Thursday, May 13, 2010
தயாரிப்பாளர் பிடியில் ரஞ்சிதா?
shockan.blogspot.com
நித்யானந்தாவின் ஸ்பெஷல் பக்தை ரஞ்சிதா கர்நாடக போலீஸாரிடம் விசாரணைக்கு வராமல் இருப்பதால் அவரை வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது கர்நாடக போலீஸ். இந்நிலையில் சாமியாருக்கு ரஞ்சிதாவை அறிமுகம் செய்துவைத்தது பிரபல சினிமா தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா என்றும், ரஞ்சிதாவின் விருகம்பாக்கம் வீட்டில் தான் சிவா அலுவலகம் நடத்தி வருகிறார் என்றும், சிவாவின் பாதுகாப்பில்தான் ரஞ்சிதா ரகசிய இடத்தில் தங்கியிருக்கிறார் என்றும் எக்ஸ்க்ளூஸிவ்வாக கர்நாடக போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைக்க... சிவாவைத் தேடி கடந்த 7-ந் தேதி சென்னை வந்தனர்.
ஒருவழியாக அன்று மாலை சிவாவின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அவரை தொடர்பு கொண்டனர். தான் வெளியூரில் இருப்பதாகச் சொன்னார் சிவா. "விசாரணைக்காக நீங்கள் பெங்களூரு வரவேண்டும். அதற்கான சம்மன் கொண்டு வந்திருக்கிறோம்' என போலீஸார் சொல்ல... வடபழநியில் தன் நண்பர் முகவரி ஒன்றில் சம்மனை கொடுக்கச் சொல்லியிருக்கிறார் சிவா. அதன்படி சம்மனை அங்கே ஒப்படைத்து விட்டு பெங்களூரு திரும்பியது போலீஸ். இருப்பினும் சிவாவை ரகசியமாக நோட்டமிட்டு வருவதாக... விசாரணை அதிகாரிகள் மூலம் நமக்கு தகவல் கிடைக்க... சிவா விடம் இது பற்றி கேட்டோம்.
""டி.எஸ்.பி. சரண் என்கிட்ட செல் மூலம் பேசினார். "ரஞ்சிதாவுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?' என கேட்டார்கள். ஹவுஸ் ஓனருக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்குமான பழக்கம் தான்' எனச் சொன்னேன். "ரஞ்சிதாவை சமீபத்தில் தொடர்பு கொண்டீர்களா?'னும் விசாரிச்சாங்க. வாடகைத் தொகைக்கான செக் கொடுப்பதற்காக அவங்களை தொடர்பு கொண்டபோது அவங்க நம்பர் ஒர்க் பண்ணலைங்கிறதை சொன்னேன். "வாடகை அக்ரிமெண்ட் யார் பேர்ல போட்டிருக்கு?'னு கேட்டாங்க. ரஞ்சிதாவோட அம்மா பேர்லதான் இருக்கு என்பதைச் சொன்னேன். அந்த வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட விபரங்களோடு விசாரணைக்கு வரணும்னு சொன்னாங்க. வருவதாகச் சொன்னேன். இப்போது படத் தயாரிப்பு வேலையில் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அதை முடிச்சிட்டு வெகு விரைவில் விசாரணைக்காக பெங்களூரு போவேன்'' என்றார் சிவா. இருந்தபோதும் சிவாவை ரகசியமாக கண்காணித்து வருகிறது போலீஸ்.
"ரஞ்சிதா தலைமறைவு, ரஞ்சிதா விசாரணைக்கு ஆஜராகவில்லை' என வந்து கொண்டிருக்கும் தகவல் ரஞ்சிதா கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி தெரிந்த விபரங்களைச் சொல்லுமாறு ரஞ்சிதாவுக்கு அவரின் கணவர் அறிவுறுத்தியிருப்பதாக ரஞ்சிதாவின் கணவர் வட்டாரங்கள் தகவல் சொல்கிறது.
கண்டதை எண்ணியதால் இப்போ கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சாமியார் குறித்த லேட்டஸ்ட் நிலவரங்களை விசாரித்தோம்.
பெயில் மனு டிஸ்மிஸ் ஆனதால் நொந்து போயிருக்கிறார் நித்யானந்தா. இவரின் அறைக்குப் பக்கத்து அறையில் தான் சிஷ்யர் பக்தானந்தா அடைக்கப் பட்டிருக்கிறார். "எனக்கு பசி இல்லை' என அவ்வப் போது சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் நித்யானந்தா திடீர் திடீர் என கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். "ஏன் சாமி அழுறீங்க?' என ஜெயில் வார் டன் விசா ரித்தபோது... "யாரும் செய்யாத தப்பவா நான் செஞ்சேன். நான் சந்நியாசினு எப்பவாவது சொன்னே னா? நானும் கொஞ்ச வயசுக்காரன் தானே? எனக்கும் உணர்ச்சி இருக்காதா? ஏதோ பொண்ணுங்களை தொட்டதுக்கு இப்படியா அவஸ்தைப் படுத்துறது?' எனக் கேட்டிருக்கிறார். ஜெயிலில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு காவலர் சமீபத்தில் நைட் டூட்டியின் போது "தமிழ்நாட்டுப் பெண்கள் எவ்வளவோ பேர் வாழ்க்கையை நாசம் பண்ணீட்டிங்களே? உங்களை நம்பி அனுப்பிவச்ச பெத்தவங்கள வயிறு எரிய வச்சுட்டீங்களே? சாமியார் போர்வையில் இப்படி பண்ணலாமா சாமி?' என கோபத்தோடு கேட்க... சாமியார் பதில் எதுவும் பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தாராம்.
இந்நிலையில் பாண்டிச்சேரி போலீஸாரும் சாமியாரை விசாரிக்க கோர்ட்டை நாடினார்கள். அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. சாமியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணை அதிகாரிகளிடம் தகவல்களை மட்டும் கொடுத்தபடி இருக்க.... கடல்கடந்து வந்த ஒரு கண்ணீர் புகார் போலீஸாரை திகைக்க வைத்திருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து போன் மூலம் அதிகாரிகளை தொடர்புகொண்டு "நித்யானந்தா என்னை பாலியல் பலாத்காரம் செய்து கெடுத்துவிட்டார்' எனும் அந்த புகாரை கொடுத்திருப்பது... பக்தையல்ல... பக்தர். இந்த விவகாரத்தையும் தோண்ட ஆரம்பித்திருக் கிறது காவல்துறை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment