்த விஷயத்துக்காகத்தான். பா.ம.க. அன்புமணிக்கு கலைஞர் சீட் கொடுப்பாரா, மாட்டாரான்னு எக்கச்சக்க பேர் பணம் கட்டியிருக் காங்களாம். வைகோவுக்கு ஜெ. சீட் கொடுப்பாராங்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும் அதற்கு யாரும் அதிகளவில் பந்தயம் கட்டலையாம். வைகோவும் சரி, தா.பாண்டியனும் சரி, தங்களுக்கு நிச்சயம் ஜெ. சீட் தரு வாருன்னு நம்பிக்கையா இருக்காங்க. ஆனா, ஜெ. இதுதொடர்பா இதுவரைக்கும் இவங்ககிட்டேயும் பேசலை, தன்னோட கட்சி நிர்வாகி கள்கிட்டேயும் பேசலை. தருவாரா, மாட்டாரான்னு தெரியாம கூட்டணிக் கட்சிகள் தவிக்குது. நேரில் சந்தித்து கேட்பதற்கு வைகோவும் தா.பா.வும் தயங்குறாங்களாம்.''
""ராஜ்யசபா தேர்தல் விஷயத்தில் தி.மு.க.வில் என்ன நிலைமை?''
""தி.மு.க.வுக்கு புது வரவான நடிகை குஷ்புவுக்கு ராஜ்யசபா சீட்டுன்னு பேச்சு அடிபட்டது. தி.மு.க. தலைமையிடமிருந்து அப்படி எந்த உத்தரவாதமும் கொடுக்கப் படலையாம். ஆனா, குஷ்புவுக்கு இந்தி, இங்கிலீஷ் இரண்டு மொழிகளும் அத்துப்படிங்கிறதால அவருக்கு ராஜ்யசபா சீட் தரப்படலாம்னு குஷ்புவின் நட்பு வட்டாரம் நம்பிக்கையோடு எதிர்பார்க்குது.''
""பா.ம.க.வின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எந்த அளவில் இருக்குது?''
""பா.ம.க.வினர் அடிக்கடி கலைஞரை சந்திச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. அவரைப் பார்க் குற போதெல்லாம், அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தரணும்னு வலியுறுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. கலைஞரை நேரில் சந்திப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கிட்டிருக்கும் ராமதாஸ், கடந்த சில நாட்களா போனிலே பேசுறாராம். அதனால பா.ம.க. தரப்பில் நம்பிக்கையோடுதான் இருக்காங்க. சீட் தர்றேன், தரலைன்னு கலைஞர்கிட்டே யிருந்து இதுவரைக்கும் உறுதியான வார்த்தை எதுவும் வரலை. நல்ல சேதி சொல்றேன்னு சொல்லியிருக்காராம். கலைஞர் நிச்சயமா நல்ல சேதி சொல்லுவாருன்னு பா.ம.க.வில் எதிர்பார்க்குறாங்க. பா.ம.க. தரப்பில் சிலர் கிட்டே கலைஞர் பேசுறப்ப, சீட் வாங்கிக் கிட்டபிறகு, கூட்டணியிலே இடம்பெறாமல் போயிட்டீங்கன்னா என்ன பண்ணுறதுன்னு கேட்டதாகவும், சட்டமன்றத் தேர்தலிலும் உங்களோடுதான் நாங்க கூட்டணி அமைப் போம்னு அவங்க சத்தியம் செய்ததாகவும் ஒரு தகவல் கசியுது.''
""கலைஞர் கொடுப் பாரா, மாட்டாரா?''
""அந்த சஸ்பென்ஸ் தான் தி.மு.க.விலும் நிலவுது. கட்சியின் சீனி யர்கள்கிட்டேகூட இது பற்றி எதுவும் சொல்லாமல் சஸ்பென்ஸா வைத்திருக் கிறாராம் கலைஞர். தி.மு.க.வின் முக்கிய நிர் வாகிகள் எல்லோருக் குமே, பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்ப தற்கு எதிரான மனநிலை தான் இருக்குது. ஆனா, அவங்ககிட்டே கலைஞர் எந்த ரியாக்ஷனும் காட்டுறதில்லை. மர்மப் புன்னகை மட்டும்தான் வெளிப்படுது.''
""எதையும் ஒரு கணக்கோடுதானே கலைஞர் செய்வார்?''
""அவர் கணக்கு என்னன்னா, 2011 தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டுகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க. கூட்டணிக்கு பெரும் சவாலா ஆயிடும்ங்கிற கணக்கில் பா.ம.க.வை தி.மு.க. பக்கம் வைத்துக்கொள்ளலாம்னு நினைக்கிறாராம். தி.மு.க. நிர்வாகிகளோ, விஜயகாந்த்தும் பா.ம.க.வும் ஒரே கூட்டணியில் இருக்கப் போறதில்லை. இந்த நிலையில், பா.ம.க.வை நாம் சேர்த்துக்கொண்டால், விஜயகாந்த் நிச்சயமா அ.தி.மு.க. பக்கம் போயிடுவார். அ.தி.மு.க.வுக்கு மைனஸ் ஆன ஓட்டுகளெல்லாம் திரும்ப ப்ளஸ் ஆயிடும். தமிழகம் முழுக்க அ.தி.மு.க. ஓட்டுகளை ஸ்ட்ராங் பண்ண, நாம ஏன் வாய்ப்பு கொடுக்கணும்னு சொல்றாங்களாம்.''
""சி.பி.ஐ. தரப்பின் நெருக்கடியால் அன்புமணி அதிர்ச்சியடைஞ்சிருக்காருன்னு போன முறை ஒரு செய்தி சொன்னியே... அப்படி எதுவும் இல்லைன்னும், தன்னை சி.பி.ஐ. விசாரிக்கலைன்னும் அன்புமணி மத்திய அமைச்சரா இருந்தப்ப, அவரோட பி.ஏ.வா இருந்த ராம நாதன் என்னை காண்டாக்ட் பண்ணி சொன்னாருப்பா.. அன்புமணியும் தன் மீது எந்த தவறும் இல்லைன்னும், தவறு இருக்குன்னு நிரூபிச்சா அரசியலை விட்டே ஒதுங்கிக் கிறேன்னும் சொல்றாரு. உண்மை என்ன?''
""ராமநாதனிடம் சி.பி.ஐ. விசாரணைங்கிற தகவல், தப்புதாங்க தலைவரே.. ... கிடைச்ச தகவலை கன்ஃபார்ம் பண்ண அவகாசம் இல்லா மல் சொன்னதற்காக வருத் தத்தை தெரிவிச்சிக்கிறேன். அதே நேரத்தில், டெல்லியிலி ருந்து எனக்கு கிடைக்கிற தக வல்களையும் சொல்லிடுறேன். அன்புமணிக்கு தி.மு.க. கோட்டா விலிருந்து ராஜ்யசபா சீட் கொடுப்பதை காங்கிரஸ் தரப்பில் விரும்பலையாம். ஒரு சில காங்கிரஸ் பிரமுகர்கள் கலைஞ ரையே பார்த்து சொல்லியிருக்காங்க. ஏன்னா, 2009 எம்.பி. தேர்தலில் பா.ம.கவை தங்கள் கூட்டணியில் வச்சிக்கணும்னு காங் கிரஸ் நினைத்தது. தி.மு.க. 6 சீட் தரமுன்வந்தபோது, பா.ம.க. 7 சீட்டில் பிடிவாதமா இருந்தது. தங்களுக்குத் தரும் சீட்டுகளில் ஒன்றைத் தருவதா காங்கிரஸ் தரப்பிலிருந்து குலாம்நபி ஆசாத்தும், அகமது பட்டேலும் பா.ம.க.கிட்ட பேசினாங்க. சரிப்படலை. ஆட்சியின் கடைசிகட்டம்வரை அமைச்சரவையில் இருந்துவிட்டு, அதற்கப்புறம் கூட்டணி மாறிய பா.ம.க. மேலே டெல்லி காங்கிரஸ் இன்னமும் கோபமாகத்தான் இருக்குதாம். அதனால, அன்புமணிக்கு எதிரா சிறையில் உள்ள ஜிதேந்தர் சிங்கை காங்கிரஸ் தரப்பு சி.பி.ஐ. மூலம் பயன்படுத்துறதா டெல்லி சோர்சிலிருந்து தகவல் சொல்றாங்க. சி.பி.ஐ. மூவ் பண்ணுதுங்கிறது உண்மைதான்.''
""முதல்வர் கலைஞர் தன்னோட கோபாலபுரம் வீட்டை ஜூன் மாதத்தில் ஏழைகளுக்கான மருத்துவ மனைக்காக ஒப்படைக்கப்போறதா சட்டமன்றத்தில் அமைச்சர் பரிதிஇளம்வழுதி தெரிவிக்க, ஜோசியர் சொன்னதாலதான் கோபாலபுரம் வீட்டை கலைஞர் காலி செய்யப்போறாருன்னு ஜெ. பேசியிருக்காரே?''
""அரசியல் களத்தில் யாரும் எதுவும் பேசலாம்... உண்மை நிலவரம் என்னன்னு நான் சொல்றேன். தனக்கும் தன் மனைவிக்கும் பிறகு கோபாலபுரம் இல்லம் மருத்துவமனைக் காக ஒப்படைக்கப்படும்னுதான் கலைஞர் ஏற்கனவே சொல்லியிருந்தார். இதற்குத் தன் பிள்ளைகளை ஒப்புக்கொள்ள வைத்து, ரிஜிஸ் டரும் பண்ணிட்டார். இந்த ரிஜிஸ்ட்ரேஷனை முறைப்படி அரசாங்கத்திடம் ஒப்படைப்பதைத் தான் ஜூன் மாதம் செய்வதா கலைஞர் திட்டமிட்டிருக்கிறார். அதுதான், வீட்டை ஒப்படைக்கப்போவதா மாறிடிச்சி. அதனால் ஜூனுக்குப் பிறகும் கோபாலபுரம் இல்லத்தில் தான் கலைஞர் தங்கியிருப்பார்.''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment