Saturday, May 22, 2010

ஐ.பி.எல். ஸ்டைல் கிரிக்கெட்!


shockan.blogspot.com
இருபது ஓவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி களின் தாக்கம் திருச்சி மாநகர கிரிக்கெட் வீரர் களையும் ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. திருச்சியில் நடைபெறும் டி.பி.எல். இருபது ஓவர் போட்டிகள் தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

ஐ.பி.எல்லைப் போலவே டி.பி.எல்லுக்கும் அணிகள் பிரிக்கப்பட, அந்த அணிகளை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் மாவட்ட தொழிலதிபர்கள். டோர்னமெண்ட்டை ஏற்பாடு செய்துள்ள மேப் டிரஸ்ட் தலைவர் திலக் நம்மிடம், ""குலுக்கல் முறையில் 8 அணிகளைத் தேர்வு செய்து ஒரு அணிக்கு 3 லட்ச ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து, அவர்களுக்கான டிரஸ் உள்பட எல்லாவற்றையும் நாங்கள் தருகிறோம். மிகுந்த கவனத்தோடு இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறோம்'' என்றார்.

டி.பி.எல். டோர்னமெண்ட்டில் வெற்றி பெறும் அணிக்கு 3 லட்சரூபாய் பரிசு அளிக்கப்பட விருக்கிறது. இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை இதுவரை எந்த மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனும் அளித்ததில்லை. அதனால், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பொறுப்பாளரான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அனுமதியை வாங்கித்தான் போட்டியை நடத்துகின்றனர். வாசன் எஸ்டேட்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் ஸ்பான்சரில் இந்த திருச்சி பிரிமியர் லீக் (டி.பி.எல்) பெல் டவுன் கிரவுண்டில் போட்டிகள் நடக்கின்றன.

ஐ.பி.எல்லுக்கு விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி, ஷாருக்கான், ப்ரீத்திஜிந்தா என்றால் டி.பி.எல்லுக்கு உள்ளூர் தொழிலதிபர்கள் மல்லுக் கட்டினர். திருச்சி பாவேந் தர் பாரதிதாசன் பொறி யியல் கல்லூரித் தலைவர் ஐ.ஏ.எஸ்.ராமனின் டவுன் ஷிப் டைட்டன் அணி, திருச்சி லோக்கல் சேனலான எஸ்.டி.வி. பாஸ்கரனின் ராக்ஃபோர்ட் ரெய்டர், மணப்பாறை கிரிக்கெட் கிளப் டேனியலின் மணப்பாறை சூப்பர் சைனீக், வாசன் ஆதரவு காங்கிரஸ்காரரான ஜெய்கர்ணாவின் ஸ்ரீரங்கம் சூப்பர் ஸ்டார், திருச்சி ஜமாய் ஐஸ்க்ரீம் டீலரும் சேம்பியன் கிரிக்கெட் அணி வீரருமான மனோஜ்குமாரின் கன்டோன்மென்ட் சூப்பர் கிங், சேம்பியன் கிரிக்கெட் கிளப்பை நடத்தும் ஜான்சனின் வில்லியம்ஸ் ரோடு வாரியர்ஸ், திருச்சி தினமலர் ஓனர் பாலாஜியின் தில்லை நகர் விக்டரி ராயல்ஸ், விளம்பரப் பட நிறுவனம் நடத்தும் சத்தியநாராயணனின் கே.கே.நகர் கிங்ஸ் என்று 8 அணிகள் போட்டிக்களத்தில் உள்ளன.

ஐ.பி.எல். போட்டிகளில் உள்ளூர் வீரர்களுடன் வெளிமாநில, வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுப்பதுபோல, டி.பி.எல். போட்டிகளுக்கு ஐ.பி.எல்லில் கலக்கிய விஜய், சதீஷ் ஆகியோரை சில அணியின் ஓனர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். இதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அதுபோல ஒவ்வொரு அணியிலும், ரஞ்சி போட்டிகளில் விளையாடும் பிரபல வீரர் ஒருவர் நிச்சயம் இருப்பார் என்கிறார்கள் போட்டியை நடத்துபவர்கள். ஐ.பி.எல். போலவே பணப்புழக்கம், சிபாரிசு, நெருக்கடி எல்லாமே டி.பி.எல்லிலும் இருக்கிறது. தினமலர் அணியில் விளையாடுவதற்காக கார்த்தி சிதம்பரம் ஆதரவு காங்கிரஸ்காரரான வாசன் ரவி முருகையா தினமும் இரவு நேரங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். இதுபோல பல உள்ளூர் பிரபலங்களும் மட்டைப் பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளனர். திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரி விளையாட்டு மைதானங் களும் டி.பி.எல். பயிற்சிக்களமாக மாறியுள்ளன.

பெல் டவுன்ஷிப் மைதானத் தில் நாளொன்றுக்கு 4 போட்டிகள் என காலை 8.30 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. போட்டிகளை இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்புவதற்காக ஜ்ஜ்ஜ்.ள்ல்ர்ழ்ற்ஹ்ண்ய்க்ண்ஹ.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திற்கு உரிமம் வழங்கப் பட்டுள்ளது. லோக்கல் சேனலான எஸ்.டி.வியில் இரவு 8 மணி போட்டிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஐ.பி.எல் போலவே ஒளிபரப்பு உரிமை, விளம்பர வருமானம் எல்லாவற்றையும் கணக்கிட்டுப் போட்டியை நடத்துவதால் இதுபற்றிய சர்ச்சைகளும் விமர்சனங்களும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

கிரிக்கெட் சங்கத் துணைத்தலைவர் வினோத், அமைச்சர் நேருவின் உறவினர் என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துகொண்டிருக் கின்றன. வினோத் நம்மிடம், ""தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி மாவட்டம் இருப்பதால், இங்கே கிரிக்கெட்டை வளர்ச்சியடையச் செய்து, இந்திய அளவுக்கு வீரர்களை அனுப்பவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். திறமை இருந்தும் வெளியே தெரியாத ஏழை கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தப் போட்டிகள் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வெற்றி பெறும் அணியை இலங் கைக்கு அழைத்துச் சென்று அங் குள்ள அணியுடன் விளையாடும் வாய்ப்பை உருவாக்கித் தரப்போகி றோம். 8 அணிகளில் ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக விளையாடு பவர்களை தேர்வு செய்து திருச்சி ஸ்பெஷல் டீம் என உருவாக்கப் போகிறோம்'' என்று தங்கள் கனவுத் திட்டங்களை விவரித்தார்.

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் முரளிதரன் நம்மிடம், ""திருச்சியில் சர்வ தேச அளவிலான கிரிக்கெட் மைதா னம் வேண்டும் என் பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. டி.பி.எல். போட்டிகளை நடத்திக் காட்டுவதன் மூலம் அதற்கான தகுதியும் தேவையும் எங்கள் மாவட் டத்திற்கு இருப்பது தெரியவரும். சர்வதேச அளவிலான மைதானம் அமைய இந்தப் போட்டிகள் உதவும்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

மே 22-ல் தொடங்கி 30-ந் தேதிவரை நடைபெறவுள்ள கிரிக் கெட் உற்சவத்திற்காக பணத்தைக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அணிகளை தம் வசம் வைத்துள்ள தொழிலதிபர்கள். கிரிக்கெட் ஆர் வத்திற்கு செம தீனி என்கிறார்கள் திருச்சி ரசிகர்கள்.

No comments:

Post a Comment