Wednesday, May 26, 2010

நிபுணர் குழு: இலங்கையின் எதிர்ப்பை நிராகரித்தார் பான் கி மூன்


shockan.blogspot.com
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க நிபுணர் குழு அமைக்கக் கூடாது என்ற அந் நாட்டின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.

ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.

இது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது போன்றதாகும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரீஸ் கூறியிருந்தார்.

இலங்கையில் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அதிபர் மகிந்த ராஜபக்சே 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் என்றும், அதை அமெரிக்கா வரவேற்றுள்ள நிலையில், நிபுணர் குழு அமைக்க ஐ.நா. முடிவெடுத்திருப்பது தங்கள் நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது போன்றதாகும் என்றார் பெரீஸ்.

நேற்று நியூயார்க்கில் பான் கி மூனைச் சந்தித்தபோதும் பெரிஸ் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். ஆனால், அதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நிராகரித்துள்ளார்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களைப் பொறுப்பாக்குவது குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கும் பணி தொடரும் என்று பான் கி மூன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment