Saturday, May 15, 2010
மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
shockan.blogspot.com
மும்பை : 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் படுதோல்விக்கு ஐ.பி.எல்., நள்ளிரவு 'பார்ட்டிகளே' காரணம் என கேப்டன் தோனியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் இன்று அணியின் தோல்விக்கு காரணம் குறித்து ஆய்வு செய்த அறிக்கையை அணி மானேஜர் ரஞ்சிப் பிஸ்வால் பி.சி.சி.ஐ.,யிடம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் வீரர்கள் சரியான பயிற்சி எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அலட்சியமாக இருந்துள்ளனர் என்றும் குறை கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கையில் ஒரு சில வீரர்களின் போக்கை தனிப்பட்ட முறையில் கோடிட்டு காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்னும் ஒரிரு நாளில் வீரர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும் என கிரிக்கெட் வட்டாரம் கூறுகிறது.
இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடந்தது. இதில் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நள்ளிரவு 'பார்ட்டிகள்' நடந்தன. முன்னணி வீரர்களும் பங்கேற்று, இரவு நேரத்தை உற்சாகமாக கழித்தனர். 'பேஷன் ஷோ', வெளிநாட்டு மாடல்கள், நடனப் பெண்கள் என கவர்ச்சி அம்சங்கள் ஏராளமாக அரங்கேறின. மதுவும் தாராளமாக பரிமாறப்பட்டது. 'இப்பார்ட்டியில்' பங்கேற்க விரும்பும் ரசிகர்களிடம் இருந்து ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. இத்தகைய 'பார்ட்டிகள்' தான் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த 'பார்ட்டிகளில்' அரங்கேறிய சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. விரும்பிய பெண்ணுடன் உற்சாகம், மதுபானத்தில் மிதப்பது, போதை பொருட்களை பயன்படுத்துவது என வீரர்கள் மிகுந்த உல்லாசமாக இருந்துள்ளனர். அதிகாலை 4 மணி வரை ஆட்டம் நீடித்ததால், உடல் அளவில் சோர்ந்து போயுள்ளனர்.
அதிகாலை 4 மணி: ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டல்களில் தான் நடந்தன. இதனால், 'பார்ட்டிகளை' அவர்களால் தவிர்க்க முடியவில்லை. 'ரூமில்' சும்மா இருந்தால் கூட கீழே போய் 'ஜாலியாக' இருக்க வேண்டியது தானே என கூறுவார்களாம். சரி ஒரு அரைமணி நேரம் பொழுதை கழிக்கலாம் என 'ரூமை' விட்டு வெளியேறும் வீரர்கள், 'பார்ட்டி' மயக்கத்தில் அதிகாலை 4 மணி வரை மூழ்கி விடுவார்களாம்.
முதலில் பேஷன் ஷோ சுமார் 45 நிமிடங்கள் நடக்குமாம். இதில் பங்கேற்ற மாடல்கள், பின் வீரர்களுடன் கலந்து சகஜமாக பேசுவர். இவர்களை தவிர, எதற்கும் 'துணிந்த' சில பெண்களும் கலந்து கொள்வார்கள். இவர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு உல்லாசமாக இருப்பார்களாம். சிகரெட், உயர் ரக மதுபானம், சில நேரங்களில் போதை மருந்துகள் என அனைத்துமே இலவசமாக கிடைக்கும். இந்த 'பார்ட்டியில்' இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் ஆகும். அடுத்து போட்டிகள் இருந்ததால், வீரர்கள் சோர்ந்து போயினர். இதே களைப்புடன் யுவராஜ், காம்பிர், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா போன்ற வீரர்கள் உலக கோப்பை தொடருக்கும் சென்றதால், மிகுந்த ஏமாற்றம் அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment