Sunday, May 16, 2010
நடிகருக்கு திருமணம் குவியும் திரையுலகம்
shockan.blogspot.com
நாடோடிகள் என்று சொல்லிக் கொள்கிற மாதிரி படங்களில் நடித்த விஜய், தனது பேச்சுலர் வாழ்க்கையிலிருந்து ஃபேமிலி வாழ்க்கைக்கு ஷிப்ட் ஆகப் போகிறார். "மனைவி வந்த ராசிதான் நான் ஸோலோ ஹீரோவா ஆகிட்டேன் போலிருக்கு" என்று விஜய்யே வியக்க, முகமெல்லாம் பூரிப்போடு இன்விடேஷனை நீட்டினார்கள் மாப்பிள்ளை தரப்பிலிருந்து. மணமகள் பெயர் நித்யா. வருகிற 19 ந் தேதி சென்னை காமராஜர் ஹாலில் கல்யாணம். (அப்பா காங்கிரஸ் எம்எல்ஏ என்பதால் கல்யாணத்தையும் தலைவர் பேர் கொண்ட இடத்திலேயே வைத்திருக்கிறார் போலிருக்கிறது)
"இதுவரைக்கும் நடிச்சது ஒரு அனுபவம் என்றால் இனிமே வரப்போறது தனி அனுபவம்" என்கிறார் விஜய். வேறொன்றுமில்லை. இது நடிக்கிற ஏரியாவுக்கான தனி ஆவர்த்தனம். மதில் மேல் பூனை, தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் ஆகிய இரு படங்களில் தனி ஹீரோவாக நடிக்கிறாராம். பொண்ணுகிட்ட முதல்ல என்ன பேசினீங்க? கேட்டால், கருத்த முகத்தில் கவிதையாய் வெட்கம். "அதுவா.... நான் சினிமாவுல தொடர்ந்து நடிப்பேன். அதுக்கு நீங்க சம்மதிப்பீங்களா? இதுதான் நான் அவங்ககிட்ட பேசின முதல் பேச்சு. அவங்க சரி சொன்ன பிறகுதான் பொண்ணையே பிடிச்சுருக்குன்னு சொன்னேன்".
"ஷோ ரூம், சேனல், சினிமான்னு நிறைய வேலைகள் இருக்கு. நம்ம வேலையை பகிர்ந்துக்க ஒரு ஆள் வேணும் இல்லையா. அதுக்கு பொறுத்தமாகவும் இருப்பாங்க நித்யா" என்றார் விஜய்.
இவரது பெரியப்பா குமரி அனந்தன் தாலி எடுத்துக் கொடுக்க, மங்கள மேளம் முழங்க மாங்கல்யத்தை அணிவிப்பாராம் விஜய். 'பின்னாடி கட்சிக்கும் நேரம் ஒதுக்குங்க' என்று கூட்டத்தில் ஒருவர் ஐடியா கொடுக்க, "அதுக்கென்ன. செஞ்சுட்டா போச்சு" என்ற விஜய்யிடம் இப்பவே வந்திருந்தது ஒரு சிட்டிங் எம்எல்ஏ வுக்கான தொணியும் தோரணையும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment