Saturday, May 15, 2010

அமிதாபுக்கு அப்புறம் சூர்யாதான் டாப்!''


shockan.blogspot.com
நாகார்ஜுனாவை ஹீரோவாக அறிமுகப்படுத்திய தெலுங்குப் படம் "உதயம்' என்ற பெயரில் தமிழில் வெற்றிப் படமாக பதிவானது. ராம் கோபால் வர்மா என்ற இயக்குநரும் நமக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக தெலுங்கு, இந்தி படங்களை இயக்கி இந்தியா முழுக்க பெயர் பெற்ற இயக்குநராக அறியப்பட்டு வருகிறார். இவர் படங்களின் கதை உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் அமையும். வன்முறை தூக்கலாக இருக்கும். அவர் இப்போது சூர்யாவை கதாநாயகனாக்கி, தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் "ரத்த சரித்திரம்' படத்தை இயக்கி இருக்கிறார்.

இதுவும் ஆந்திராவில் நடந்த ஒரு உண்மைச் சம்ப வத்தின் அடிப்படையில் உருவான திரைக்கதைதான்!

""எனது 20 ஆண்டுகால அனுபவத் தில் வெளிச்சம் படாத மக்களின் வாழ்க்கையைப் படமாக்குவதையே செய்திருக்கிறேன்.

ரவி என்கிற மனிதரின் வளர்ச்சி, அதிகாரம், அரசியல் பற்றி நான் தொடர்ந்து தெரிந்து வைத்திருந்தா லும், ஆந்திராவில் "ராமா நாயுடு ஸ்டுடியோ' அருகே ரவியை கொல்ல நடந்த வெடிகுண்டு சம்பவத்தில்தான் சூரி என்கிற மனிதரைப் பற்றி அறிந் தேன். இந்த இரண்டு கதாபாத்திரங் களும் என்னை ஆச்சரியப்படுத்தின. சூரியின் பழிவாங்கும் உணர்வு, தண்டனைக்காக அடைக்கப்பட்ட சிறையிலும் தணியாமல் இருந்தது. சிறையிலிருந்தபடியே ரவியைப் பழிவாங்கும் முயற்சியில் சூரி வெற்றி பெற்றார்.

இந்தப் படத்திற்காக ரவி, சூரி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு நபர்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தினேன். சூரியின் குடும்பத்தையும் சந்தித்து, உணர்வுகளைப் பதிவு செய்தேன். சிறப்பு அனுமதி பெற்று ரவி கொலை வழக்கில் அனந்தப்பூர் சிறையில் இருக்கிற சூரியையும் நேரில் சந்தித்து, திரைக்கதைக்குத் தேவையான விஷயங்களைப் பெற் றேன். போலீஸ் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை, சாட்சிகள் போன்ற ஆதார சேகரிப்பும் திரைக் கதைக்குப் பெரிதும் உதவியது.

இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில் நடந்த ரத்தம் உறையும் திருப்பங்கள் நிறைந்த "ரத்த சரித்திரத் தின்' பின்னணியில் ஜாதி, அரசியல், அதிகாரம், விதி, குடும்பம், குற்றம் போன்ற காரணிகள் எடுத்த விஸ்வ ரூபத்தை திரையில் காணலாம்.

"ரத்த சரித்திரத்தை' படமாக்க முடிவு செய்தபோதே, "சூர்யாதான் இந்தப் படத்தின் நாயகன்' என்பதையும் சேர்த்தே முடிவு செய்தேன். படத்திற்கு நாயகனாக மட்டும் இல்லாமல், கதையின் நாயகனாகவும் அற்புதமாகப் பொருந்துகிறவர் சூர்யா. "இதுவரை நான் இயக்கிய நடிகர்களில் அமிதாப் பச்சனை அடுத்து "பவர்புல்' கண்களையுடைய நடிகர் இந்திய அளவில் சூர்யாதான். இந்தக் கதாபாத்திரத்தின் கனத்தைத் தாங்கும் உழைப்பும், திறமை யும் அவரிடம் இருப்பதை சூர்யா நடித்த "காக்க... காக்க...', "கஜினி' திரைப்படங் களைப் பார்த்து உணர்ந்தேன். "ரத்த சரித்திரம்' படத்தில் புதிய சூர்யாவை எதிர்பார்க்கலாம்''என்கிறார் வர்மா.

இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்தபோது பாலா மோல்டு பண்ணிய சூர்யாவின் ஆக்ரோஷத்தை நினைவுபடுத்த வேண்டி இருந்தது.

மூன்று மொழிகளிலும் சூர்யாவே டப்பிங் பேசி இருக்கிறார். அதற்காக மதுரையிலிருந்து ஒரு இந்தி வாத்தி யாரை வரவழைத்து இந்தி கற்றிருக்கி றார். மனைவி ஜோதிகாவும் இந்திப் பெண் தானே? அவரும் கணவரை மாணவ னாக்கி இந்தியில் பேசப் பழகி டப்பிங் பேசி இருக்கிறார்.

"ரத்த சரித்திரம்' படத்தில் தம்பி கார்த்தியோடு "பருத்தி வீரனில்' ஜோடி போட்ட ப்ரியாமணியோடு அண்ணன் சூர்யா ஜோடி சேர்ந்திருக் கிறார். விவேக் ஒபராய் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

"ரத்த சரித்திரம்' படத்தை தயாரிப் புத் துறையில் பெயரும் புகழும் பட்டங்களும் பெற்ற மது மன்தேனா, ஷீத்தல் வினோத் தல்வார் இணைந்து சினெர்ஜி நிறுவனத்தின் சார்பாகத் தயாரித்துள்ளனர்.

ஆக, சூர்யா இந்திய அளவில் அறிமுகமாகப் போகிறார். சிவகுமார் கொடுத்து வைத்த அப்பா!

No comments:

Post a Comment