Saturday, May 15, 2010

நெருங்கும் சி.பி.ஐ.! அன்புமணி அதிர்ச்சி! ""ரஞ்சிதாவால் மோசம் போயிட்டேனே!'' -சிறையில் நித்யா கதறல்! "



shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... ஐந்து முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று, 18 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றி, இந்தியாவுக்கே முன்னோடியான பல மக்கள் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, 2006-ல் பதவியேற்ற தி.மு.க அரசை வெற்றிகரமா 4 ஆண்டுகள் நிறைவடையச் செய்து, 5-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கச் செய்திருக்கும் கலைஞரை தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ், பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ. விடுதலை சிறுத்தைகள்ன்னு பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மனதார பாராட்டியிருக்காங்க.''

""இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தில் கட்சி எல்லைகளைக் கடந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவருமான கலைஞரின் இந்த சாதனைக்காகவும் விரைவில் வரவிருக்கும் பிறந்தநாளுக்காகவும் நாமும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.''

""தலைவரே.. நவம்பர் மாசம் குருப்பெயர்ச்சி நடக்கப் போகுது. சமீபத்தில் நடந்தது குரு ஆதிச்சாரம். அதாவது, 5-வது இடமான தனுசில் ராகு இருக்கு. 8-வது இடமான அஷ்டமத்தில் குரு இருக்குது.''

""என்னப்பா, அரசியல் மேட்டர்களை விட்டுட்டு ஜோதிடத் துக்குள்ளே இறங்கிட்டே... ரூட்டை மாத்திட்டியா?''

""காரணத்தோடதான் சொல்றேங்க தலைவரே... ஜெ.வின் ஆஸ்தான ஜோதிடர்கள் அவர்கிட்டே என்ன சொல்லியிருந்தாங்கன்னா, மே 11-ந் தேதி செவ்வாய்க் கிழமை உங்களுக்கு ரொம்பவும் நல்ல நாள். உங்களோடு சம்பந்தப்பட்ட வழக்கிலே அன்னைக்கு தீர்ப்பு வந்தால் சாதகமா இருக்கும். உங்க வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கிடும். இனிமே நடக்கிற தெல்லாம் வெற்றிகரமா நடக்கும்னு சொல்லியிருக்காங்க. அதை முழுசா நம்பிய ஜெ.வும், பெங்களூரு தனி நீதிமன்றத் தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யணும்னு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மனுவை, செவ்வாய்க்கிழமையன் னைக்கு விசாரணைக்கு கொண்டு வந்து, தீர்ப்பு கிடைக்கச் செய்யணும்னு முயற்சி எடுத்தார்.''

""போன செவ்வாய்க்கிழமை தானே, அந்த மனு மீதான விசாரணை நடந்தது!''

""ஆமாங்க தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை சட்டமன்றத் தேர்தல் முடியும்வரை இழுத்தடிப்பதற்காக அண்டர்கிரவுண்டில் பல வேலை களையும் செய்தார் ஜெ.''

""ஆனா, ஜெ.வின் மனுவை மே 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை யன்னைக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி பண்ணிடிச்சே? ஜோதிடர்கள் சொன்ன செவ்வாய்க்கிழமை சென்ட்டி மென்ட் ஒர்க் அவுட் ஆகலையே!''

""தன்னோட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி பண்ணிடிச்சுன்னதும் ஜெ ரொம்ப கடுப்பாயிட்டாராம். யார்கிட்டே பொறுப்பை ஒப்படைச் சாரோ அவங்களைக் கூப்பிட்டு, என்னை ஜோசியக்காரர்களும் ஏமாத்து றாங்க. நீங்களும் ஏமாத்துறீங்க. நீங்க கேட்டதையெல்லாம் கொடுத்தேன்ல.. எல்லாத்தையும் செய்றேன்னு சொல் லிட்டு எதையும் செய்யாம எனக் கெதிரா தீர்ப்பு வர வச்சிட்டீங்கன்னு சத்தம் போட்டிருக்கிறார். தீர்ப்பினால் ஏற்பட்ட டென்ஷனால் ஜெ.வுக்கு பல்வலி அதிகமாயிடிச்சாம். ட்ரீட் மெண்ட்டுக்குப் போயிட்டார்.''


""ஆஸ்தான ஜோதிடர்களின் கணக்கு எப்படி தப்பா போனதாம்?''


""அதற்குத்தான் குருப்பெயர்ச்சி பற்றி நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். குரு ஆதிச்சாரத்தால் சிம்மராசிக்காரர்களுக்கு சிரம திசையாம். அதாவது, சிம்ம ராசிக்காரரான ஜெ.வுக்கு இப்ப உள்ள கிரக நிலை சரியா இல்லை. பூர்வபுண்ணிய பலன்களால் கெடுதல்கள் ஏற்படு மாம். சட்டச்சிக்கல்களும் அதிகமாகுமாம். சத்ருரோகம் பல எதிர்ப்புகளை உண்டாக்குமாம். இதையெல்லாம் தீர்ப்புக்குப்பிறகு ஜெ.வின் காதுக்குக் கொண்டுபோயிருக்கும் இன்னொரு ஜோதிட டீம், இதற்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்குது. அதன்படி, வரும் 18ந் தேதியன்னைக்கு காள ஹஸ்திக்குப் போகிறார் ஜெ. அங்கே வழிபாடு நடத்தி, எதிர்ப்புகளை முறியடிக்கலாம்ங்கிறதுதான் அவ ரோட நம்பிக்கை.''

""தி.மு.க கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய 4 எம்.பி. சீட்டில் காங்கிரசுக்கு நிச்சயம். மேலும் ஒண்ணு தரணும்ங்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் பிரமுகர்களிடம் இருக்குது. தி.மு.க தரப்போ, போனமுறை ஜெயந்திநடராஜனுக்கு சீட் தரும்படி சோனியாவே சிபாரிசு செய்ததால் கலைஞர் ஒதுக்கி னார். இந்தமுறை அப்படி யாருக்கும் சோனியா விடமிருந்து இதுவரை சிபாரிசு வரலையாம். அதனால, தி.மு.க கையில்தான் 3 ராஜ்யசபா சீட்டும் இருக்குது.''

""தி.மு.க தலைகளில் யார், யார் எதிர்பார்ப்போடு இருக்காங்க?''

""ம.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்களில் செஞ்சி ராமச்சந்திரன் போன எம்.பி. எலக்ஷ னப்பவே திருவண்ணா மலை தொகுதியில் சீட் கேட்டார். அவ ருக்கு தர்மபுரியை ஒதுக்குவதா கலைஞர் சொன்னார். அவர் அங்கே போட்டியிடத் தயங்கி, ராஜ்ய சபா சீட் கேட்டிருந் தார். அதனால, தனக்கு கிடைக்கும்ங் கிற நம்பிக்கையில் செஞ்சி ராமச்சந்திரன் இருக்கிறார். அ.தி.மு.க.வி லிருந்து தி.மு.க.வுக்கு வந்த செல்வகணபதி மேலே கலர் டி.வி. ஊழல் வழக்கு இருந் தது. இப்ப அதிலிருந்து விடு தலையாயிட்டார். அதனால, தனக்கு ஸ்டாலின் சிபாரிசில் ராஜ்யசபா சீட் கிடைக்கும்னு செல்வகணபதி நம்புறார். கடலூரில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்காமல் போன இள.புக ழேந்தியும் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்க்கிறார்.''

""எதிர்பார்ப்பு பட்டியல் நீண்டு கொண்டே போகுதே?''

""தி.மு.க.வில் உள்ள சினிமா நடிகர்களில் நான் சீனியர், எனக்கு ஒரு வாய்ப்புங்கிற எதிர்பார்ப்பில் வாகை சந்திரசேகர் இருக்கிறார். அழகிரி மூலம் பொன்.முத்துராம லிங்கமும், செல்வி மூலமா இந்திர குமாரியும் ட்ரை பண்ணிக்கிட்டிருக் காங்க.''

""சரி, பா.ம.க. தரப்பில்''

""ரொம்ப ஹேப்பியா இருக்காங்க. தி.மு.க. அரசின் நான்காண்டு நிறைவை யொட்டி ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துச் சொல்ல போனபோது கலைஞர் ரொம்ப சந்தோஷமா இருந்தாராம். அதனால அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் நிச்சயம்னு சந்தோஷமா சொல்றாங்க. ஆனா, அன்புமணி அதிர்ச்சியா இருக்காரு.''

""ஏன்?''

""ஆல் இண்டியா மெடிக்கல் கவுன்சில் சேர்மன் கேதன் தேசாயோடு லஞ்சப் புகாரில் கைதானவர் ஜீதேந்தர் சிங். மெடிக்கல் காலேஜ் நிர்வாகி ஒருத்தர் இவர்கிட்டே லஞ்சம் கொடுத்தபோதுதான் சி.பி.ஐ. பொறி வைத்துப் பிடித்தது. இவர் வீட்டில் நடந்த சோதனையில் 10 கார் பிடிபட்டது. அதில் ஒரு கார் இரண்டே கால் கோடி ரூபாய். ஒரு செல்ஃபோன் 10 லட்ச ரூபாய்னு 5 செல்ஃபோன் பிடிபட்டிருக்குது. 100-க்கும் அதிகமான கோட், ஷூ எல்லாம் இருந்திருக்கு. பா.ம.க. எம்.பி. சண்முகம் சுகாதாரத்துறை இணையமைச்சரா 1 வருடம் இருந்தப்பவே ஜீதேந்தர் சிங் பலகோடி ரூபாயை கையாண்டி ருக்கிறார். அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சரானதும் இந்தியா வில் உள்ள பல மெடிக்கல் காலேஜ்களுக்கு அனுமதி தருவது, சீட்டுகளை அதிகப்படுத்துவது, மருந்து சப்ளைன்னு ஜீதேந்தர் சிங் புகுந்து விளையாடியிருப்பது விசா ரணையில் தெரிய வந்திருக்கு.''

""ம்...''

""சுனாமி நிவாரணம்ங்கிற பேரில் நிறைய என்.ஜி.ஓ. அமைப்புகளை உருவாக்கி மருந்து சப்ளை செஞ்சதா ரெகார்டுகளை ரெடிபண்ணி பலகோடி ரூபாய் சம்பாதிச்சிருக்காரு. ஹரியானாவில் உள்ள சௌதாலா, லண்டன் மாநகரம் இங்கெல்லாம் ஸ்டார் ஹோட்டல் இருப்பது என்கொயரி யில் தெரிஞ்சிருக்காம். அன்புமணி மந்திரியா இருந்தப்ப, மாலத்தீவு, ஸ்டேட்சுவல் தீவு இங்கெல்லாம் போனபோது ஜீதேந்தர் சிங் முன்கூட்டியே போய் வேண்டிய ஏற்பாடுகளை செய்திருக்காரு. சிங்கை தொடர்ந்து அன்புமணியின் உதவியாளர் ராமநாதனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியிருக்குது. ராஜ்யசபா தேர்தல் நேரத்தில் சி.பி.ஐ.யின் விசாரணை வேகம் அன்புமணியை அதிர்ச்சியடைய வச்சிருக்கு.''

""பத்திரிகையாளர்களுக்கு உற்சாகம் தரும் தகவலை செய்தி-மக்கள்தொடர்புத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் பரிதி அறிவித்திருக்கிறார். 20ஆண்டுகள் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியத்தை 5000 ரூபாயாக அரசாங்கம் உயர்த்தியிருக்குது. அதுபோல கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பத்திரிகையாளர்களை சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தணும்ங்கிற கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக் குது. தமிழக அர சுக்கு நன்றி தெரி வித்திருக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் இதையெல்லாம் விரைந்து நிறை வேற்றணும்னு எதிர்பார்க்குது.''

""இப்ப நான் சொல்லப்போற செய்தியை நீங்க எதிர்பார்த்திருக்க மாட் டீங்க.. நித்யானந்தரோட ஜாமீன் மனுவை ஹைகோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. புதன்கிழமை யன்னைக்கு ஜெயிலில் அவரை சதானந்தாவும் சத்யானந்தாவும் சந்திச்சாங்க. அப்ப நித்யானந்தா, "பெயில் எடுக்கிறதா சொல்றீங்க. ஆனா எடுக்கமாட்டேங்குறீங்க. ஆசிரமத்திலே பர்மிஷன் இல்லாம பில்டிங் கட்டினோம்னு சொல்லி இடிக்கப் போறதா சொல்றீங்க. என்னென்னவோ நடக்குது... அந்தப் பாழாப்போன ரஞ்சிதாவால மோசம் போயி இப்ப ஜெயில்ல கஷ்டப்படுறேன். சாப்பாடு நாறுது. கொசுத்தொல்லை தாங்க முடியலை. இங்க இருக்கும் வார்டன்ங்க கிண்டலை தாங்க முடியலை. எத்தனை கோடி செலவு பண்ணினாலும் என்னை எப்படி யாவது பெயில்ல எடுங்கன்னு கதறி அழுதுட்டாராம்.''

படம் : எஸ்.பி.சுந்தர்

மிஸ்டுகால்!



சிறுதாவூர் பஞ்சமி நிலத்தை ஜெ-சசிகலா ஆக்கிர மித்து பங்களா கட்டியது பற்றி சி.பி.எம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்ரமணியன் கமிட்டி தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப் பித்துள்ளது. பஞ்சமி நிலத்தை தலித் குடும்பங்கள் விற்றதும் சட்டவிரோதம் அதை சசிகலா தரப்பு வாங்கியதும் சட்ட விரோதம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் சிறுதாவூர் நிலத்துடன் சசிகலா குடும்பம் வளைத்துப் போட் டுள்ள 30 ஏக்கர் நிலத்தையும் அரசே கையகப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசுப்ரமணியன் கமிஷனுக்கு எதிராக, சசிகலா உறவினரான சித்ரா தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசா ரணையில் உள்ளது. அதன் தீர்ப்பைப் பொறுத்தே கமிஷன் விசாரணையை தமிழக அரசு அமல்படுத்த முடியும்.



இலங்கையில் நட்சத்திர கலைவிழா நடத்தவிருந்த சின்னத்திரை கலைஞர்கள், சீமான் உள்ளிட்ட தமிழுணர் வாளர்களின் எதிர்ப்பினால் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர். கடந்த சில வருடங்களாக இலங்கையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தி வந்த திண்டுக்கல் லியோனி, இப்போதுள்ள நிலைமையின் தீவிரத்தை அறிந்து இலங்கை செல்ல மறுத்துவிட்டார்.



முதல்வராக பதினெட்டு ஆண்டுகளை நிறைவுசெய்த கலைஞரை காங்கிரஸ் எம். எல்.ஏக்கள் நேரில் சென்று பாராட்டியபோது, வேலூர் எம்.எல்.ஏ ஞானசேகரன், எம். எல்.ஏக்கள் வீடு கட்ட நிலம் ஒதுக்குங்க என கோரிக்கை வைத்தார். நிலம் கொடுத்தால் விமர்சனம் வரும் என கலைஞர் சொல்லியிருக்கிறார். அதற்கு ஞான சேகரன், சட்டமன்றத்தில் அறிவித்தால் தான் விமர்சிப்பாங்க. அரசாணையா போட்டு டுங்கய்யா என்று சொல்ல, அவரை ஏறிட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர்.

1 comment:

  1. the relevent news about nithya not published.some other news (i.e)next topic news was published .pls pubish the news of that topic

    ReplyDelete