Saturday, May 22, 2010

பார்த்திபனை மிரட்டிய வங்கி!


shockan.blogspot.com
பெயரென்னவோ "கிரிடிட் கார்ட்'. ஆனால் அநியாய வட்டி, மிரட்டல், அதனால் மனஉளைச் சல். நடிகர்-டைரக்டர் பார்த்திபனும் இந்த உருட்டல்-மிரட்டல் விவகாரத்தில் நொந்து போயிருக்கிறார்.

சென்னை தேனாம் பேட்டையில் உள்ள பரோடா வங்கியின் கேர்- ஆஃப்பில் செயல்படும் பாப்கார்ட்ஸ் நிறுவனத் தின் கிரிடிட் கார்ட் வைத் திருக்கிறார் பார்த்திபன். கடந்த ஒருவருடமாக அதை பயன்படுத்தா விட் டாலும் கூட முன்பு பயன்படுத்தியதற்கான தொகைக்கு வட்டியோடு சேர்த்து மாதாமாதம் பணம் கட்டி வருகிறார். கடந்த நாலு மாதங்களாக ஸ்டேட்மெண்ட் வராததால், ‘எவ்வளவு கட்ட வேண்டும்' என்ற விபரம் அனுப்பப்படாததால் பணம் கட்டவில்லை பார்த்திபன். அதன் பின் கடந்த மாதம் ஸ்டேட்மெண்ட் வர, அதன்படி 9ஆயிரம் ரூபாய் கட்டிவிட்ட நிலையில் மே மாத தொகையான ரூ.8690-ஐ 20-05-10-ந் தேதிக்குள் கட்டும் படி ஸ்டேட்மெண்ட் வந்தது.

20-ந் தேதி வரை கெடு இருக்கும் போதே... கடந்த 5-ந் தேதி பார்த்திபனுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியது பாப்கார்ட்ஸ் நிறுவனம். அது மட்டுமில்லாமல் மும்பையிலிருந்து கடுமை யான மிரட்டல்களும் வந்திருக்கிறது. இது குறித்து பார்த்திபன் நம்மிடம் பேசினார்.

""மாதாமாதம் பணம் கட்டிட்டுத்தான் வர்றேன். இடையில் நாலு மாசம் ஸ்டேட் மெண்ட் அனுப்பாதது அவங்க தப்பு. மே மாத தொகையை கட்ட கால அவகாசம் இருந்தும் கூட மும்பையிலிருந்து அடையாளம் தெரியாத ஆட்களெல்லாம் போன் பண்ணி கண்டபடி மிரட்றாங்க. என்னுடைய பெயரை சிபில் மற்றும் சத்யம் அமைப்பில் பதிவு செஞ்சு பிளாக் லிஸ்ட்டில் வச்சிருவாங்களாம். அதன் பிறகு இந்தியாவில் எந்த பேங்க் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் நான் கடன் வாங்க முடியாதாம். என்னோட வீட்டுக்கு ரெகவரி ஏஜெண்ட்டுகளை அனுப்பி வசூலிப்பாங்களாம். இப்படியெல்லாம் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்காங்க.

அவங்களோட நிர் வாகக் கோளாறால் ஸ்டேட் மெண்ட் அனுப்பாம விட் டுட்டு... ஒழுங்கா பணம் கட்ற என்னை மிரட்றதும், கடிதம் அனுப்புறதும் என்ன நியா யம்னு அவங்களைக் கேட்டா... "ஸாரி.. நீங்க நடிகர் பார்த்திபன்னு தெரியாமப் போச்சு'னு ஒரு லேடி போன்ல சொல்றாங்க. நான் பிரபலமோ இல் லையோ... அதை விடுங்க.. நான் சாதாரண பார்த்திபனா இருந்தா மட்டும் மிரட்டலாமா? ஒரு மாசமா விடாம போன் பண்ணி துரத்தித் துரத்தி வந்து கார்டை குடுத்திட்டு இப்ப நம்மள டென்ஷன் பண்றாங்க. கிரிடிட் கார்டு வலையில் சிக்குற பொது ஜனங்கள் விழிப்புணர்வு பெறணும்கிறதுக்காகத்தான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்றேன்'' என்றார் பார்த்திபன்.

பல கிரிடிட் கார்ட் வழக்குகளில் உச்சநீதிமன் றம் கிரிடிட் கார்ட் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வீட்டுக்கு ஆளனுப்பி வசூலிக்கும் ரௌடியிஸத்தையும் கடுமையாக கண்டித்தும் கூட... அடங்க மறுக்கிறது கிரிடிட் கார்ட் நிறுவனங்கள்.

No comments:

Post a Comment