Thursday, May 20, 2010
சிறையில் சிங்கமுத்து! ஆறியது வடிவேல் மனசு!
shockan.blogspot.com
சிங்கமுத்து மீது வடிவேலு கொடுத்த நில மோசடி புகார், கொலை முயற்சி வழக்கு, வடிவேலுவின் உதவி மேலாளரை தயாரிப்பாளர் கண்ணனுடன் சேர்ந்து சிங்கமுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியது... இப்படி பல புகார்களிலும் போலீஸார் தன்னை கைது செய்துவிடாதபடி முன் ஜாமீன் வாங்கிக் கொண்டே வந்தார் சிங்கமுத்து. இது வடிவேலுவுக்கு ரொம்பவே எரிச்சலை ஏற்படுத்தி வந்தது.
"என்னய ஏமாத்தி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை ஆட்டயப்போட்ட சிங்கமுத்து ஒரு நாளாவது ஜெயில்ல இருந்தாத்தான் என் மனசு ஆறும்' என தனக்கு நெருக்கமானவர் களிடம் அவ்வப்போது சொல்லி வந்தார் வடிவேலு.
கைது செய்ய வாய்ப் பிருந்தும் ஜாதி ரீதியாக சில போலீஸ் அதிகாரிகள் சிங்க முத்துவுக்கு ஆதரவாக செயல்பட்டும் வந்தார்களாம். இதனால்தான் வடி வேலுவுக்கு வயித்தெரிச்சலாம். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மதியம் ராமாவரத்தில் தன் வீட்டில் இருந்த சிங்கமுத்துவை ஸைலண்ட்டாக போய் கைது செய்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த... நீதிமன்ற உத்தரவுப்படி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் சிங்கமுத்து.
""சிங்கமுத்து கைது செய்யப்பட்ட விஷயத்தில் அதிகார துஷ்பிரயோகமும், மனித உரிமை மீறலும் நடந்துள்ளது'' என்கிறார் சிங்கமுத்துவின் வக்கீல் அறிவழகன்.
என்ன குற்றச்சாட்டில் சிங்க முத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்?
வடிவேலுவின் உதவி மேனேஜர் சங்கருக்கு சிங்கமுத்துவும், தயாரிப்பாளர் கண்ணனும் சேர்ந்து ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் "நீ எத்தனை புகார் கொடுத்தாலும் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது. உன்னை தொலைச்சுப்புடுவேன்' என மறுபடியும் நேரில் மிரட்டல் விடுத்தாராம் சிங்கமுத்து. இதையடுத்து மீண்டும் கொலைமிரட்டல் புகார் அளித்தார் சங்கர். இந்த புகாரை பகிரங்கப் படுத்தினால் சிங்கமுத்து உஷாராகி விடுவார் என்பதால் கமுக்கமாக வைத்திருந்து... சிங்கமுத்துவை ஃபாலோ-அப் செய்து கைது செய்துவிட்டதாம் போலீஸ்.
ஆனால் முதல்நாள் கலைஞரை சந்தித்துவிட்டு வந்தார் வடிவேலு. மறுநாள் சிங்கமுத்து கைது செய்யப்பட்டதால் ஒருவித பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விடுமுறையில் சென்றதால் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அடங்கிய டீம்தான் சிங்கமுத்துவை கைது செய்திருக்கிறது. "சும்மா என்கொயரிதான். அதனால் ஸ்டேஷன் வரைக்கும் வந்திட்டுப் போங்க' என போலீஸார் சொல்ல... சிங்கமுத்து பதட்டப்பட வில்லை. தனது வக்கீல் உட்பட சிலருக்கு போன் போட்டு பேசிவிட்டு கிளம்பியிருக்கிறார். ஆனால் விருகம்பாக்கம் ஸ்டேஷனில் வைத்து "உங்களை கைது பண்ணிருக்கோம்' என போலீசார் சொல்ல... கிறுகிறுத்துப் போனார் சிங்கமுத்து. "எல்லா புகார்லயும் முன்ஜாமீன் வாங்கிட்டேனே. இப்ப எதுக்காக கைது பண்ணிருக்கீங்க?' என கேட்க... இன்னிக்கி காலைல வடிவேலு ஆபீஸ்ல போய் மிரட்டல் விடுத்ததா கம்ப்ளைண்ட்' என போலீ ஸார் சொல்லியிருக்கிறார்கள். "காலைல இந்தப் பக்கமே வரலியே?' என சிங்கமுத்து கேட்க... "புகாரின் பேரில் அரெஸ்ட் பண்ணீருக்கோம். மத்தத கோர்ட்ல பார்த்துக்கங்க' எனச் சொல்லிவிட் டார்கள். சிங்கமுத்துவிடம் போலீஸார் ஃப்ரெண்ட்லியாகவே பேசியதால் "ஒரலுக்குள்ள தலைய குடுத்தாச்சு. இனிமே ஒலக்கைக்கி பயந்து என்னாகப் போகுது?' என தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு.... சிறை வாசத்தை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாராம்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது.... "என்னய ஜெயில்ல வச்சு பாக்கணும்னு வடிவேலுவுக்கு ரொம்ப ஆச. அது நிறைவேறிடுச்சு' எனச் சொல்லிவிட்டுப் போனார் சிங்கமுத்து.
வடிவேலு "இளைஞன்' படத்திற்காக ஊட்டியில் இருப்பதால் செல் சிக்னல் பிரச்சினையால் அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதுகுறித்து வடிவேலு வட்டாரங்களில் விசாரித்தோம்.
""ரெண்டு நாளைக்கி ஒரு தரம் மிரட்றதே சிங்கமுத்து வேலையாப் போச்சு. நாங்களும் அதை பெருசா எடுத்துக்கல. 15-ந் தேதி சாயங் காலமெல்லாம் வடிவேலு அண்ணன் ஷூட்டிங் கிற்காக ஊட்டி கிளம்பிட்டாரு. அண்ணன் ஊர்ல இல்லாததை தெரிஞ்சுக்கிட்டு திரும்ப வும் மிரட்டினாரு சிங்கமுத்து. "என்னப்பத்தி புகார் கொடுத்தா அம்பது பேரு ஒங்க வீட்டுக்கு வருவாங்கடியேய்'னு எகத்தாளமா சொன்னாரு. இதுக்கு மேலயும் பொறுக்க முடியாதுன்னுதான் திரும்பவும் கம்ப்ளைன்ட் குடுத்தோம். கலைஞர் கதை எழுதுற "இளைஞன்' படத்தில் நடிப்பதால் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா உட்பட யூனிட் ஆட்களோட போய்த்தான் கலைஞரிடம் ஆசி வாங்கினார் வடிவேலு. இந்த பிரச்சினையெல்லாம் பேசல. ஆனா சிங்கமுத்து ஆளுங்க தப்பா கிளப்பிவிடுறாங்க. போலீஸ்தான் சிங்கமுத்துவ கைது பண்ணுச்சு. கோர்ட்டு தான் சிங்க முத்துவை ஜெயிலுக்கு அனுப்பினது. ஆனா... வடிவேலு ஆசைப்படி நடந்திருச்சுனு சொல்றாரு. வடிவேலு ஆசைப்பட்டதுக்காக வெல்லாம் ஒருத்தர ஜெயிலுக்கு அனுப்பிற முடியுமா? தப்பு செஞ்சாரு சிங்கமுத்து. அதுக்கான பலனை சட்டம் அவருக்கு தரத்தான் போகுது'' என்றார்கள்.
ஜெயிலில் அடைக்கப்பட்ட சிங்கமுத்து வுக்கு முதல்வகுப்பு தரப்பட்டதால் சகல வசதிகளும் கிடைத்திருக்கிறது. வீட்டிலிருந்து அசைவச் சாப்பாடு தர அனுமதிக்கப்பட்டிருக்கு. செல் மூலம் தனது முக்கிய நண்பர்கள், உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். "நான் வில்லன்னா வடிவேலுவும் வில்லன்தான். அப்பாவி போல இருக்கிறதால எல்லாருமே வடிவேலுவுக்கு சப்போர்ட்டா இருக்காங்க சார்' என்றபடி வடிவேலு போல பேசியும், நடித்தும் சிறை அதிகாரிகளை குஷிப்படுத்தி வருகிறாராம் சிங்கமுத்து.
சமீபத்தில் மன்னார்குடியிலுள்ள தன் சம்பந்தி வீட்டுக்குப் போன சிங்கமுத்து "தன்னை கைது செய்ற நிலைமை வரக் கூடாது. இந்தப் பிரச் சினைகளிலிருந்து சீக்கிரமே விடுபடணும்' என கோயில் குளங்களுக்குப் போய் பரிகாரம் செய்தாராம். ஆனாலும் கைது சம்பவம் நடந்துவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment