Thursday, May 20, 2010
திரைக்கூத்து!
shockan.blogspot.com
சொன்னது என்னாச்சு ராமநாதா?
மாற்றுத் திறனாளிகள் உருவாக்கிய "மா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கனிமொழி தலைமையில் நடந்தபோது... விழாவில் கலந்து கொண்ட அபிராமி தியேட்டர் ராமநாதன் ""என்னுடைய அபிராமி திரையரங்கில் ஒரு வாரத்திற்கு வாடகையே இல்லா மல் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளுங்கள். படத்தின் விளம்பரச் செலவுக்காகவும் 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன்'' என அறிவித்தார். கனிமொழி உட்பட அனைவரும் ராமநாதனின் நல்ல மனசை வாழ்த்தினார்கள்.
மே-14ந் தேதி படத்துக்கான ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டது. மற்ற தியேட்டர்களையெல்லாம் பணம் கட்டி கமிட் செய்த பிறகு... ராமநாதனிடம் தியேட்டர் கேட்டு போனார்கள். மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப் பின் தலைவர் சிதம்பரநாதன், பொதுச்செயலாளர் சிம்மச் சந்திரன், படத்தின் ஹீரோ தீபக் ஆகிய மூவரும் போய் பேசி னார்கள். ‘""உங்க சவுகரியத்திற் கெல்லாம் ரிலீஸ் பண்ண முடியாது'' என இன்சல்ட் பண்ணி அனுப்பிவிட்டாராம் ராமநாதன். ‘""நாங்க ராமநாதன்கிட்ட உதவி கேட்கலை. அவரே மைக்கைப் பிடிச்சு உதவி செய்றதா வாக்குறுதி கொடுத்தார். இப்ப... அவரே உதவிசெய்ய முடியாதுன்னுட்டார்'' என விசனப்பட்ட சிதம்பரநாதன், ""நக்கீரனில் "மா' படம் குறித்து எழுதின அருமையான கட்டுரை எங்க படத்துக்கு மிகப் பெரிய விளம்பரமா இருந்துச்சு'' எனச் சொன்னார்.
ராவணன் கதை!
விக்ரம் குற்றவாளி. அவர்மீது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ் நடத்தும் தாக்குதலில் எதிர்பாராமல் ப்ரியாமணி இறந்து விட... பழிவாங்கும் விதமாக போலீஸ் அதிகாரியின் மனைவி ஐஸ்வர்யா பச்சனை கடத்திவிடுகிறார் விக்ரம். அடர்ந்த காட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட மனைவியை மீட்ட அதிகாரி... மனைவியை சந்தேகப் படுவதுதான்... மணிரத்னத்தின் ‘"ராவணன்' கதை என கோலிவுட்டில் கதை பேசுகிறார்கள்.
விஷால் ஆர்யாவுடன் சூர்யா!
பாலாவின் ‘"அவன் இவன்' படத்தில் விஷாலும், ஆர்யாவும் நடித்து வருகிறார்கள். இந்த கூட் டணியில் சூர்யாவும் சேர் கிறார். கெஸ்ட்ரோல் ஒன்றில் நடிப்பதற்காக நாலு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.
சிங்கமா? பெண் சிங்கமா?
சிங்கமா? பெண் சிங்கமா?... இதுதான் கோலிவுட் ஹாட். சூர்யா நடித்த "சிங்கம்' படத்தை சன் டி.வி. வாங்கியுள்ளது. இம்மாதம் 28-ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து தியேட்டர்களிடம் பேசியிருந் தனர். கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ல் கலைஞரின் "பெண் சிங்க'த்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் "சன்'னை தொடர்பு கொண்ட தியேட்டர் நிர்வாகிகள் ‘""உங்க படத்தை ரிலீஸ் பண்ணி ஒருவாரத்தில் பெண்சிங்கத்தை ரிலீஸ் பண்ண வேண்டியிருக்கு. இதனால் ஒரு வாரத்திலேயே உங்க படம் தூக்கப்படும். அதனால் ரிலீஸ் தேதியை பெண் சிங்கத்திற்குப் பின்னாடி தீர்மானிங்க'' எனச் சொல்லி யிருக்கிறார் கள்.
பக்கத்து வீட்டு ஸ்ரத்தா!
சின்ன வயசிலிருந்தே ‘"அக்கா அக்கா' என சிம்ரனைப் பார்த்து வியந்தவராம் சிம்மின் பக்கத்து விட்டு ஸ்ரத்தா.
வயசுக்கு வந்து வாலிபி ஆனதும் அம்மணிக்கும் சினிமா ஆசை தொத்திக்கொள்ள... கோலிவுட்டுக்கு ஃபிளைட் ஏறி னார். இப்போ "உனக்காக என் காதல்' படத்தில் நாயகியாகிவிட் டார்.
முந்தும் சின்னத் திரை!
பெரிய திரையுலகினரை விட சின்னத்திரையுலகினர் படு ஸ்பீடாக இருக்கிறார்கள். வீடு கட்ட கலைஞர் இடம் கொடுத்ததில் எட்டு ஏக்கர் சின்னத்திரை கலைஞர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் 1216 வீடுகள் கட்ட முயற்சி எடுத்த சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை, மலேசியாவைச் சேர்ந்த ரிம்பா முலியா மேனேஜ்மெண்ட் என்கிற கட்டுமான நிறுவனத் துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு முடித்து விட்டார். விரைவில் பூமி பூஜை போடப் போறாங்க.
லஸ்யாவான பத்மா!
விபச்சார வழக்கில் கைதாகி ஆதாரமில்லாததால் விடுதலையான நடிகை பத்மா, தன் பெயரை லஸ்யா என மாற்றிக்கொண்டு இப்போது நிறைய்ய படங்களில் நடித்து வருகிறார். ""நீ சினிமாக்காரி. என்னோட காம இச்சையை தீர்க்கும் கருவி என என்னை வெறும் போகப் பொருளாக பயன்படுத்தினார் அந்த தொழி லதிபர். ஒரு கட்டத்தில் நான் அதற்கு மறுத்ததால் தான் சிக்கவைக்கப்பட்டேன். சட்டத்தின் உதவியால் இப்போ நல்ல தீர்ப்பு கிடைச்சிருக்கு'' என சமீபத்தில் நிருபர்களிடம் சொல்லி அழுதிருக் கிறார் லஸ்யா.
அப்படியா?
வணிகத்துக்கு பேர் போன தெரு படத்தை எடுத்து பாராட்டைப் பெற்ற நிறுவனம் அந்த படத்தின் ஓவர் பட்ஜெட்டை தாங்கமுடியாமல் தவித்து ஒரு வழியாக முதலை மீட்டுவிட்டது என்றாலும் கூட சில ஃபைனான்ஸ் நெருக்கடிகள். இதனால் தற்காலிகமாக தனது தயாரிப்பு பிரிவு அலுவலகத்தை மூடிவிட்டதாம். ஓவர்சீஸ் உரிமை வாங்குவது உள்ளிட்ட மற்ற அலுவலகங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment