shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... ராஜ்யசபா தேர்தல் களத்துக்கான போட்டி விறுவிறுப் பாகிக் கொண்டே இருக்குது.''
""ஆமாப்பா... இரண்டு விஷ யங்கள்தான் ரொம்ப எதிர்பார்க்கப்படுது. ஒண்ணு, பா.ம.க.வுக்கு தி.மு.க. சீட் தருமா? இன்னொண்ணு, வைகோவுக்கு ஜெ சீட் தருவாரா?''
""கரெக்ட்டா சொன்னீங்க தலைவரே... தி.மு.க.விடமிருந்து எப்படியாவது ராஜ்யசபா சீட் வாங்கிடணும்ங்கிறதில் பா.ம.க தீவிரமா இருக்குது. இதற்காக பா.ம.க. தரப்பிலிருந்து பல பேர் கலைஞர்கிட்டே போய் பேசி வலியுறுத்தியிருக்காங்க. "எங்க சின்னய்யா அன்புமணியை மறுபடியும் ராஜ்யசபா எம்.பி.யாக்கிடணும்ங்கிறதுக்காக டாக்டரய்யா விடாம முயற்சி பண்ணிக்கிட்டிருக்காரு'ன்னு பா.ம.க.வினர் சொன்னாலும், இந்த நிமிடம் வரைக்கும் கலைஞர் பிடிகொடுக்க லைங்கிறதுதான் உண்மை.''
""முயற்சிகள் தொடர்ந்துக்கிட்டுத்தானே இருக்குது?''
""போன வெள்ளிக்கிழமையன்னைக்கு பா.ம.க மாநில நிர்வாகிகள் அவசர கூட்டத்தை ராமதாஸ் கூட்டியிருந்தார். அதில் அவர் பேசுறப்ப, "நான் திருமாவளவன்கிட்டே பேசியிருக்கேன். இணைந்தே செயல்படுவோம்னு சொல்லியிருக்கேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் முதல்வராக வரணும்னு ஏற்கனவே சொன்னவன் நான். அதையும் திருமாவளவன்கிட்டே ஞாபகப்படுத்தியிருக்கேன்'னு ராமதாஸ் சொல்லியிருக்காரு.''
""அதாவது, தி.மு.க. கூட்டணியில் நெருக்கமா இருக்கும் திருமா மூலமா அன்புமணிக்கான ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடப்படுதுன்னு சொல்லு.''
""நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ் தொடர்ந்து பேசும்போது, "வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு மனு கொடுப்பதற்காக கலைஞர்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கேன். டயம் கிடைச்சதும் குருவையும் அழைச்சிட்டுப் போய் கலைஞரை சந்திப்போம்'னு சொல்லியிருக்கிறார். அதாவது, 2004-ல் உருவான தி.மு.க.-பா.மக. கூட்டணி, 2009-ல் முறிந்துபோக கடைசிக் காரணமாய் இருந்தவர் காடுவெட்டி குரு. அவரையும் அழைத்துக்கொண்டு போய் வருத்தம் தெரிவிக்க வைத்தால், கலைஞரின் கோபம் குறையும்ங்கிறது ராமதாஸின் கணக்கு. பெற்ற பிள்ளைக்காக பெற்றெடுக்காத பிள்ளையோடு போய் கலைஞரை சந்திக்க டாக்டரய்யா பிளான் போடு றாருன்னு பா.ம.க.வுக்குள் பேச்சு நிலவுது.''
""பா.ம.க. பற்றி தி.மு.க.வோட கணக்கு என்ன?''
""பா.ம.க. இல்லாவிட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்தான் முழு ஆதிக்கம் செலுத்தும். எதிர்காலத்தில் முதல்வர் பதவிக்குக்கூட காங்கிரஸ் தரப்பிலிருந்து போட்டியை உண்டாக்கலாம்னு தி.மு.க. மேலிடம் நினைக்குது. அதனால, பா.ம.க.வைச் சேர்த்துக்கொண்டால் காங்கிரசின் ஆதிக்கம் குறைய லாம்னும், பா.ம.க.வுக்கு மாநிலம் தழுவிய செல்வாக்கு இல்லாததால் கூட்டணியில் அதனால் ஆதிக்கம் செலுத்த முடியாது. பா.மக. நம்ம அணியில் இருப்பது நல்லது தான்னு கலைஞர் நினைக்கிறாராம். ஆனா, ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான தி.மு.க. மந்திரிகளும் கட்சியின் முன்னோடிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க நம்ம கூட்டணிக்கு வரணும்ங்கிறதுக்காக இப்பவே ஏன் ராஜ்யசபா சீட் தரணும்? எந்த அக்ரிமெண்ட்டும் இல்லாமல் , நமக்குள்ள ஒரு சீட்டை ஏன் இழக்கணும்? சட்டமன்றத் தேர்தல் வரும்போது அதற்கான கூட்டணி பற்றி பேசலாம்னு நினைக்கிறாங்க.''
""அ.தி.மு.க. கூட்டணியில் ராஜ்யசபா சீட்டுக்கான கணக்கு எப்படி போய்க்கிட்டிருக்குது?''
""அ.தி.மு.க. அணிக்குக் கிடைக்கக்கூடிய இரண்டாவது சீட்டை வைகோ ரொம்பவும் எதிர்பார்க்கிறார். கூட்டணியில் அப்போதும் இப்போதும் உறுதியா இருப்பது நாமதான். நடுவிலே கூட்டணிக்கு வந்தவர் கள்கூட விமர்சனங்களெல்லாம் வச்சாங்க. நாம எந்த விமர்சனமும் வைக்காமல் அ.தி.மு.க. தலைமையின் விருப்பப்படியே தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டி ருக்கோம். ஜெயலலிதாவோட பிறந்தநாள் உள்பட பல நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிட்டது நாம மட்டும்தான். நமக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும்னு அ.தி.மு.க. தொண் டர்களே விரும்புறாங்க. நான் போற இடத்திலெல்லாம் என்னை சந்திக்கிற அ.தி.மு.க.வினர், அம்மா உங்களை டெல்லிக்கு அனுப்பணும்னு சொல்றாங்க. அதனால நமக்குத்தான் கார்டன் சீட் தரும்னு நம் பிக்கையோடு இருக்கிறார்.''
""கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பா.கிட்டேயும் எதிர்பார்ப்பு இருக் குது போலிருக்கே?''
""சி.பி.ஐ.க்கு ஒரு ராஜ்யசபா சீட் தர ணும்னு தன் விருப்பத்தை நாசூக்கா ஜெ.வுக்கு அனுப்பி யிருக்கிறார் தா.பாண்டியன். அவரிடமும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்குது. ஆனா, அ.தி.மு.க கூட்டணிக்கு வாய்ப் புள்ள 2 சீட்டுமே அ.தி.மு.க.வுக்குத்தான் வரணும்ங்கிற முடிவில் சசிகலா தரப்பு இருக்குது. முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரன் ரொம்பவும் முயற்சி பண்ணிக் கிட்டிருக்கிறார். அதேபோல டாக்டர் வெங்கடேசனும், காங்கிரசோடு நாம கூட்டணி அமைக்கணும்னா என்னை டெல்லிக்கு அனுப்புறதுதான் சரியா இருக்கும்னு லாபி பண்ணுறாராம். சசிகலா அண்ணன் மனைவியான இளவரசிக்கும் எம்.பி.யாகும் ஆசை இருக்குதாம்.''
""காங்கிரஸ் கட்சியில் என்ன நிலவரம்?''
""ஒரு சீட் உறுதி. இன்னொரு சீட்டை கூட்டணியின் தலைவ ரான கலைஞர் கொடுத்திடுவார்னு காங்கிரஸ் தரப்பு நம்பிக்கையோடு இருக்குது. காங்கிரசைப் பொறுத்தவரை 2 முறை ராஜ்யசபா எம்.பி.யான வங்களுக்கு மூணாவது முறை சீட் தரப்படுவதில்லை. ஆனா, சுதர்சன நாச்சியப்பன் மூணா வது முறைக்காக லாபி பண்ணிக் கிட்டிருக்கிறார். அதேபோல் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் இந்நாள் தலைவர் தங்கபாலுவும் எம்.பி.யாகும் ஆசையுடன் தீவிர முயற்சியில் இருக்காங்க. தி.மு.க. தயவில் கிடைக்கும் எம்.பி. சீட்டை தி.மு.க.வின் ஆதரவாளரா உள்ள தங்கபாலு பெறப்போகிறாரா, தி.மு.க.வை விமர்சிக்கும் இளங் கோவன் பெறப்போகிறாரான்னு கதர்ச்சட்டையினர் பெட் கட்டிக் கிட்டிருக்காங்க.''
""தேர்தல் நாள் நெருங்க நெருங்க ராஜ்யசபா சீட்டுக்கானப் போட்டி இன்னும் விறுவிறுப் பாயிடும். அடுத்த மேட்டர் என்னப்பா?''
""தலைவரே... நாம ஏற்கனவே சொன்னமாதிரி, பிரபாகரனின் அம்மா பார்வதியம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடாயிடிச்சி. டெல்லிக்கு கலைஞர் போகும்போது, இ-மெயிலில் வந்த பார்வதியம்மாளின் கடிதத்தை எடுத்துக்கொண்டு போனதை ஏற்கனவே சொல்லியிருந்தோம். அது சம்பந்தமா பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, ப.சிதம்பரம் ஆகியோ ரிடம் பேசி, பார் வதியம்மாளின் சிகிச்சைக்கு மத்திய அரசின் சம்மதத்தை கலைஞர் பெற்று விட்டார். மருத்துவ சிகிச்சைக்காக வரும் பார்வதியம்மாள், ஆஸ்பத்திரியிலேதான் தங்கியிருக்க ணும்னும், எந்த அரசியல் கட்சியோடும், தடை செய்யப் பட்ட இயக்கங்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாதுன்னும் நிபந்தனைகளும் போடப்பட்டிருக்குது. 6 மாதகால விசாவில் அவர் வந்து சிகிச்சை பெறலாம்னும் மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்குது. சொன்னதை செய்த திருப்தியோடு இதை சட்டமன்றத்தில் போலீஸ் துறை மான்யத்தின்போது 110-வது விதியின் கீழ் கலைஞர் படித்தார். முசிறி டாக்டர் ராஜேந்திரனின் கிளினிக்கில் இருந்து பார்வதியம்மாள் சிகிச்சை எடுத்துக்கப் போறாங்க.''
""மக்கள் பிரச்சினைகளுக்காக தி.மு.க. அரசுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் சி.பி.எம். கட்சியினர், ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு முதல்வரை சந்தித்திருக்காங்களே?''
""சி.பி.எம்.மின் மாநிலச் செயலாளரா ஜி.ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதல்வரை சந்திக்கலை. கோயில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றக்கூடாதுன்னும் அவங்களுக்கான வாடகையை உயர்த்தக்கூடாதுன்னும் கோரிக்கை மனுவை எடுத்துக்கிட்டு என்.வி., ஜி.ஆர் உள்ளிட்ட சி.பி.எம். தலைவர்கள் கலைஞரை சந்தித்தாங்க. கோரிக்கையை ஏற்றுக்கிட்ட கலைஞர், அகில இந்திய அரசியல் நிலவரம் பற்றியும் தோழர்கள்கிட்டே பேசியிருக்கிறார். அதற்கப்புறம், சி.பி.எம்.மின் கட்சிப் பத்திரிகையான தீக்கதிருக்கு இன்னும் அதிக அளவில் விளம்பரங்கள் வேணும்னு தோழர்கள் கோரிக்கை வச்சிருக்காங்க. அதையும் முதல்வர் ஏத்துக்கிட் டாராம்.''
""ம்...''
""சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ் ணன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார்னு டெல்லித் தகவல்கள் சொல்லுது.''
""நான் ஒரு தகவல் சொல்றேன்... .. 31-ந்தேதி ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில் 30-ந்தேதியன்னைக்கு தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தை கலைஞர் கூட்டியிருக்காரு. ஏற்கனவே இதே போன்ற கூட்டத்தை கூட்டித்தான் பா.ம.க.வுடன் கூட்டணி இல்லைன்னு அறிவிச்சாங்க. இப்ப, பா.ம.க.வோட கூட்டணி அமைக்கிறது பத்தியும் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தர்றது பத்தியும் 30-ந்தேதி ஆலோ சிப்பாங்கன்னு சொல்லப்படுது. சாதகமான முடிவு இருக்கும்னு பா.ம.க. எதிர்பார்க்குது.''

No comments:
Post a Comment