Monday, May 24, 2010

பிரகாஷ்ராஜ் யாருடனிருந்தாலும் சந்தோஷமாக இருக்கட்டும்! - லலிதகுமாரி


shockan.blogspot.com


பிரகாஷ் ராஜ் யாருடன் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தால் சரி, என்று கூறியுள்ளார் அவரது முன்னாள் மனைவி் லலிதகுமாரி.

தேசிய விருது பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் தனது மனைவி லலிதாகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு மேக்னா, பூஜா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ்ராஜுக்கும் இந்தி பட டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுக்கும் இடையிலான காதல்தான் இந்த விவாகரத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

மனைவியை பிரிந்த பிறகு போனி வர்மாவுடனான தனது நெருக்கத்தை வெளிப்படையாக காட்ட ஆரம்பித்துவிட்டார் பிரகாஷ் ராஜ்.

அவர் தயாரித்த அபியும் நானும் தமிழ் படத்தை 'நானா நானு கனசு' என்ற பெயரில் கன்னடத்தில் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பு காட்சியில் போனி வர்மாவுடன் வெளிப்படையாகப் பங்கேற்றார். முதல் முறையாக இருவரும் இணைந்து பங்கேற்ற பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிரகாஷ் ராஜ், "விவகாரத்துக்கு பிறகு போனிவர்மாவால் காதல் கிடைத்துள்ளது. அவருடன் பொது விழாக்களில் பங்கேற்பது தவறல்ல" என்று கூறினார்.

இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் என்ற செய்தியையும் பிரகாஷ்ராஜ் மறுக்கவில்லை.

இதுபற்றி பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதாகுமாரியிடம் கேட்டபோது, "பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். பெங்களூரில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்களும் என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு போனிவர்மாவுடன் உள்ள தொடர்பை எனது முன்னாள் கணவர் பிரகடனப்படுத்தி இருப்பது பற்றிசொன்னார்கள். இந்த புது உறவானது அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கட்டும். யாருடனிருந்தாலும் அவர் சந்தோஷமாக இருந்தால் போதும்.

எனது இரு மகள்களின் எதிர்காலம்தான் எனக்கு இப்போது முக்கியம். அதில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன்" என்றார்.

திருமணத்துக்கு முன் மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் லலிதகுமாரி. இப்போது விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். முறியடி என்ற படத்தில் சத்யராஜ் ஜோடியாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment