Monday, May 24, 2010

விக்ரம் இப்படியிருக்கக் கூடாது டைரக்டரின் ஓப்பன் டாக்!


shockan.blogspot.com
முகப்பூச்சுக்கும் மேடை பேச்சுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. வேஷம் கொஞ்சம், கோஷம் கொஞ்சமாக நடைபெறும் இந்த சம்பிரதாயங்கள் கோடம்பாக்கத்தில் எக்கச்சக்கம். ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லை என்பது போலவே இருந்தது விலை படத்தின் பாடல் வெளியீட்டு விழா. எடுத்த எடுப்பிலேயே இப்ப இருக்கிற முன்னணி ஹீரோக்கள் வெற்றிப்பட இயக்குனர்கள்கிட்டதான் கதை கேட்கிறாங்க. புதுமுக, அறிமுக இயக்குனர்கள் கதை சொல்ல நேரம் கேட்டா அஞ்சு வருஷம் கூட இழுத்தடிக்கிறாங்க. ஏன், பேரை சொல்றதில எனக்கொன்னும் தயக்கமில்ல. விக்ரம் கூட இப்படிதான் இருக்காரு என்றார் விலை படத்தின் இயக்குனர் காமராஜ். ஒரு காலத்தில தானும் ஒரு புதுமுகம்ங்கிறத அவரு மறந்திரக் கூடாது என்பது காமராஜின் ஓப்பன் டாக்!.

தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட முன்னணி பிரமுகர்களை வைத்துக் கொண்டு அவர் பேசியது நெளிய வைத்தாலும், நிஜத்தின் வலிமை பெரியதல்லவா?

முன்னதாக வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் பட்டினத்தார் பாடல் வரிகள் பளிச்சிட்டன.

எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்
நித்தம் நித்தம் பொய்யடா பேசும் மட மாதரை விட்டு
உய்யடா உய்யடா உய்...

என்று போகிறது அந்த பாடல். கதையும் அந்த ரகம்தான் போலிருக்கிறது. பெண்களை விலை பேசும் ஒரு கூட்டத்தை பற்றி விளக்கியது சில பாடல்கள். கரணம் தப்பினால் மரணம் என்பது போல, கொஞ்சம் சரிந்திருந்தால் கூட இது பிட் பட ரேஞ்சுக்கு பேசப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் துளி கூட ஆபாசமில்லை என்று நம்பிக்கையளித்தார் காமராஜ். சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ஜெயம்கொண்டான் கண்ணன் என்று பிரபல இயக்குனர்கள் மேடையில் இருந்தாலும், கண்ணனை தவிர யாரிடமும் கணீர் பேச்சில்லை. 'ஒரு பாடல் பார்த்தேன். அதில் எபெக்ட்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்கு. அதை கொஞ்சம் குறைச்சா அந்த பாடலுக்கான அழுத்தம் அப்படியே வெளிப்படும்' என்று தனது கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார் கண்ணன்.

அதை அப்படியே ஏற்றுக் கொண்டார் காமராஜ். ஹ§ம், ஆரோக்கியமான மனசுள்ள இளைஞர்கள்!

No comments:

Post a Comment