Saturday, May 1, 2010

கற்பு! குஷ்பு! தீர்ப்பு! தொடரும் சர்ச்சைகள்!


shockan.blogspot.com
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று 2005-ல் பிரபல நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, ""என் மீதான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது சந்தோஷத்தை தருகிறது. கடந்த 5 வருடங்களாக நான் பட்ட வேதனைகளும் கஷ்டங்களும் அதிகம். ஆனால் ஒருவர் நேர்மையாக இருந்து நீதிக்காக போராடினால் அரசியல் பலம், பண பலம் எதிர்த்து நின்றாலும் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது என் வழக்கு மூலம் நிரூபிக்கப்பட்டி ருக்கிறது'' என்கிறார். இந்த வெற்றியை நண்பர்கள், தோழிகள், திரைத்துறை பிரபலங்கள் ஆகியவர்களோடு தனது உற்சாகத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார் குஷ்பு.

ஐந்து வருடங்களுக்கு (2005) முன்பு குஷ்பு சொன்ன கருத்து என்ன?

செக்ஸும் இளம்பெண்களும் தொடர்பான கட்டுரை ஒன்றை 2005-ல் வெளியிட்டது இந்தியா டுடே பத்திரிகை. இந்த கட்டுரைக்காக பேட்டி தந்த குஷ்பு, ""சென்னையில் உள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளை கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கொதேக்களிலும் ஏராளமான பெண்களை பார்க்க முடிகிறது. ஒருபெண் தனது பாய் ஃபிரண்ட் பற்றி உறுதியாக இருக்கும்போது அவள் தனது பெற்றோர் களிடம் சொல்லிக்கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும்போது கன்னித் தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண் ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண் டும். கல்வி கற்ற எந்த ஆண் மகனும், தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கமாட்டான். திருமணத் திற்கு முன்பே செக்ஸ் வைத்து கொள்வது தவறில்லை. ஆனால் அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்ப மாகாமலும், பால்வினை நோய்கள் தாக்காமலும் பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று உரத்து சொல்லியிருந்தார் குஷ்பு. இந்த கருத்து சர்ச்சை யை உருவாக்கிய நிலையில், இது தொடர்பாக தினப்பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த குஷ்பு, ""தமி ழகத்தில் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளாத பெண்கள் எத்தனை பேர்?'' என்று கடுமையாகவும் கோபமாகவும் கேள்வி எழுப் பினார். இதனால் மேலும் சர்ச்சைகள் வெடிக்க, குஷ்பு வின் கருத்துக்கு எதிராக துடைப்பங்களும் செருப்பு களும் ஆவேசமாக உயர்ந்தன.

தமிழ் பெண்களின் கற்பை குஷ்பு கொச்சைப்படுத்தியதாக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், பா.ஜ.க.வினர், வழக்கறி ஞர்கள் என பல தரப்பினரும் ஆர்ப்பாட் டத்தில் குதித்தனர். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக திருமாவளவனும் காப்பாளர்களாக மருத்துவர் ராமதாசும் நெடுமாறனும் இருந்ததால் விடுதலை சிறுத்தைகளும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களில் அதிக அளவில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டது. அதன் எண்ணிக்கை 23. இந்த வழக்குகளை சந்திக்க கோர்ட் படிக் கட்டுகளில் ஏறி இறங்கிய குஷ்பு, ""எய்ட்ஸ் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக என் கருத்தை சொன்னேன். தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து எதையும் நான் சொல்லவில்லை. அதனால் என்மீதான வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தார். .ஆனால் உயர்நீதிமன்றம் குஷ்புவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மனுவை தள்ளு படி செய்துவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் குஷ்பு. அதில்தான் அவருக்கு தற்போது வெற்றி கிடைத் திருக்கிறது.

உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பினால் மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது குஷ்பு வின் கருத்துக்கள். குஷ்பு விற்கு எதிராக அப்போது கிளர்ச்சியில் ஈடுபட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் சோழநம்பியா ரிடம் கேட்டபோது, ""திருமணத் திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று குஷ்பு நினைத்தால் அதனை அவரது சுதந் திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுபற்றி கவலைப்பட வேண்டியது அவரை சார்ந்தவர்கள்தான். ஆனால் அவரது சுதந்திரத்தை தமிழக பெண்களின் கற்பு மீதும் ஒழுக்கத்தின் மீதும் திணித்ததால்தான் ஆர்ப்பாட்டம் வெடித்தது. இன்றைக்கு குஷ்புக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் கூறிவிட்டதி னாலேயே தமிழக மக்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று அர்த்தம் இல்லை.குஷ்புவுக்கு உண்மையான தீர்ப்பினை மக்கள் வழங்குவார்கள்'' என்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பாலு, ""திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக்கொள்வது சரியா? தவறா? என்பது பற்றி குஷ்பு சொன்ன தால் எழுந்த பிரச்சினை இல்லை இது. போடப்பட்ட வழக்குகளும் அது தொடர்பானது அல்ல. தமி ழகத்தில் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளாத பெண்கள் எத்தனை பேர் என்று சொல்ல முடியுமா? என்று அவர் தமிழ்ப் பெண்களின் ஒழுக்கத்தின் மீது கல் எறிந்ததினால்தான் அவருக்கு எதிரான கிளர்ச்சிகளும் வழக்குகளும். மும்பையிலிருந்து தமிழகத் திற்கு வந்தவர் தமிழ் பெண் களின் கற்பையும் கலாச் சாரத்தையும் இழிவுபடுத்திய தினால் தமிழச்சிகள் தன் னெழுச்சியாகப் போராடி னார்கள். குஷ்புவின் கருத்துக் கள் குடும்பம் என்கிற கோட் பாட்டினை தகர்த்தெறிந்து விடும். பணபரிமாற்றம் இல்லாத ஒரு விபச்சார கலாச்சாரத்தை உருவாக்கிவிடுகிற அபாயமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இதே உச்சநீதி மன்றம் குஷ்புவின் கருத்துக்கள் பொறுப் பற்றத்தனமானது என்று கண்டித் திருக்கிறது.

அதே உச்சநீதிமன்றம் தற்போது அவருக்கு கருத்து சுதந்திரம் இருப்பதாக கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்கிறது. குஷ்புவிற்கு எதிரான வழக்கின் தன்மையை சரியான கோணத்தில் உச்சநீதிமன்றம் அணுகவில்லை. அதனால் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய விருக்கிறோம்'' என்கிறார்.

தமிழக பா.ஜ.க.வின் பொதுசெயலாளர் தமிழிசை சௌந்திரராஜன், ""நீதிமன்றங்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் குஷ்புவின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது கருத்துக்கள் சமூகத்தில் ஏற்றப்பட்ட விஷம். சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மனம்போன போக்கில் கருத்துக்களை சொல்லக்கூடாது. நான் மருத்துவ கல்லூரி மாணவியாக இருந்தபோது போலியோ சொட்டு மருந்து கொடுங்கள் என்று தாய்மார்கள் கேட்க மாட்டார்கள். மாறாக ரஜினிகாந்ந் மருந்து கொடுங்கள், கமலஹாசன் மருந்து கொடுங்கள், மனோரமா மருந்து கொடுங்கள் என்றுதான் கேட்பார்கள். காரணம் தமிழக அரசின் போலியோ சொட்டு மருந்துக்கு இந்த நடிகர்- நடிகைகள் குரல் கொடுத்திருப் பார்கள். ஆக நடிகர்-நடிகைகள் சொன்னால் அது சரியாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அப்படிப் பட்ட நிலையில் குஷ்பு போன்றவர் கள் செக்ஸ் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்கிற போது சமூக கோட்பாடுகளை சிந்தித்து சொல்லவேண்டும். செக்ஸ் தொடர்பான தனது எண்ணங்களை, கோட்பாடு களை தமிழக பெண் களின் பொது கோட் பாடாக குஷ்பு திணிப் பது தமிழச்சிகளின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை.

நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்ட தனாலேயே குஷ்பு வின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டதாக அர்த்த மில்லை. தமிழக பெண்களுக்கு குஷ்பு பதில் சொல்லியே தீர வேண்டும். இல் லையேல் தமிழச்சிகளின் கோபம் சரியான தருணத்தில் வெடிக் கும்'' என்கிறார்.

அதே சமயம் "குஷ்பு சொன்ன கருத்துக்களால் தமிழச்சிகள் யாரும் கெட்டுப் போய்விடவில்லை. அவரது கருத்தை கருத்தாக மட்டுமே பாருங்கள்' என்று அவருக்கு ஆதர வான கருத்துக்களும் பலமாக எதிரொலிக் கத்தான் செய்கிறது.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ""ஒரு பெண்ணின் தனிப்பட்ட கருத்துக் களுக்காக அவரை துன்புறுத்துவதும் நெருக்கடி கொடுப்பதும் கூடாது'' என்கிறார்.

நடிகை ரோகிணி, ""நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். சமுதாயத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பெரும்பான்மை மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து நடுநிலைமையான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்'' என்கிறார்.

எழுத்தாளர் சிவசங்கரி, ""கவனிக்க வேண் டிய எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது, குஷ்புவின் தனிப்பட்ட கருத்துக்களுக் காக அவரை பல ஆண்டுகளாக சமுதாயத்தின் ஒரு பகுதி யினர் ஒட்டுமொத்தமாக துன்புறுத்தியிருக்கிறார்கள்'' என குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.

குஷ்புவை மையமாக வைத்து மீண்டும் பரபரப்பாகி யிருக்கிறது தமிழகம்.



தி.மு.க.? காங்கிரஸ்?



அரசியலில் தனக்கு விருப்பம் இருப்பதையும் தான் காங்கிரஸ் கட்சியின் அபிமானி என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி யுள்ளார் குஷ்பு. இதனால், கோடை சுற்றுலாவிற்காக லண்டன் சென்றுள்ள குஷ்பு, தமிழகம் திரும்பியதும் காங்கிரஸில் சேர்வது குறித்து அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் வட்டாரங்களில் உருவாகியிருக்கிறது. ஆனால், இவர் காங்கிரஸ் அபிமானி என்பது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்குமே தெரியவில்லை. காங்கிரஸ் மேலிடத்தில் விசாரித்தபோது... ""கற்பு குறித்துப் பேசி, சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தவர் குஷ்பு. தற்போது, நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளவருக்கு அரசியல் ரீதியாக வரும் எதிர்ப்புகளை சமாளிக்க அரசியல் ஆர்வம் வந்திருக்கலாம். தவிர இவரது வெற்றிக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஏதேனும் ஒருவகை யில் உதவியிருக்கலாம். அதற்காகத்தான் காங்கிரஸ் அபிமானி என்று தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றபடி குஷ்புவை காங்கிரசுக்கு கொண்டுவர தமிழக தலைவர்கள் இதுவரை யாருமே முயற்சி எடுத்த தில்லை. அவராகவே அவரது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். எங்களுக்குக் கிடைத்த தகவல்படி குஷ்பு தி.மு.க.வில் சேர இருப்பதாகத்தான் தெரிகிறது'' என்கின்றனர்.

No comments:

Post a Comment