Sunday, May 2, 2010
திரைக்கூத்து!
shockan.blogspot.com
ஷகிலா இடத்தில் பத்மா!
விபச்சார வழக்கில் எசகு பிசகா சிக்கி மீண்ட பத்மா இப்போது நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
"புழல்' படத்தில்.... (என்னா பேர் ராசி) கவர்ச்சியும், வில்லத்தனமும் கலந்துகட்டி நடிக்கிறார் பத்மா. "ஷகிலா இடத்தை கைப்பத்துற அளவுக்கு கவர்ச்சி காட்றாரே?' என யூனிட் கிசுகிசுக்கிற அளவிற்கு கவர்ச்சியில் வெளுத்துக்கட்டி யிருக்காராம்.
அசத்திய பாரதிராஜா!
பாலசந்தர்-பாரதிராஜா என இரண்டு பெரிய ஜாம்பவான்கள் நடித் திருப்பதால் ‘"ரெட்டைச் சுழி' படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாகி விட்டது.
டைரக்டர் தாமிராவும் இப்படி ஒரு "காம்பி னேஷ'னை உருவாக்கியதால் முக்கியமான டைரக்டராகிவிட்டார். கதையமைப்பு அழுத்தமாக இல்லாவிட்டாலும் கூட "ஆயிரம் சாமி இருந்தாலும் ராமசாமிபோல வருமா?', "குஷ்பு நீ வாய மூடு... எது சொன்னாலும் பிரச்சினையாகுது' -இப்படியான வசனங்கள், காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, என பல விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறது படம். கம்யூனிஸ்ட் பெரிசா? காங்கிரஸ் பெரிசா?, மிலிட்ரி பெரிசா?, போலீஸ் பெரிசா?, காதல் பெரிசா?, கௌரவம் பெரிசா?, பகை பெரிசா?, நட்பு பெரிசா? என பல கேள்விகளை முன்வைத்த இந்தப் படம் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் தள்ளாடி விட்டது. நடிப்பில் செம அசத்தல் பண்ணியிருப்பது பாரதிராஜாதான்.
மேக்-அப் மேன் விவகாரம்!
ஃபெப்சியும், கவுன்சிலும் சேர்ந்து தீர்மானித்த சம்பளத்தைவிட கூடுதலாக மேக்-அப் மேன்கள் கேட்கும் விவகாரம் கவுன்சிலுக்கு புகாராகப் போய் ஃபெப்சிக்கு ஃபார்வேட் பண்ணப்பட்டிருக்கிறது.
ஜாகுவார் தங்கம் இயக்கித் தயாரிக்க... அவர் மகன் விஜயசிரஞ்சீவி நடிக்கும் "இந்தியா' படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் தொடங்கியது. இதில் பணியாற்றிய மேக்-அப் மேன் கிருஷ்ணாவுக்கும் அவரின் உதவியாளர்களுக்கும் சேர்த்து சங்கம் விதித்த சம்பளம் 1600 ரூபாய். ஆனால் கிருஷ்ணாவோ பிளாட் ரேட்டாக தினசரி ஐந்தாயிரம் கேட்க... அதை தர மறுத்த ஜாகுவார், இளங்கோ என்பவரை ஒப்பந்தம் செய்தார். அவரை கிருஷ்ணா மிரட்டியதால் இளங்கோ விலகிக் கொள்ள... தொடர்ந்து இதேபோல் யாரையும் வரவிடாமல் கிருஷ்ணா தடுத்ததால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்து கவுன்சிலுக்கு ஜாகுவார் புகார் தர... விஷயம் சூடாகி வருகிறது.
மூக்குத்தி பாட்டு!
அம்பானிபோல் ஆக நினைக்கிறது தப்பில்லை. அதுக்காக அம்பானி பட்ட கஷ்டங் களையும் தெரிஞ்சுக்க ணும்ல. அதுதான் ‘"அம்பா சமுத்திரம் அம்பானி' கதை. ‘"திண்டுக்கல் சாரதி' படத் திற்குப் போலவே இந்தப் படத்திலும் ஹீரோ கருணாஸுக்கு ஜோடிபோட பலரும் மறுத்த நிலையில்... "அரசாங்கம்' படத்தில் விஜயகாந்த்திற்கு ஜோடி போட்ட நவ்னீத் கவுர் ஓகே சொல்லி நடித்தாராம். இதனால் அம்மணியை பாராட்டித் தள்ளுகிறார் கருணாஸ்.
இந்தப் படத்தில் ரகசியாவோடு ஒரு மூக்குத்தி பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். இந்திய சினிமாவில் முதன்முறை யாக புது மெத்தர்டில் இந்த பாடல் காட்சியை பட மாக்கியிருக்காராம் டைரக்டர் ராம்நாத்.
அப்படியா?
கடந்த வாரம் நடந்த ஒரு பார்ட்டியில் ஒல்லி கில்லிக்கும் அவரின் ஆம்பள தோஸ்த்தான ட்ரெஸ் வடிவமைப்பாளருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. எதுவும் பேசிக் கொள்ளாமல் வெளி யேறியதால் எதனால் மோதல் என்பது கூட குடித்தவர்களுக்கும் தெரிய வில்லையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment