Saturday, May 22, 2010
இப்படியும் ஒரு காக்கி!
shockan.blogspot.com
கரூர் மாவட்ட தோகைமலை பொதுமக் கள் சரவெடிகளை வெடித்தும்... இனிப்புகளை வழங்கியும்... சந்தோசம் கொண்டாட... ’இன்னைக்கு அப்படியென்ன விசேஷம்?’ என்றோம்.
வெடிவெடித்தவர்களோ..
""காக்கி அதிகாரிகளில் பல மோசமான அதிகாரி களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்க இருந்த எஸ்.ஐ. சக்திவேல் மாதிரியான ஒரு கேடுகெட்ட ஆளை யாரும் பார்த்திருக்கமாட்டாங்க. அவரை இப்போ கைது பண்ணி ஜெயிலுக்கு அனுப்பியதுக் காகத்தான் இந்த சந்தோசக் கொண்டாட் டம்''’என்றார்கள் உற்சாகம் கொப்பளிக்க.
எஸ்.ஐ.சக்திவேல் அப்படியென்ன ஏரியா வாசிகளின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் என நாம் விசாரித்தபோது ""அதை ஏன் கேக்கறீங்க? இவர் இந்த ஊர் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை. ஆனா அப்படி யொரு அலப்பரை. வந்த அன்னைக்கே தன் மேஜையின் இரண்டு பக்கமும் சவுக்குகளை வைத்துக்கொண்டு.. "நான் சாட்டையடி சக்தி வேல். என்னைப்பார்க்க வர்றவனுக்கு வயிறு கலங்கணும். அதுக்குதான் இது'ன்னு ஸ்டே ஷன்லயே சாட்டையை வீசி உதார் விட்டார். தன்னோட குவாலிஸ் காரை ஸ்டேஷன் வாசல்ல நிறுத்தி வச்சிக்கிட்டு... யாராவது புகார்னு வந்தா, அந்தக் கார்ல ஏத்திக் கிட்டுப்போய் பஞ்சாயத்துப் பேசி ஏகத்துக்கும் பணம் வாங்கிடுவார்.
காலேஜ் பசங்களைக் கூப்பிட்டு அவங்களுக்குப் பணம் கொடுத்து... அவங்களை விட்டு தனக்கு ‘காக்கி நாயகன்’னு பட்டம் கொடுக்க வச்சி அலப்பரை செஞ்சார். திடீர் திடீர்னு தன் காரை நடுரோட்டில் நிறுத்திக்கிட்டு... நான் போலீஸ் இல்லை; பொறுக்கின்னு டயலாக் விட்டு தன் துப்பாக்கி யை எடுத்து சுழற்றி அப்பாவிகளை திகிலடைய வைப்பார். கன்னியாகுமரியில் ரெண்டு பேரை என்கவுண்ட்டர்ல போட்டுட்டுதான் இங்க வந்திருக்கேன்னு ரோட்டில் குறுக்கவும் நெடுக்கவும் நடந்து சில சமயம் காமெடி பண்ணுவார். இவரோட பேட்ச் மேட்டெல்லாம் டி.எஸ்.பி. லெவலுக்குப் போனபோதும்... இவர் மட்டும் கடந்த 23 வரு ஷமா... எஸ்.ஐ.யாவே இருந்தார். காரணம் சொத்துக்குவிப்பு உட்பட சில வழக்கு இவர் மேல் இருக்கு. இப்படி உதார் விட்டுத்திரிஞ்ச எஸ்.ஐ.யை. விஜிலன்ஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதிதான் கைது பண்ணினார்''’என்கிறார்கள் தோகைமலை காக்கிகள். எதற்குக் கைது?
மாணிக்கம் என்பவர் தன் வயலில் குப்பைகளைப் போட்டு எரிக்க... அந்த நெருப்பு பட்டு பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த துரை என்பவரின் கரும்புவயல் எரிந்து நாசமாகி விட்டது. துரை இவரிடம் புகார் கொடுக்க.. எஸ்.ஐ.யோ "10 ஆயிரம் ரூபாயைக் கொடு... உனக்கு நஷ்ட ஈடு வாங்கித்தருகிறேன்' என்று அடம்பிடித்திருக்கிறார். வேறு வழியில்லாமல் துரை விஜிலன்ஸுக்குப் போக... அந்த அடாவடி எஸ்.ஐ. சக்திவேலைப் பொறிவைத்துப் பிடித்து கரூர் சிறையில் அடைத்துவிட்டார்கள். அவரோடு சேர்ந்து அவரது கலெக்ஷன் ஏஜெண்டாக செயல்பட்ட பிச்சைமுத்து என்பவனையும் மடக்கினார்கள். இந்தப் பிச்சைமுத்து குளித்தலை அருகே ஒரு பள்ளி மாணவியைக் கற்பழித்து ஏற்கனவே ஜெயில்களி தின்றவனாம்.
இப்படியும் ஒரு காக்கி வில்லனா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment