Saturday, May 15, 2010
பிரபாகரன் தாயாரின் நிலமை!
shockan.blogspot.com
முதல்வர் கலைஞரின் தீவிர முயற்சியில், தமிழகத் தில் தங்கி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள பார்வதியம்மாளுக்கு அனுமதி தந்தது மத்திய அரசு. இதற்காக 6 மாதகால விசாவை வழங்குமாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவும் பிறப்பித்தது மத்திய உள்துறை அமைச்சகம். இதனை கடந்த 10-ந் தேதி காலை 10 மணிக்கு சட்டப் பேரவையில் அறிவித்தார் முதல்வர் கலைஞர்.
இந்நிலையில், பார்வதியம்மாள் தமிழகம் செல்லும் தடை நீங்கியது, இனி நவீன மருத்துவ சிகிச்சை அவருக்கு கிடைக்கும், விரைவில் தமிழகம் செல்வார் என்றெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்... 10-ந் தேதி இரவோடு இரவாக திடீரென்று பார்வதியம்மாள் இலங்கைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ள சம்பவம் தமிழர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பார்வதியம்மாளை மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்ற இலங்கை நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் இது பற்றி கேட்டபோது, ""ஏப்ரல் 16-ல் தமிழகம் வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியது இந்திய அரசு. அதன் பிறகு மலேசியாவில் தங்கியிருக்க 1 மாத கால விசாவைப் பெற்றோம். அந்த விசா இந்த மாதம் மே 17-ல் முடிகிறது. இதனை நீட்டிக்க முடியாததால் கடந்த 7-ந் தேதி மலேசியாவிற்கு சென்றேன். மலே சியாவிலிருந்து தமிழகத்திற்கோ கனடாவிற்கோ பார்வதியம்மாள் செல்ல அனுமதி கிடைக்காத நிலை யில் மீண்டும் இலங் கைக்கே அழைத் துச் செல்லுமாறு பார்வதியம்மாளின் மகளிடமிருந்து எனக்கு தகவல் தரப் பட்டது. அதனை யொட்டிதான் இலங்கை சென் றோம்'' என்றார்.
""பார்வதியம்மாள் தமிழகம் வர மத்திய அரசு அனுமதி தந்துள்ளதை 10-ந் தேதி காலையிலேயே முதல்வர் கலைஞர் அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே பதிவு செய்யப் பட்டதாக நீங்கள் கூறும் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு தமிழகம் வருவதற்கு நீங்கள் முயற்சித்திருக்கலாமே?'' என்றபோது, ""சட்டப் பேரவையில் அவர் அறிவித்த செய்தி எனக்கு .மாலையில் தெரிய வந்தது. அதன் விபரத்தை பார்வதியம்மாளின் மகளிடம் தொடர்பு கொண்டு சொன்னபோது ‘"தமிழகத்தில் சிகிச்சை எடுத்துகொள்ள சில நிபந்தனைகளை போட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிபந்தனைகளோடு அங்குபோகத் தேவை யில்லை' என்று அவர் கூறியதால் தமிழகம் செல்ல முயற்சிக்கவில்லை'' என்கிறார் சிவாஜி லிங்கம்.
""சிலரின் ஆலோ சனைபடிதான் தமிழக முதல்வர் எடுத்த இந்த முயற்சியை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுகிறதே?'' என்றதற்கு, ""யாருடைய ஆலோசனையோ தூண்டுதலோ கிடையாது. இப்படிப்பட்ட அரசியலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தெளிவாக முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. பார்வதியம்மாள் இனி தமிழகம் செல்வதா? கனடா செல்வதா? என்பதை அவரது மகள்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்ற சிவாஜிலிங்கம், ‘""அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வதில் பார்வதியம்மாளின் மகள், மகன்களுக்கு உடன்பாடில்லை. அதோடு குறிப்பிட்ட உறவினர்களைத் தவிர வேறு யாரும் பார்க்க அனுமதி கிடையாது, தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புள்ள வர்களுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற நிபந்தனைகளெல்லாம் பார்வதி யம்மாளின் உறவினர்களை காயப்படுத்தி யிருக்கிறது. பார்வதியம்மாளின் உணர்வும் இதுதான்'' என்றார்.
""பார்வதியம்மாளின் உடல் நலம் தற்போது எப்படி இருக்கிறது? அவரிடம் நாங்கள் பேசமுடியுமா?'' என்று கேட்ட போது, ""வல்வெட்டித்துறையில் உள்ள வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை தந்து வருகிறோம். தற்போது அவரது உடல் நலம் மோசமடைந்திருக்கிறது. தொலைபேசியில் பேசும் நிலையில் அவர் இல்லை'' என்றவர், ‘""மலேசியாவிலிருந்து கிளம்பும் போது‘ "நாம் தமிழகத்திற்கு தானே போகிறோம்? ' -என்று கேட்டார் பார்வதியம்மாள். இல்லை என்றேன். ஏன்? என்று அவர் கேட்க இந்திய அரசு போட்டுள்ள நிபந்தனைகளை அவரிடம் சொன்னேன். அப்படியானால் வேண்டாம் என்று கூறிவிட்டார் பார்வதியம்மாள்'' என்கிறார் சிவாஜிலிங்கம்.
தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்பப் பட்ட பார்வதியம்மாளை மீண்டும் தமிழகம் அழைத்து வருவதற்கு முதல்வரிடம் வலியுறுத்தி பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ.யிடம் பேசிய போது, ""பார்வதியம்மாளிடமிருந்து கடிதம் வந்ததும் அந்த கடிதத்துடன் டெல்லி சென்ற முதல்வர், அந்த கடிதத்தின் அடிப் படையில் மத்திய அரசிடம் பேசி பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வர வேண்டி இருந்த தடைகளை நீக்கவைத்து 6 மாதகால மருத்துவ சிகிச்சைக்கான விசா அனுமதியை பெற்றார். பார்வதியம்மாளுக்கான ஒட்டுமொத்த மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார் முதல்வர்.
இதனை சட்ட மன்றத்தில் தெரிவித்த உடனேயே இங்கு உள்ளூர் அரசியல் செய் யும் ‘ "பெரிய மனிதர்கள்' சிலர் அவசரம் அவசரமாக ஆலோசித்து பேச வேண்டியவர்களிடம் பேசி இலங்கைக்கு போகவைத்துவிட்டனர். தங்களால் முடியாததை கலைஞர் செய்து விட்டாரே என்கிற ஆற்றாமை அவர்களுக்கு.பார்வதியம்மாளை மையப்படுத்தி "அரசியல்' செய்ய இந்த "பெரிய மனிதர்கள்' தொடர்ந்து திட்டமிடுவதால்தான் மத்திய அரசு சில நிபந்தனைகளை போட்டிருக்கிறது. அதனை நிபந்தனை என்று சொல்வதை விட சில வழிகளை நெறிபடுத்தியிருக்கிறது. அவ்வளவுதான். அதுவும் நாட்கள் ஆக ஆக தளர்வு செய்ய கலைஞர் முயற்சி எடுத்திருப்பார். உரிய பரிவோடும் கனிவோடும் கவனித்து கொண்டிருப்பார் முதல்வர். ஆனால் எல்லாவற்றையும் கெடுத்துக்கொண்டிருக் கிறார்கள்.
பார்வதியம்மாளின் உடல் நலம் பற்றியோ அவர்களை இப்படி அலைக்கழிக்கிறோமே என்பது பற்றியோ " பெரிய மனிதர்களுக்கு' கவலை இல்லை. அவர்களது கவலையெல்லாம் பார்வதியம்மாளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை தந்து நற்பெயரை கலைஞர் பெற்றுவிடுவாரே என்பது பற்றித்தான். அதனால் தான் இத்தனை அரசியலும். அந்த "பெரிய மனிதர்களை வரலாறு மன்னிக்காது' என்று ஆதங்கத்துடன் பேசியவர், பார்வதியம்மாளை தமிழகம் அழைத்து வர மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்'' என்கிறார் சுப.வீ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment