Friday, May 21, 2010
நித்யானந்தா பிடியில் மனைவி, மகன்கள்-மீட்டுத் தருமாறு கணவர் கண்ணீர்
shockan.blogspot.com
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் நெல்லை போலீஸ் கமிஷ்னரிடம் கணவர் புகார் தந்துள்ளார்.
பாளையங்கோட்டை சாமாதனபுரம் பேரின்ப தெருவை சேர்ந்த பழ வியாபாரி சகாய ஜார்ஜ். இவரது மனைவி ஆரோக்கிய விமலா. இவர்களுக்கு அருண் பிரகாஷ், அஜய் அண்ட்ரோ ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஆரோக்கிய விமலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது நெல்லை விடுதியில் தங்கியிருந்த சேலம் ஆத்தூரை சேர்ந்த ஓஷோ மணி என்பவர் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து அவரை சந்திக்க சகாய ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.
அங்கு ஓஷோ மணி தன்னை நித்யானந்தாவி்ன் சீடர் என்றும், அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்ப்பேன், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய ஜார்ஜ் தனது மனைவிக்கு அவரிடம் சிகி்ச்சையைத் துவக்கினார். நாளடைவில் ஓஷோ மணி, ஜார்ஜ் வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தார். ஆரோக்கிய விமலாவுக்கு அக்கு பஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50,000 வரை வாங்கிக் கொண்டார்.
அப்போது நித்யானந்தாவி்ன் பெருமைகளை கூறி விமலாவுக்கு ருத்ராட்ச மாலை ஒன்றை அணிவித்தார். இதையடுத்து நித்யானந்தாவின் தீவிர பக்தையான விமலா வீடு முழுக்க நித்யானந்தாவின் படங்களை வைத்து பூஜிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து ஓஷோ மணியின் வசீகர பேச்சு, நித்யானந்தாவின் கேசட் சொற்பொழிவுகளைக் கேட்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு ஓஷோ மணியுடன் பெங்களூர் ஆசிரமத்திற்கே அழைத்து சென்று விட்டார்.
இந் நிலையில் நித்யானந்தா ஆசிரம பாலியல் லீலைகள் வெளியானசையடு்த்து சகாய ஜார்ஜ், ஓஷோ மணியிடம் போனி்ல் பேசினார். ஆனால், அவர் பிடி கொடு்க்காமல் பேசினார்.
இதையடுத்து மனைவி குழந்தைகளைப் பார்க்க பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சகாய ஜார்ஜ் சென்றார். ஆனால், ஆசிரம நிர்வாகிகளும் நித்யானந்தாவின் சீடர்களும் அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் அவர் ஓஷோ மணியைத் தேடி சென்னை, சேலம் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியே பல நாட்கள் அலைந்து திரிந்ததால் அவர் வேதனை அடைந்த ஜார்ஜ் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் அபஸ் குமார் சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில் தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்து சென்ற ஓஷோ மணி, மற்றும் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்து மனைவி, மகன்களை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
சகாய ஜார்ஜ் ஏற்கனவே 2008ம் ஆண்டும் இதுகுறித்து புகார் செய்ததாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடு்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment