Sunday, May 16, 2010

பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் காலமானார்


shockan.blogspot.com
பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் (வயது 62) காலமானார். தமிழில் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றபடும அனுராதா ரமணன் 1,300 சிறுகதைகளையும், 700க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய, ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இரு வாசல் ஆகிய கதைகள் திரைப்படமாக வெளிவந்துள்ளன.

இவருக்கு எம்.ஜி.ஆர். விருது உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட அவர், அண்மைக்காலமாக இதய நோயாலும் பாதிக்கப்பட்டார். அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை மாலை சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஏழுத்தாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment