Sunday, May 16, 2010
கொலை மிரட்டல் புகார்: நடிகர் சிங்கமுத்து கைது
shockan.blogspot.com
நடிகர் வடிவேலு, நடிகர் சிங்கமுத்து மீது போலீசில் கொடுத்த கொலை மிரட்டல் புகார் தொடர்பாக நடிகர் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடிகர் வடிவேலுவும், நடிகர் சிங்கமுத்துவும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்து புகழடைந்தவர்கள், நண்பர்களாக இருந்த இருவரும் திடீரென ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புகார் தெரிவித்துக் கொண்டனர்.
தனக்கு நிலம் வாங்கித் தருவதாக ரு 7 கோடியை நடிகர் சிங்கமுத்து ஏமாற்றி விட்டதாக நடிகர் வடிவேலு போலீசில் புகார் அளித்தார். அதே போல தன்னை கொலை செய்ய ஆட்களை அனுப்பி மிரட்டுவதாக வடிவேலு மீது சிங்கமுத்துவும் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் வடிவேலுவின் அலுவலகத்திற்கு சிங்கமுத்து ஆட்கள் வந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தாக வடிவேலு மீண்டும் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சிங்கமுத்து மற்றும் அவர் நண்பர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சிங்கமுத்து நீதிமன்றத்தை அணுகி கைதாவதிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இன்று நடிகர் வடிவேலு போலீசில் கொடுத்த புகாரில் '' தன்னையும் தன் குடுபத்தையும் கொலை செய்துவிடுவதாக சிங்கமுத்து கொலை மிரட்டல் விடுத்தார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு தொடர்ந்த சென்னை மாநகர போலீசார் நடிகர் சிங்கமுத்துவை கைது செய்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்து புழல் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment