
shockan.blogspot.com
சீமானின் நாம் தமிழர் அமைப்பினர் அமிதாப்பச்சனின் வீட்டு முன்பு நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் நடக்கவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் சிறப்புத் தூதர் பொறுப்பிலிருந்து அமிதாப்பச்சன் விலகியுள்ளார்.
மேலும் அவர், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பாசிஸ அரசு முள்ளிவாய்க்காலில் கோரத் தாண்டவமாடியதன் ஒரு வருட நிறைவை பல்வேறு விதமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேலும், சர்வதேச ரீதியிலான நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசின் உதவியுடன் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் வரும் ஜூன் மாதம் நடத்துகிறது.
இதன் சிறப்பு தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார்.
தமிழர்களை கொன்று குவித்த பாசிஸ ராஜபக்சே அரசுக்கு சாதகமான இந்த விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளக் கூடாது என்று அவர் வீட்டு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசிய அமிதாப். தமிழர்களின் சென்டிமெண்டை மதிப்பதாக கூறினார்.
இந்நிலையில் யார் போராட்டம் நடத்தினாலும் திட்டமிட்டபடி அமிதாப் விழாவில் கலந்து கொள்வார் என இலங்கை மந்திரி கொக்கரித்திருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் அமிதாப்பின் வீட்டு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் காலாவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப் தூதர் பொறுப்பிலிருந்து விலகினார். மேலும் அவர் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இலங்கையில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தூதராக அமிதாப்புக்கு பதில் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் லாரா தத்தா, விவேக் ஓபராய் ஆகியோருக்கும் தூதர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான போராட்டம் விரைவில் தொடங்கப்படும் என நேற்று சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment