Monday, May 24, 2010

விஜய்க்கு தங்கச்சி...விரும்பி வந்த பார்வதி!


shockan.blogspot.com
உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளைங்கிற மாதிரியே மார்க்கெட்ல முதலிடத்தில் இல்லேன்னாலும், மனசையெல்லாம் கொள்ளையடிச்சுட்டு போனவர் பார்வதி. பூ படம் பார்த்தவங்களுக்கு புரிஞ்சுருக்கும் இந்த பில்டப்பெல்லாம் அவரு நடிப்புக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லங்கறது.

மத்திய அரசு கொடுத்தால்தான் விருதா? அதுக்கு இணையா மரியாதையை ஏற்படுத்தி தர்ற டைரக்டர் பாலா தன்னுடைய படத்தில நடிக்க அழைக்கிற அளவுக்கு முன்னணி இயக்குனர்கள் மனசில இடம் பிடிச்ச நடிகை பார்வதி. பூ வுக்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் தமிழிலிருந்து போனாலும், எல்லாமே மரத்தை சுற்றி மங்காத்தா பாடுற டைப்பாகவே இருந்ததால், கேரளாவே கதி என்று இருந்துவிட்டார் பார்வதியும்.

இந்த நேரத்தில்தான் ஜெயம் ராஜா இயக்கவிருக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறாராம். முதலில் கதை. அப்புறம்தான் மற்றதெல்லாம் என்ற நிபந்தனையோடு கதை கேட்ட பார்வதி மனசு நிறைய சந்தோஷத்துடன் ஓ.கே சொல்லிவிட்டாராம்.

பார்வதி நடிச்சா படம் நல்லாதான் இருக்கும். எஸ்எம்எஸ் குறும்பர்களே, இந்த முறையாவது கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா....

No comments:

Post a Comment