
shockan.blogspot.com
பல்கேரிய தலைநகர் ஷோபியாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பல்கேரிய வீரர் டோபோலோவை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த விசுவநாதன் ஆனந்த், பல்கேரியாவைச் சேர்ந்த தபோலோவ் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடைபெற்றது.
11 சுற்றுகள் முடிந்து இருவரும் தலா 5.5 புள்ளியுடன் சம நிலையில் இருந்தனர். 12 வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் பல்கேரிய வீரர் டோபோலோவை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இவர் இந்த பட்டத்தை 4வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டோபோலோவை 56வது நகர்த்தலில் ஆனந்த் வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment