shockan.blogspot.com
இன்னமும் கைதிகளாகத்தான் இருக்கிறார்கள் அந்த ஈழத் தமிழர்கள். இலங்கை வதை முகாம்களிலிருந்து வெளியேறி மலேசியா வின் பினாங்கு கடற்கரையருகே பழுதாகி நின்ற கப்பலில் சிக்கியிருந்த 75 தமிழர்களைத் தற் கொலையிலிருந்து நக்கீரன் காப்பாற்றியதையும் அதன்பிறகு அவர்கள் மலேசிய அரசாங்கத்தால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதையும் கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் துணையோடு அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடரும் நிலையில், கைதிகளாக உள்ள ரமேஷ், கண்ணன், ராஜூ ஆகியோரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
""மலேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு நாங்கள் வந்து 15 நாட்களாகிவிட்டது. இன்னமும் அதே நிலையில்தான் இருக்கிறோம். நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, இலங்கைக்கு நாடுகடத்திடுவாங்கங் கிற பயம் இருக்குது. ஆனா, இன்னும் நேர்நிறுத்தம் செய்யாமலேயே வைத்திருக்காங்க. விடுவிக்கவு மில்லை.''
"உலக நாடுகளிலிருந்து நிதி வசூலித்து, இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும் புனர்வாழ்வுக்கான வசதிகள் செய்து தருவதாகவும் இலங்கை அரசு சொல்கிற தே? பிறகெதற்கு அங்கிருந்து வெளியேறினீர்கள்?'
""உலக நாடுகளிடமிருந்து பணத்தை வாங்கி, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத்தான் இலங்கை அரசு செயல்படுத்திக் கொண்டிருக் கிறது. வதை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பிவிட் டோம் என வெளியுலகுக்கு காட்டிவிட்டு, மீண்டும் வதை முகாம்களுக்கே திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவமும் சீன அரசும் கூட்டுப்பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களை வதைக்கிறது. இலங்கையில் இனி வாழமுடியாது என்ற நிலைமையில்தான் அங்கிருந்து தமிழர்கள் வெளியேறுகிறார்கள்.''
"பாதுகாப்பற்ற பயணமும், வெளிநாட்டு அரசாங்கத்திடம் சிக்கிக்கொள்ளும் நிலைமையும் தொடர்கிறதே?'
""எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் உலகநாடுகள் பல இருக்கின்றன. கனடா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் எங்களுக்கு குடியுரிமையே வழங்குகிறார்கள். அதனால்தான் அந்த நாடுகளை நோக்கிப் பயணிக்கிறோம். பழைய படகுகளை விலைக்கு வாங்கி, அதில் கடலில் பயணிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எங்களுக்குத் தெரியும். இலங்கை அரசின் வதைமுகாம்களில் சிக்கி மடிவதைவிட, கடல் பயணத்தில் ஏற்படும் ஆபத்தில் சிக்கி, மீன்களுக்கு இரையாவது மேல் என்றுதான் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். சமீபத்தில் கூட ஒரு படகில் வந்த 80 பேரில், 5 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதைத்தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை.''
"இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத் திற்கு வருவது எளிதாக இருக்குமே?'
""தமிழகத்தில் ஏற்கனவே 2 இலட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். மேலும் மேலும் ஒரே இடத்தில் குவிந்தால் ஏற்கனவே உள்ளவர் களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பதாலும், எளிதில் குடியுரிமை கிடைக்கும் நாடுகளுக்குச் செல்லலாம் என்ற அடிப்படையிலும்தான் நாங்கள் வேறுநாடுகளை நாடுகிறோம்.''
No comments:
Post a Comment