Thursday, May 13, 2010
நான்கு நண்பர்களும் ஒரு பெண்ணும்!
shockan.blogspot.com
வெங்கடேஸ்வரிக்கும் பொன்னுசாமிக்கும் கனெக்ஷன் இருக்கிறது... வெங்கடேஸ்வரியோட கணவன் மோகன்ராஜுக்கு தெரியாது. ஆனா, அதே வெங்கடேஸ்வரிக்கும் டிக்காஸ்டோவுக்கும் உள்ள தொடர்பு ரெண்டாவது புருஷன் பொன்னுசாமிக்கு தெரியாது. ஆனா, வெங்கடேஸ்வரியை லேட்டஸ்டா திருமணம் பண்ணின முருகதாஸுக்கு இந்த விஷயம்...''.
அய்யய்யோ நிறுத்துங்கப்பா... டி.வி. சீரியல்ல வர்ற மாதிரி ஒரே கள்ள உறவா இருக்கே... வெங்கடேஸ்வரிக்கு எத்தனை புருஷன்? யார்தான் இதுல உண்மையான புருஷன்? என்று மண்டையை பிய்த்துக் கொள் கிறீர்களா? ""நாலு பேருமே உண்மை(!)யான புருஷங்கதான். இதுதாங்க பிரச்சனையே'' என்று தன் ரியல் லைஃபில் நடந்ததை சொல்லி திகைக்க வைக்கிறார் நாலு கணவர்களில் ஒருவரான குன்றத்தூரைச் சேர்ந்த முருகதாஸ்.
""ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணும்போது பழக்கமானாங்க ஜெ.பி. பிராப்பர்டிஸ் ரியல் எஸ்டேட் கம்பெனி நடத்திய ஜெயப்பிரபா. என்னை மார்க்கெட்டிங் மேனேஜராகவும் பர்சனல் செகரட்டரி யாகவும் சேர்த்துக்கிட்டாங்க. அப்போதான் "என் சொந்த ஊர் ஈரோடு கவுந்தம்பாடி... எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல தாஸு... எங்க அக்கா ரெண்டாவது குழந்தை பெத்தெடுக்கும்போதே இறந்துட்டா. படுபாவி அவளோட புருஷன் இந்த ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு ஓடிட்டான். இப்போ நானே வளர்க்க வேண்டியதாகிப் போச்சு. என்னோட ரிலேஷன் மாமாதான் இந்தக் குழந்தைகளுக்கு கார்டியனா இருக்காரு... "ப்ச்'ன்னு உச் கொட்டினாங்க சோகமா. பர்சனல் செகரட்டரிங் குறதால அடிக்கடி அவங்க வீட்டுக்கும் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
திடீர்னு ஒருநாள் "நீ அடிக்கடி வர்றது பிடிக்காம... எனக்கு கார்டியனா(!) இருந்த மாமா என்னை விட்டுப் போயிட்டாரு. எனக்கும் வேற ஆம்பள துணை இல்ல... நீதான் எனக்குத் துணையா இருக்கணும்'னு கெஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க. என்னை விட மூணு வயசு கூட இருந்தாலும்... பார்க்குறதுக்கு அழகாவும்... அக்கா குழந்தைகளுக்காக கல்யாணமே பண்ணிக்காம வாழ்ற அவங்களோட நல்ல மனசும் எனக்கு பிடிச்சுப் போச்சு. அதனால 2009 ஏப்ரல் 30-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். நாட்கள் ஆக ஆக அவங்க போக்குல ஒரு சேஞ்ச் தெரிஞ்சது. வீட்ல அவங்க வெச்சிருந்த சில டாக்கு மெண்ட்டுகளை பார்த்துட்டு அதிர்ச்சியில் உறைஞ்சு போயிட்டேன்.
ஆமாங்க... இந்த ஜெயப்பிரபாவுக்கு ஏற் கெனவே கல்யாணம் ஆகிடுச்சு. வெங்கடேஸ்வரிங் கிற தன்னோட பெயரைத்தான் ஜெயப்பிரபான்னு 2002 ஜுலை 2-ந்தேதி கெசட்ல மாத்தியிருக்கா. அக்கா குழந்தைங்கன்னு சொன்னதும் பொய். ரெண்டு குழந்தைகளுமே முதல் புருஷன் மோகன்ராஜுக்கு பிறந்ததுதான்'' என்று பெருமூச்சு விட்ட முருகதாஸ் அடுத்தடுத்து சொன்னத் தகவல்கள் உச்சி மண்டையில் சுர்ர்ர்...
""கார்டியன் மாமான்னு ஒருத்தனை சொன் னாளே... அவர் பேருதான் பொன்னுசாமி. அவர்தான் ஜெயப்பிரபாவோட ரெண்டாவது புருஷன். கோயம்புத்தூர் கோபாலபுரத்துல 2005 பிப்ரவரி 25-ந்தேதி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருக்காங்க. இதுமட்டுமில்ல... மூணாவதா டிக்காஸ்டோங்கிறவர் கூடவும் குடும்பம் நடத்தியிருக்காங்க. அதுக்கு ஆதாரமா அவர் வீட்ல மட்டுமில்லாம டூர் அது இதுன்னு வெளியில சுத்தும்போது டிக்காஸ்டோ கூட எடுத்துக்கிட்ட போட்டோக்கள் இருக்கு. மேலும் ஜெயப்பிரபா வெச்சுருக்குற டூவீலர் ஆர்.சி. புக்குல கூட டிக்காஸ்டோவோட பெயரைத்தான் கணவன் பெயரா குறிப்பிட்டிருக்கா. அப்படின்னா ஜெயப்பிரபாவுக்கு நான் நாலாவது புருஷன். இப்படி ஆதாரப்பூர்வமா தெரிஞ்சே நாலு புருஷங்கன்னா... தெரியாம எத்தனைபேருக்கிட்ட தொடர்பு இருக்கோன்னு யோசிக்கும்போதே என் வாழ்க்கை வீணாப் போச்சேன்னு வேதனையில நொந்து போயிட்டேன். "ஏண்டி இப்படி என்னை ஏமாத்தினேன்? 'னு கேட்ட துக்கு... வரதட்சணை கேஸ், திருட்டு கேஸ்ன்னு போட்டு டார்ச்சர் கொடுக்குறா. இதுக்கு மேலயும் தாங்க முடியாமதான் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்கிட்ட புகார் கொடுத்தேன். பூந்தமல்லி மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிக்க சொல்லியிருக்காரு. ஆம்பள ஏமாத்தியிருந்தா இந்த நேரத்துக்குள்ள அடிச்சு இழுத்துட்டு வந்திருப்பாங்க. ஆனா, ஏமாத்தினது பொம்பளையாச்சே... அதான் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படல. ஜெயப்பிரபா மூலமா மிரட்டல்கள் வருது. அதனாலதான் நக்கீரன் மூலமா எனக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பி வந்திருக் கேன்'' என்கிறார் கைகூப்பியபடி.
முதல் கணவர் மோகன்ராஜை தேடிச் சென்றோம் கோயம்புத்தூருக்கு. ""சுகர் ஃபேக்டரி யில மோகன்ராஜ் கூட வேலை பார்த்தவன்தான் இந்த பொன்னுசாமி. அப்படி வீட்டுக்கு வந்து போக இருந்த பொன்னுசாமி மேல வெங்கடேஸ்வரிக்கு கள்ளக்காதல் தீ பத்திக்கிச்சி. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல. மோகன்ராஜ் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருன்னு சொல்லிட்டு... பொன்னுசாமியவே ரெண்டாம் புருஷனாக்கிட்டா வெங்கடேஸ்வரி. இன்னும் கூட புருஷன் கம்பெனியிலிருந்து உதவித்தொகை வந்துக் கிட்டுதான் இருக்கு. ஆனா, இதுக்கப்புறமும் கல்யாணம் பண்ணியிருக்காளா?'' என்று கேட்கி றார்கள் அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன்.
கோயம்புத்தூரிலுள்ள பொன்னுசாமியை கண்டுபிடித்து பேசினோம். ""கணவன் இல்லாததால கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவ நடவடிக்கை எனக்குப் புடிக்கல. அதனாலதான் தனித்தனியா இருக்கோம்'' என்கிறவர் ""என்னது என்னை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டாளா?'' என்று கேட்கிறார் அதிர்ச்சியுடன்.
அடுத்து மூணாவது கணவர் எனச் சொல்லப்படும் டிக்காஸ்டோவைத் தேடி சென்னை குன்றத்தூர் அருகி லுள்ள நந்தம்பாக்கம் அருணாச்சலநகர் வீட்டுக்குச் சென்றோம். கேட்டை திறந்த டிக்காஸ்டோவிடம் ""ஜெயப்பிரபா பற்றி...'' என்றதுதான் தாமதம் நம்மைத் தள்ளிக் கொண்டு வெளி யில் ஓடி வந்தார். ""வீ கேன்ங்கிற பேர்ல ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றேங்க. அப்பதான் எனக்கு பழக்கமானா ஜெயப்பிரபா. பணத்திலேயே குறியா இருப்பா... மற்றபடி எந்தத் தொடர்பு மில்லை'' என்று மழுப்பியவரிடம் ஜெயப்பிரபாவுடன் அவர் இருக்கும் போட்டோவை காட்டியதும் ""ஹி... ஹி... எனக்கு குடும்பம், குட்டி யெல்லாம் இருக்கு. தெரியாம அவ வலையில விழுந்துட்டேங்க'' என்று அசடு வழிந்தபடி தலையை சொறி கிறார்.
இப்படி அடுத்தடுத்த திரு மணங்களை செய்து இளம் வயது முருகதாஸை ஏமாற்றிய வெங்க டேஸ்வரி என்கிற ஜெயப்பிரபா விடம் பேசினோம். ""உங்கக்கிட்ட இதைப் பற்றி சொல்லணும்ங்குற அவசியமில்ல. அதையும் மீறி என்னைப் பற்றி எழுதினீங்கன்னா... நான் என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கிறேன்'' என்றார் மிரட்டும் தொனியில்.
புகாரை விசாரித்து வரும் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சகுந்த லாவோ ""ஜெயப்பிரபாவும், டிக் காஸ்டோவும் முறைப்படி திருமணப் பதிவு செய்யாம ஒண்ணா வாழ்ந் திருக்கிறது விசாரணையில் தெரிய வந்திருக்கு. ரெண்டாவது கணவ னான பொன்னுசாமியிடம் விசாரணை பண்ணிக்கிட்டிருக்கோம். விரைவில் சட்டப்பூர்வமான நட வடிக்கை எடுப்போம்'' என்கிறார் அதிரடியாக.
இறந்து போன அப்பாவின் உதவித்தொகை வந்து கொண்டி ருந்தாலும் அம்மாவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் "எங்களுக்கு யாரு அப்பா?' என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பது முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள்தான். என்ன செய்வது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment