Saturday, May 22, 2010

மறைந்து போன தூய்மை!



shockan.blogspot.com

ஆயிரம் விளக்கு சுயமரியாதை தீபம்... 18-ந் தேதி அதிகாலை அணைந்துவிட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலை வர்களுக்கு மிகவும் பரிச்சயமான கணியூர் குடும்பத்தில் இருந்து வந்த திராவிட தீபம் அது.

எம்.ஜி.ஆர். 1972-ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்தபோது... அதில் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர். இரண்டாவது உறுப்பினராக உறுப்பினர் படிவத்தில் கையெ ழுத்து போட்ட பெருமைக்குரியவர் கே.ஏ.கே. ’"எனது கடைசி மூச்சு உள்ள வரை... நான் அ.தி. மு.க.வில்தான் இருப்பேன்'’ என அப் போது சூளுரைத்த கே.ஏ.கே. மனக்கசப் புக் காலங்களில் கூட படிதாண்ட மறுத்து... சொன்ன மாதிரியே கடைசி மூச்சுவரை அ.தி.மு.க.விலேயே இருந்து கரைந்திருக்கிறார்.

கடந்த 3 மாதங்களாக இருதயப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த கே.ஏ.கே.வுக்கு... அதிகாலை ஏற்பட்ட மூச்சுத் திணறல்தான்.... அவரது மூச்சுக்கு முற்றுப்புள்ளியாகிவிட்டது. கே.ஏ.கே. மறை வுத் தகவல் கேட்டதும் அதிர்ந்துபோன கலைஞர்...’ "கிட்டு இறந்துட்டாரா? அடடா... திராவிட இயக்கப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கணியூர் குடும்பத்தில் இருந்து வந்தவராச்சே... நான் நேரில் போய் அஞ்சலி செலுத்தியே ஆகணும்'’ என்றபடி காலையிலேயே ஸ்டாலின் சகிதம் அவ்வை துரைசாமி சாலையில் இருக்கும் கே.ஏ.கே. வீட்டுக்கு வந்துவிட்டார்.





கலைஞரை எதிர்பார்க்காத கே.ஏ.கே. குடும்பத்தினர் திகைத்துப்போனார்கள். கே.ஏ.கே.வின் மூத்த மகன் அருண் ஓடிவந்து கலைஞரிடம் கண்ணீர் உகுக்க... ""எங்கேய்யா கிட்டு? நான் பார்க்கணும்''’என்றார் கலங்கிய விழிகளுடன். கலைஞரின் துயரத்தைக் கண்டு கண்ணீர்விட்ட கே.ஏ.கே.வின் உறவினர்கள்... “""ஐயா... உடல் முதல் மாடியில் இருக்கு. அங்க நீங்க போக லிஃப்ட் வசதி கூட இல்லைங்கய்யா''’என்றனர். ஒரு கணம் திகைத்த கலைஞர்.. ஸ்டாலினிடம் மலர் வளையத்தைத் தொட்டுக் கொடுத்து... அஞ்சலி செலுத்திவரச் சொன்னார். ஸ்டாலின் அஞ்சலி செலுத்திவிட்டு வந்ததும்... கொஞ்சநேரம் கே.ஏ.கே. வீட்டின் முகப்பிலேயே இருந்துவிட்டு சோகத்தோடு கிளம்பினார் கலைஞர்.

கே.ஏ.கே.வின் வீடு கனத்த சோகத்தில் இருக்க... அவரது தலைமாட்டில் மகன்கள் அருண், முகில், மகள்கள் மாங்கனி, கயல் ஆகியோர் கண்ணீருடன் அமர்ந் திருந்தனர். பொன்னையன், சைதை துரைசாமி போன்ற ஒருசில அ.தி.மு.க. புள்ளிகளை மட்டுமே அந்த வீட்டில் பார்க்க முடிந்தது. நம்மிடம் துக்கம் பகிர்ந்துகொண்ட பொன்னையன் ""கே.ஏ.கே. எம்.ஜி.ஆருக்கு வலதுகரமா இருந்தவர். சீரணி அரங்கில் அவருக்கு புரட்சித்தலைவர் பட்டத்தைக் கொடுத்தவரே கே.ஏ.கே.தான்'' என்றார் கண்களைத் துடைத்துக்கொண்டே.

வருவாரா... மாட்டாரா? என சில ர.ர.க்கள் கிசுகிசுத்துக்கொண்டிருக்க... ஜெ’ மதியம் 3.10-க்கு சசிகலா சகிதம் வந்துசேர்ந்தார். ஓடிவந்து கதறிய கே.ஏ.கே பிள்ளைகளுக்கு “தைரியமா இருங்க’’ என ஆறுதல் சொன்னார். கே.ஏ. கே.வின் உடல் முதல் மாடியில் இருப்பதை அவரிடமும் உற வினர்கள் சொல்ல... "படி யேறுவது கஷ்டமாச்சே'’என்ற ஜெ’ சசிகலாவிடம் மாலையைக் கொடுத்து மாடிக்கு அனுப்பி னார். சசிகலா கீழே வந்ததும் அவருடன் புறப்பட்டுவிட்டார்.

நம்மிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட கே.ஏ.கே.வின் உறவினர்கள், ""எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 9ஆண்டுகளும் ஜெ’ ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளுமாக மொத்தம் 14 வருடங்கள் அமைச்சராக இருந்தவர் கே.ஏ.கே. இருந்தும் கடைசிக் காலத்தில் பொருளாதார நெருக்கடியிலேயே இருந்தார். காரணம் அவரோட நேர்மை. இந்த நிலையில் அவரோட மனைவி புனிதவதி 4 வருடங்களுக்கு முன்ன இறந்துபோயிட்டார். தன் மனைவி மீது உயிரையே வைத்திருந்த கே.ஏ.கே. அப்பவே உடைந்து போய்விட்டார். அவரோட மன உறுதியும் குலைந்துபோயிடுச்சி. அதோ அவர்தான் மருத்துவ செலவுக்காக பல லட்ச ரூபாய்களை இவருக்காக செலவிட்டவர்''’என பிரமுகர் ஒருவரை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அவர் அ.தி.மு.க.வில் தீவிரமாக செயலாற்றிவிட்டு... தற்போது சமூக சேவையில் தன்னை முழுதாக அர்ப்பணித்துக்கொண்டு வாழுகிறவர். அவரை நெருங்கினோம்.... துயரம் தோய்ந்த வார்த்தைகளால் பேச ஆரம்பித்த வர்...’’""நானும் எம்.எல்.ஏ.வா இருந்தவன். எத்தனையோ பேரை பதவியில் பார்த்தவன். என் அனுபவத்தில் பொதுவாழ்க்கையில் கே.ஏ.கே. மாதிரி தூய்மையாளரைப் பார்ப்பது அரிது. இவரைவிட்டா ஆர்.எம்.வீ.யைத்தான் சொல்ல முடியும். அவர் அமைச்சரா இருந்த நேரம். அப்ப ஆட்டோ பர்மிட் வாங்கறதே பெரிய காரியம். அப்ப அவர்ட்ட உங்க கூட உள்ள கட்சிக்காரங்களுக்கு பர்மிட் வாங்கி கொடுத்து உதவலாமேன்னு கேட்டேன். அதுக்கு அவர்... "அடுத்தவங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதே ஒருவகையில் ஊழல்தான்ப்பா'ன்னு சொன் னார். அவர் 14 வருடம் அமைச்சரா இருந்து அனு பவிச்சதுன்னு பார்த்தா.. மசால்வடை, பகோடா, மிச்சர் இதுதான். என்னுடைய தூய் மையான வாழ்க்கைக்கு ரோல்மாடல் அவர்தான். அப்படிப்பட்டவருக்கு செய்த செலவுகளைச் சொல்லி... அவரை நான் சிறுமைப்படுத்த மாட்டேன்''’என்றபடி கைக் குட்டையால் கண்களை ஒற்றிக்கொண்டார்.

19-ந் தேதி பிற்பகலில் பெசண்ட் நகர் மின் மயானம் நோக்கி கே.ஏ.கே.வின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. வெறும் 50, 60 பேர் மட்டுமே அணிவகுத்தனர். அப்போது நம்மிடம் குமுறலோடு பேசிய அந்த ர.ர.,

""எம்.ஜி.ஆரின் வலதுகரமா இருந்த கே.ஏ.கே. இழப்புக்காக அ.தி.மு.க. ஒரு வாரத் துக்காவது துக்கம் அனுஷ்டிக்க வேணாமா? ஒரு மூன்று நாளைக்காவது கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அம்மா அறிவிச்சிருக்கவேணாமா? ஆனா அம்மாவுக்கு திராவிடத் தலைவர்கள்னாலே ஏனோ வெறுப்பா இருக்கு.'' என்றார் கோபமாக.

No comments:

Post a Comment