Monday, May 24, 2010

பெசன்ட் நகரில் அஜீத் பெருமைப்படும் அண்ணன்


shockan.blogspot.com
உலகமே கொண்டாடுகிற தம்பியை 'ஒரு வாய் சாப்ட்டு போ'ன்னு சொல்ற பாக்கியம் யாருக்கு வாய்க்கும்? தெரிஞ்சுக்கணும்னா நீங்க பெசன்ட் நகர் வரைக்கும் விசிட் அடிக்கணும். அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் அண்ணன் அனு£ப், பெசன்ட் நகர் பகுதியில் ஒரு ரெஸ்ட்ராரெண்ட் வைத்திருக்கிறார். சைனிஷ் வகை உணவுக்கூடமான இந்த ஹோட்டலுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கிறார் அஜீத்.

அதுவரைக்கும் இது யாரோட ஹோட்டல்னு தெரியாமலே ருசிக்காக வந்து கொண்டிருந்த மக்கள், இப்போதெல்லாம் தல தெரியுமான்னு வர ஆரம்பிச்சிருக்காங்களாம். வர்ற கூட்டத்தை பார்த்தா இதை டூரிஸ்ட் ஸ்பாட்டாவே ஆக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு ஜேஜே...!

நேரம் கிடைச்சா குடும்பத்தோடு ஸ்டார் ஹோட்டல்களுக்கு விசிட் அடிக்கும் அஜீத், இங்கு வர ஆரம்பித்தது எதனால்? வேறொன்றுமில்லை. இங்குள்ள சமையல் கலைஞர்கள் தலயின் விசிறிகளாம். சாரை வரச்சொல்லுங்க என்று அவர்கள் அனு£ப்பிடம் கோரிக்கை வைக்க, அன்புக்கு வணங்கிதான் அடிக்கடி இங்கே செல்கிறாராம் அஜீத்.

இது ஊழியர்களுக்கான சலுகை என்றாலும், உட்கார்ந்த இடத்திலேயே கல்லா நிரம்புவதால் கன்னாபின்னா சந்தோஷத்தில் இருக்கிறார் அனு£ப். (ஹ¨ம், அனு£ப்பை வச்சு ஒரு ஸ்கூப், அப்பாடா)

No comments:

Post a Comment