shockan.blogspot.com
இமாச்சலப் பிரதேசத்தில் பிடிபட்ட நித்யானந்தாவுக்கு.. கர்நாடக சட்ட மன்றத்தின் பின்பக்கம் இருக்கும் சி.ஐ.டி. போலீஸ் தலைமை அலுவலகம்தான்... கடந்த ஒருவாரமாய் வாசஸ்தலமாக இருக்கிறது.
""நித்யானந்தாவை போன்ற நெஞ்சழுத் தக்காரரை நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் கஸ்டடி விசாரணையில் நாங்கள் வைக்கும் கேள்விகளுக்கெல்லாம் வாய் திறக்க மறுத்து... அசட்டுச்சிரிப்பை வீசுவதும், தியானம் பண்ணுவதுபோல் நடிப்பதும், சம்பந்தா சம்பந்தமில்லாத மந்திரங்களை ஓதுவதுமாக போக்குக்காட்டினார். கிரிமினல்கள் பாணியில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாடகமும் போட்டார். உடனே அவரை ஜெய்தேவா மருத்துவ மனையில் அட்மிட் பண்ணி இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நிரூபித் தோம். கடைசியில் எங்கள் டெக்னிக்கு களைக் கையாண்டு அவரை மெல்ல மெல்ல வாய் திறக்க வைத்திருக்கிறோம். அதற்கு உதவியாக இருந்தது... ’அந்த’ ரஞ்சிதா சி.டி.தான்'' என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
விசாரணையில் அப்படி என்னதான் நடந்தது?
ஆசிரம செக்ஸ் லீலைகள் குறித்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் தராமல் தான் ஒரு தவவலிமை மிகுந்த சந்நியாசி போலவே பாவனை காட்டி... சீன் போட்டுவந்த நித்யானந்தா முன் ஒரு டி.வி.யைக் கொண்டுபோய் வைத்தனர். டெக்கும் தருவிக்கப்பட்டது. சி.ஐ.டி. காக்கிகள் என்ன செய்யப்போகிறார்கள்? என யோசனையாய் நித்யானந்தா பரிதவிக்க...
’"உனக்கு 32 வயது ஆகிறதா?'’என்றனர் விசாரணை அதிகாரிகள். "ஆமாம்' என்று நித்யானந்தா தலையாட்ட... ’"ரஞ்சிதாவுக்கு என்ன வயசு?' என்றனர். எதற்கு இந்தக் கேள்வி என புரியாத நித்யானந்தாவோ... தெரியாது என்று தலையசைத்தார்.’""உனக்குத் தெரியாது. நாங்கள் சொல்கிறோம். அவர் 92- ஆம் ஆண்டு வெளியான நாடோடித் தென்றல் படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். அப்போது அவருக்கு 19 வயது. படம் வந்து 18 வருடம் ஆகிறது. ஆக.. ரஞ்சிதாவின் வயது ஏறத்தாழ 37. வெறும் 32 வயது கொண்ட நீ உன்னைவிட வயதான ரஞ்சிதாவோடு கட்டிலில் கிடக் கிறாய். தன்னைவிட மூத்த பெண்களைத் தேடித் தேடி செக்ஸ் வைப்பதும் ஒருவித செக்ஸ் பிரச்சினை தான்''’ என அதிகாரிகள் கேள்வி மூலமே ‘மடேர்’ என்று அவரது கம்பீரத்தின் மீது அடிபோட.... நிலைகுலைந்த நித்யானந்தா... பதில் ஏதும் சொல்லாமல் தலை கவிழ்ந்துகொண்டார். பின்னர் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் புரள்கிற காட்சிகளை அவர் பார்க்கும்படி முழுமையாக எடிட் பண்ணாமல் ஓடவிட்டனர். அதனை கொஞ்சம் லஜ்ஜையோடுதான் நித்யானந்தாவால் பார்க்க முடிந்தது.
அதில் நித்யானந்தா காவி உடையுடன் கட்டிலில் படுத்திருக்கிறார். அங்கே வெள்ளைநிறக் காட்டன் புடவையில் வரும் ரஞ்சிதா, புன்னகை யோடு நித்யானந்தாவின் கால்களைப் பிடித்து விடுகிறார். அவரைப் பார்த்து நித்யானந்தா பூரிப்பாய் சிரிக்கிறார். பின்னர் பக்கவாட்டில் வரும் ரஞ்சிதா... அப்படியே தாவி நித்யா னந்தா மீது நீளவாக்கில் படுத்துக்கொண்டு அவரை முத்தமிடுகிறார். கொஞ்ச நேரம் முத்தத்தில் மூழ்கிய பின் சரிந்தபடி கட்டிலில் நித்யானந்தாவின் பக்க வாட்டில் உட்கார்ந்து கொள்கிறார் ரஞ்சிதா. பின்னர்... அந்தக் காட்சி வந்ததும் விக்கித்துப் போய் நித்யானந்தா தலைகுனிய... ""இப்ப தலைகுனிஞ்சு என்ன பண்றது? முழுசா பாரு. இது சம்பந்தமா சில கேள்விகள் கேட்கணும்'' என்றபடி அவரது தலையை நிமிர்த்தி விட்டனர். பின்னர் நித்யானந்தாவின் இடுப்புப் பக்கம் ரஞ்சிதா முகத்தைக் கொண்டு போகிறார். உணர்ச்சிவசப்பட்ட நித்யானந்தா அவரை அப்படியே பக்கவாட்டில் இழுத்து இறுக்கி அணைத்துக்கொண்டு... ஒரு காலை அவர் மீது போட்டு கொண்டு... கழுத்தின் அடியிலும் முகத்திலும் ரஞ்சிதாவுக்கு முத்தமழை பொழிகிறார். இந்த இடத்தில் கொஞ்சம் சி.டி.யை நிறுத்திவிட்டு...
‘""சந்நியாசியான நீ இப்படி கட்டிலில் பெண்களுடன் விளையாடுவது சரிதானா?'' என்றனர். கொஞ்சம் யோசித்த நித்யானந்தா ‘""நான் இந்த நேரத்தில் சமாதி நிலையில் இருந்தேன். அதனால் அப்போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. சி.டி.யில்தான் என்னென்னவோ தெரிகிறது'' என்று சமாளிக்க முயல... இதைக்கேட்டு டென்ஷனான அதிகாரி கள் ‘""யோவ் என்ன ரீல் ரீலா சுத்தறே? அன் னைக்கு என்னடான்னா... உடம்பை உதறிட்டு போயிடுவேன்னு கப்ஸா விடறே... இப்ப என் னன்னா சமாதிநிலையில் இருந்தேன்னு சொல்றே? என்ன விளையாடறியா?'' என கோபத்தோடு நெருங்க...
‘""சமாதிநிலையில் இருப்பது உண்மைதான். அப்ப உடம்பும் மனசும் என் வசத்தில் இருக் காது. நான் உடம்புக்கு வெளியே இருந்து அப்போதுதான் உடலுக்குள் வந்தேன். என் உறுப்புகளுக்கு உணர்ச்சியைக் கொண்டு வரத்தான் கை, கால்களை அமுக்கி விட சொல்வது. உடம்பு முழுக்க பிடித்துவிடச் சொல் வேன். இப்படி செய்யும்போது உடம்பும் சுரணை பெறும்'' என்றார் அதே அசட்டு சிரிப்புடன்.
’""சரி கை, காலை அமுக்கவேண்டிய ரஞ்சிதா... உனக்கு முத்தம் கொடுக்குறாங்களே... என் னென்னவோ அசிங்கம் பண்றாங் களே...''’ என்று மீண்டும் அவ ருக்கு அதிகாரிகள் கிடுக்கிப் பிடி போட...
‘""நான் சமாதி நிலையில் இருக்கும் போது... கால் அமுக்கவந்த ரஞ்சிதா... எனக்கே தெரியாம என் னைப் படுக்கையில் பயன் படுத்திக் கொண்டாள் என்பது இப்பதான் தெரியுது'' என்று நித்யானந்தா சமாளிக்க...
‘""அடப்பாவி. பண்றதையும் பண்ணிட்டு அந்தப் பொண்ணுமேல பழிபோடறியே... கொஞ்சம் இரு மிச்சக் காட்சிகளையும் பார்த்துடலாம்'' என மறுபடியும் கேஸட்டை ஓடவிட்டனர்.
ரஞ்சிதாவைக் கட்டியணைத்து முத்த மழை பொழிந்துகொண்டிருந்த நித்யா னந்தாவின் கண்கள்... திடீரென ஒரு பொருளை சந்தேகத்தோடு உற்று நோக்குகிறது. உடனே ரஞ்சிதாவிடம் கை நீட்டி அந்தப் பொருளைப் பார்க்கச் சொல்கிறார். உடனே சங்கடத் தோடு திரும்பும் ரஞ்சிதா... அந்தப் பொருள் இருந்த திசைப்பக்கம் கையை நீட்டி திருப்பி விட்டுவிட்டு மீண்டும் நித்யா மீது படுத்துக் கொள்கிறார்.
இப்போது விசாரணை அதிகாரி கள்..’""படுக்கையில் இருக்கும் நீ... ஏதோ ஒரு திசையை ரஞ்சிதாவிடம் காட்டி.. கவனிக்க சொல்கிறாயே... அங்குதான் கேமரா வைக்கப் பட்டிருக்கிறது என்று எப்படி யூகித்தாய்?'' என்று கேட்க...
நித்யானந்தாவோ ‘""தவ வலிமை கொண்டவன் நான். எனவே... அந்தத் திசையில் இருந்த ஏர் ஃபிரஷ்னர் மீது திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதில் ஏதாவது இருக்கிறதா என்று ரஞ்சிதாவைப் பார்க்கச் சொன்னேன். அவள் அதை சரியாகப் பார்க்கவில்லை. அதில்தான் கேமரா இருந்திருக்கிறது'' என்றார் நித்யானந்தா தவிப்பாய்.
""பெரிய கெடுபிடிக்கு மத்தியில்... பலத்த பாதுகாப்பில் இருக்கும் உன் அறைக்குள் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. அப்படி இருக்க... எப்படி கேமரா உள்ளே போனது?'' என்றனர் காக்கிகள். நித்யானந்தாவோ ""அதுதான் எனக்குக் குழப்பம். ஆனா காரணம் யாருங்கிற தையும் நான் கண்டுபிடிச்சிட்டேன். ஜனவரி 1-ந் தேதி எனக்குப் பிறந்த நாள். அதையொட்டி எனக்குப் பரிசாக ஒரு காஸ்ட்லியான ஏர் ஃபிரஷ்னர் கிடைத்தது. அதை கோபிகாவிடம் கொடுத்து என் அறையில் வைக்கச்சொன்னேன். அதில்தான் சதிகாரர்கள் கேமரா பொருத்தியிருக்கிறார்கள். அதை என் அறைக்குள் என் கட்டிலைக் கவர் செய்யும்படி வைத்தவர் ஒரு பெண்தான். அதையும் கண்டுபிடித்துவிட்டேன். என்ன செய்வது? என் விதி அப்படி'' என்றாராம் நொந்தபடி.
"சரி.. அந்த பெண் எதற்காக கேமராவை வைக்கணும். ஆக அந்தப் பெண் உன்னால் எந்த விதத்திலாவது பாதிக்கப்பட்டிருக்கணும். கேமரா உன் படுக்கை அறைக்குள் வர உன் செகரட்டரி கோபிகா உடந்தையாக இருந்திருப்பாரா? அந்த ஏர் ஃபிரஷ்னர் கேமராவை வேண்டுமென்றே சரியாக கவனிக்காமல் ரஞ்சிதா வைத்திருப்பாரா?' என்றெல்லாம் அதிகாரிகள் சந்தேகம் கிளப்ப... "அப்படியெல்லாம் இல்லை. கோபிகாவும் நல்லவள். ரஞ்சிதாவும் நல்லவள்' என சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் நித்யானந்தா.
""சரி சமாதி நிலையில் இருக்கும் நீ எப்படி முத்தமெல்லாம் கொடுக்குறே? இறுக்கி அணைக் கிறே? ஏடாகூடமெல்லாம் பண்றே?'' என்று அதிகாரிகள் கேட்க.. வெட்கமின்றி... வெட்கச் சிரிப்பு சிரித்தார் நித்யானந்தா.
-விசாரணை இந்த ரீதியில் போய்க்கொண்டிருக்க... தன்னைப் பயன்படுத்திக்கொண்டதாக நித்யானந்தாவால் புகார் சொல்லப்பட்ட ரஞ்சிதாவை விசாரிக்கும் முடிவுக்கு வந்த கர்நாடக சி.ஐ.டி. போலீஸார்...
சென்னை போலீஸின் உதவியோடு சென்னை அபி புல்லா ரோட்டில் இருக்கும் ரஞ்சிதா வீட்டிற்கும் அவரது சகோதரி வீட்டிற்கும் போனார் கள்.
அப்போது அந்த வீடு களில்... வேலைக்காரர்களும் வாட்சுமேன்களும் மட்டுமே இருக்க... விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்கிற நோட்டீஸை விநியோகித்தனர். கூடவே... கர்நாடகா சி.ஐ.டி.எஸ்.பி. யோகப்பா மற்றும் டி.எஸ்.பி.க்களின் செல்போன் நம்பர் களைக் குறித்துக் கொடுத்து... விசாரணைக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லை என்றால் ரஞ்சிதாவுக்குதான் கஷ்டம் என்று சொல்லி விட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து கர்நாடக சி.ஐ.டி. போலீஸை ரஞ்சிதா தொடர்புகொள்ள... ""எங்கே இருந்தாலும் நீங்கள் விசாரணைக்கு வந்துவிடுங்கள். நீங்கள் குற்றவாளி இல்லை. அதனால் சாட்சியமாக இருந்தால் போதும். 15 நாட்களுக்கு முன்பு கூட நீங்கள் வேலூரில் நெடுஞ்சாலை டோல்கேட் அருகே காரை நிறுத்தி இளநீர் வாங்கிக் குடித்தீர்கள். அப்போது புளூ ஜீன்ஸ் பேண்ட்டிலும் வொய்ட் டி சர்ட்டிலும் நீங்கள் இருந்தீர்கள். உங்கள் காரில் இரண்டு இளைஞர்களும் இருந்தார்கள். இதெல்லாம் சரிதானே?'' என சி.ஐ.டி. அதிகாரிகள் கேட்க...
ஒரு நிமிடம் வாயடைத்துப்போன ரஞ்சிதா... ""என்னை இந்த அளவுக்கு ஃபாலோ பண்ணுகிறீர்களா?'' என்றார் அதிர்ச்சியாக.
அதிகாரிகளோ ‘""நாங்கள் உங்களை ஃபாலோ பண்ணவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் குற்றவாளியாக இருந்தால்... எங்கிருந்தாலும் விரட்டிப் பிடித்திருப்போம். உங்களைப் பார்த்த பொதுமக்கள் தந்த தகவல்தான் அது. அதனால் விசாரணைக்கு வந்துவிடுங்கள்''’ என்று சொல்ல...’ ""சரி சரி விசாரணைக்கு வந்திடுறேன்'' என்றார் ரஞ்சிதா. எப்போது வருவீர்கள் என்று கேட்ட அதிகாரிகளிடம் ""சீக்கிரம் வந்துடுறேன்''’ என்றார் உறுதியான குரலில்.
ரஞ்சிதா பேசிய நம்பரை ஆராய்ந்த அதிகாரிகள் ... ரஞ்சிதா அமெரிக்காவில் இருந்து பேசியிருப்பதை உறுதி செய்தனர். விசாரணையில் விரைவில் வாய் திறக்க இருக்கும் ரஞ்சிதாவின் கருத்தறிய அந்த எண்ணில் தொடர்புகொண்டோம். நாட் ரீச்சபிள் நிலையிலேயே அந்த எண் இருந்தது. ரஞ்சிதா மீது ’தன்னைப் பயன்படுத்திய’ குற்றச்சாட்டை வைக்கும் நித்யானந்தா பற்றி ரஞ்சிதாவின் கணவரான... ராகேஷ் மேனன் கருத்தை அவரது நண்பர்கள் மூலம் நாம் கேட்டபோது ‘""என் மனைவி ரஞ்சிதா ரொம்பவும் நல்லவள். சினிமாவில் எவ்வளவோ பேர் எப்படியோ இருந்தாலும்... ரஞ்சிதா மிகுந்த சந்தோசமாக என்னுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்தாள். மிக மிக சந்தோசமாக நாங்கள் குடும்பம் நடத்தினோம். சின்ன சந்தேகத்துக்குக் கூட இடம் வைக்காமல் எங்கள் தாம்பத்யம் நடந்தது. ஆனால் இப்போது எப்படி எப்படியோ செய்திகள் வருகிறது. என் நண்பர்கள் பலரும் வருத்தத்தோடு விசாரிக்கிறார்கள்.
நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். அந்த நித்யானந்தா.. ரஞ்சி தாவை மயக்க நிலைக்குக் கொண்டுபோய்... தான் விரும்பியபடியெல்லாம் பயன்படுத்திக் கெடுத்து விட்டான். சுயநினைவோடு என் மனைவி இப்படி நித்யானந்தாவிடம் இணங்கிப் போயிருக்க மாட்டாள். நான் இப் போதும் என் மனைவியை மதிக்கிறேன். நம்புகிறேன். மனதார அன்பு பாராட்டு கிறேன். என் மனைவியிடம் நூற்றுக்கு நூறு சதம் தவறு இல்லை'' என்கிறார் மாறாத அன்போடு உருக்கமாய்.
வெளியில் இருக்கும் நித்யானந்தாவின் மிச்ச சொச்ச சீடர்கள்... ரஞ்சிதா போலீஸ் விசாரணைக்கு வந்து.. நித்யானந்தாவுக்கு எதிராக எதையும் சொல்லிவிடக்கூடாதே என்ற கரிசனத்தோடு... ரஞ்சிதாவிடம் பேசிவருகிறார்கள். அவர்களின் இந்த பகீரத முயற்சி பலிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
-நமது நிருபர்
நித்யானந்தாவுடனான வீடியோ பற்றி தன் தரப்பில் எந்த கருத்தையும் கேட்காமல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறும் ரஞ்சிதா, இதுவரை வெளிவந்துள்ள வீடியோ காட்சிகள் அனைத்தும் சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டிய நிலையிலேயே இருப்பதாகவும் சொல்கிறார். தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாக கருதுகிறாராம் ரஞ்சிதா. சி.ஐ.டி. போலீஸ் முன்பு ஆஜரானதாகவும், ஸ்டேட்மெண்ட் கொடுத்ததாகவும் வரும் செய்திகள் அனைத்தும் தவறு. பேன்யன் போன்ற தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்படுகிறேன் என்றும் தெரிவித் துள்ளார்.
இமாச்சல பிரதேசில் நித்யானந்தாவுடன் கைதுசெய்யப்பட்ட பக்தானந்தா தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நித்யானந்தாவுக்கும் அவரது ஆசிரமத்திற்கும் இருக்கும் சொத்துவிபரக் கணக்குகள் முழுதும் அறிந்தவர் இவர்தான். ஏகபோகமாக வாழ்ந்த அவரால் சிறை வாழ்வை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் ""என்னை விட்டுடுங்க. நித்யானந்தா பற்றி எந்த விவரத்தைக் கேட்டாலும் நான் சொல்கிறேன். என்னை விட்ருங்க சாமிகளா!'' என எதிர்ப்படும் காக்கிகளிடமெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் வெளியான மார்ச் 2-ம் தேதியில் இருந்து மீடியாக்களிடம் எதுவும் பேசாமல் தலைமறைவாக இருந்த ரஞ்சிதா முதல்முறையாக கடந்த வியாழன் (ஏப்ரல் 29) இரவு தனது வக்கீல்கள் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். ரஞ்சிதாவின் டெல்லி வக்கீல் அனுப்பியுள்ள விளக்கத்தில் இதுவரை தான் எந்தப் பேட்டியும் தரவில்லை என்கிறார். தன் பெயரில் வெளிவந்த பேட்டிகள் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் என்றும் மறுத்திருக்கிறார் ரஞ்சிதா.
தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை அவரது செல் எண்களை டிரேஸ் செய்து... அதன் மூலம் அவரை ஸ்மெல் செய்ததாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. தனது லேப்டாப் மூலம் தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசிவந்தார். அவரது லேப்டாப் எந்த பகுதியில் இருந்து செயல்படுகிறது என கண்காணித்து... அதன்பின்னரே அவர் இமாச்சல பிரதேசில் இருப்பதை லொக்கேட் பண்ணி மடக்கியிருக்கிறார்கள் காக்கிகள்.
No comments:
Post a Comment