Monday, May 24, 2010

படம் வாங்குவோம் புதிய சேனல் தரும் நம்பிக்கை!


shockan.blogspot.com

வர்ற படமெல்லாம் வசூல் ரீதியா மொட்டைங்கிற மாதிரியே இருக்கு இந்த கோடை கால ரிலீஸ்! கடிக்க வந்த பிசாசு காலோட விட்டுச்சுங்கிற மாதிரி சேனல் ரைட்ஸ், ரிங் டோன் ரைட்ஸ், அது இதுன்னு கொஞ்சம் கைல கொடுத்திட்டு போறதால தயாரிப்பாளர்களின் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. இதில் சேனல் ரைட்ஸ்தான் பெரும்பாலான தயாரிப்பாளர்களை உசிரோட வச்சிருக்கு என்கிறார்கள் அனுபவப்பட்டவர்கள். ஆவரேஜ் படங்களுக்கு கூட அள்ளிக் கொடுக்கிற சேனல்களால் படம் எடுத்ததால் வந்த பாதிப்பு பரவாயில்ல ரகம்தானாம்.

இந்த நேரத்தில் இன்னும் கொஞ்சம் ஆறுதல். யூஎஃப்எக்ஸ் என்ற புதிய சேனலின் வரவு! தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழி பாடல்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிரம்பிய இந்த சேனலின் பகிர்வு மொழி ஆங்கிலம். என்றாலும் தமிழ் படங்கள் வாங்குவது, அல்லது அவற்றுக்கான பிரமோஷனை எந்த வகையிலாவது தருவது என்ற இரண்டு கொள்கைகளையும் கூடவே வைத்திருக்கிறார்களாம் இந்த நிறுவனத்தினர்.

எங்க சேனலில் டார்கெட் பதினாறு வயசில இருந்து முப்பது வயசு வரைக்கும்தான் என்று இந்த நிறுவனத்தின் தரப்பில் சொல்லப்பட்டாலும், போட்டுக்காட்டிய பிரமோக்களும், ட்ரெய்லர்களும் ஐம்பது வயசு தாண்டிய பெரிசுகளையும் அதிர அதிர ரசிக்க வைத்தது. (அம்புட்டு வீடியோ ஜாக்கிகளும் குதிரை ஜாக்கிங்க மாதிரி சும்மா கும்முன்னு இருக்காங்கப்பா...)

இந்நிறுவனத்தின் தலைவர் உஸ்மான் பயசிடம், பொதுவா இன்னைக்கு சேனல் துவங்கணும்னா அரசியல் சப்போர்ட் இருக்கணும், உங்களுக்கு எந்த கட்சி சப்போர்ட்? என்றால், சிரித்துக் கொண்டே சொன்னார். நாங்க இளசுங்க கட்சி! எங்களுக்கு இளசுங்க மட்டுமே சப்போர்ட்!

கேரட்டை காட்டியே குதிரையை இழுக்கறதுங்கறது இதுதானோ?

No comments:

Post a Comment