Friday, April 30, 2010

shirdi sai baba miracles in malaysia on 30-04-2010

shockan.blogspot.com

shirdi sai baba miracles 30/04/2010



shockan.blogspot.com

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்


shockan.blogspot.com
கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

தான் உறவு வைத்திருந்த பெண்கள் விவரத்தையும், எத்தனை பேருடன் உறவு கொண்டேன் என்பதையும் தனது மனைவியிடம் தெளிவாக கூறி விட்டாராம் உட்ஸ்.

மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

இதையடுத்து உட்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தீர்மானமாக வந்துள்ளாராம் எலின்.

இந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயதான ரேய்ச்சல் கோட்ரியாட் என்ற பெண்ணுடனும் உட்ஸ் உறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதை அந்தப் பெண்ணே வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனக்கு 21 வயதாக இருந்தபோது உட்ஸ் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் ரேய்ச்சல்.

மாங்கனிக்கு சச்சின் பெயர்


shockan.blogspot.com
லக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

டைம் 100... உலகின் செல்வாக்கு மிகுந்தோரில் மன்மோகன், நம்பெருமாள்சாமி, சச்சின்!


shockan.blogspot.com
பிரபல 'டைம்' இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், கண் மருத்துவருமான நம்பெருமாள்சாமி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், எழுத்தாளர் சேத்தன் பகத், இந்திய - அமெரிக்க மருத்துவரும் ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே, டொரான்டோ மருத்துவர் ராகுல் சிங் மற்றும் தொழிலதிபர் கிரண் மஸும்தர் - ஷா ஆகியோர் 2010 ஆம் ஆண்டுக்கான 'டைம்' பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய இந்தியர்களாவர்.



இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றியப் பங்கினைக் கருத்தில் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இப்பட்டியலில் உயரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி எழுதியுள்ள பெப்சி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, "நிறைய தலைவர்களைக் கண்டுள்ள இந்திய வரலாற்றில், குறைந்த காலகட்டத்தில் தன்னிகரற்று விளங்கியவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர்," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவரும், பிரபல கண் மருத்துவருமான பி.நம்பெருமாள்சாமி பற்றி குறிப்பிடுகையில், "அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976 முதல் இதுவரை 36 லட்சம் கண் அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறது - 15 நிமிடத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை. "அனைத்து மக்களுக்கும் பார்ப்பதற்கு உரிமை உண்டு," என்ற மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரரனான நம்பெருமாள்சாமியின் மருத்துவச் சேவை அர்ப்பணிப்பு மிக்கவை," என்று பாராட்டியிருக்கிறது டைம் இதழ்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தனது ஆட்டத்திறனால் வசீகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு அளித்துவரும் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஆர்வலர் சஞ்சித் பங்கர் ராய், ஏழ்மையில் வாடிய 30 லட்சத்துக்கும் மேலானோருக்கு கல்வியறிவும், நல்ல வேலையும் பெற்றுத் தர வழிவகை செய்தது உள்பட இதர சமூகப் பணிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டொரான்டோவில் வசிக்கும் இந்திய மருத்துவர் ராகுல் சிங், அண்மையில் ஹைட்டி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பெண் தொழிலதிபர் கிரண் முஸும்தர் - ஷா, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சம் கிராமவாசிகளுக்கான மருத்துவ காப்பீடுக்கு 20 லட்ச அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியவர். இவர் பெயரில் பெங்களூருவில் இயங்கி வரும் 1,400 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் சேத்தன் பகத் பற்றி ஆஸ்கர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். அதில், இந்திய சமுக கட்டமைப்பை கேத்தனின் எழுத்துகள் வெளிப்படுத்திய தன்மையை வெகுவாக பாராட்டியுள்ளார். கேத்தன் பகத்தின் 'ஒன் நைட் அட் கால்சென்டர்' (One Night @ the Call Centre) என்ற நாவல் கவனத்துக்குரிய பெஸ்ட் செல்லர் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க மருத்துவரும், ஹாவர்ட் பேராசிரியருமான அதுல் குவாந்தே தனது உயரிய மருத்துவச் சேவையால் இப்பட்டியலில் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

நித்யானந்தா விவகாரம்: நடிகை ரஞ்சிதா அறிக்கை

shockan.blogspot.com
புதுடெல்லி, ஏப்.30-2010: பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன் என்று நடிகை ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

நித்யானந்தா சாமியார் விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சிதா நேற்று டெல்லியில் இருந்து தனது வக்கீல் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு(ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும்.

வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக் கெடு விடுத்து இருக்கிறோம்.

ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இப்பிரச்சினை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார்.

எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

மேற்கண்டவாறு ரஞ்சிதாவின் வக்கீல் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்

நடிகை ரஞ்சிதாவின் தாயார் போலீசாருடன் தொடர்பு : பாதுகாப்பு அளித்தால் ரஞ்சிதா நேரில் வரத்தயார் என்று அறிவிப்பு


பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுறா- பட விமர்சனம்

shockan.blogspot.com

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்


எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார் நித்யானந்தா

shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா?பெண்ணா?என்று மருத்துவ பரிசோதனை செய்ய கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்நிலையில் நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் அவர் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.



இதையடுத்து நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து அவர் கர்நாடக ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவை மே-12 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டது.



மகளிர் சிறையில் கைதிகள் இல்லாததால் நித்யானந்தா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா ஆணா பெண்ணா என்று சோதனை நடத்தவிருக்கும் நிலையில் அவர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

'நான் ஆண் அல்ல'.. நித்தியானந்தா பகீர் வாக்குமூலம்: பாலின சோதனை நடத்த முடிவு!

நான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.

இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

இந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.

இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.

நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, April 29, 2010

Nithyananda-timeline-fraud


shockan.blogspot.com

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?


shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.



இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.



போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

திருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா


shockan.blogspot.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.



இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!


shockan.blogspot.com
லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ் அடுத்து டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.

போனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.

கடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.

தற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.

கன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம்

அம்பானியை தேடி போய் பிரசாதம்-பூசாரி நீக்கம்?


shockan.blogspot.com

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ்அம்பானியை அவரது அறைக்குப் போய் பிரசாதம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தலைமைப் பூசாரி பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி.ஐ.பி. உடனடி தரிசனம் போன்ற முறைகள் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி கடந்த 19-ந்தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். இதற்காக அவருக்கு சிறப்பு விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது.

அவர் அங்கிருந்து சாமி கும்பிட சென்றார். இதையறிந்ததும் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதலு கோவிலுக்கு வெளியே ஓடிச்சென்று முகேஷ் அம்பானியை வரவேற்றார். பின்னர் அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வணங்கினர்.

பின்னர் அவர் கருவறை அருகே சென்று சுமார் 20 நிமிடம் வரை சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து தனது அறைக்கு புறப்பட்டு சென்றார்.

அதன் பிறகு ரமணா பிரசாதங்களை எடுத்துக்கொண்டு முகேஷ் அம்பானி அறைக்குச் சென்றார். பின்னர் அதை அவரிடம் கொடுத்து சடாரியை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

தலைமை அர்ச்சகரின் இச்செயலுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஏழுமலையான் முன்பு அனைவரும் சமம்தான். அம்பானி அறைக்கு சென்று தலைமை அர்ச்சகர் பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை அர்ச்சகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்பது பற்றி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்!


shockan.blogspot.com
காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.

இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.

எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை


shockan.blogspot.com
லலித் மோடி விரும்பினால், ஐபிஎல் லைப் போன்ற புதிய அமைப்பைத் தொடங்க அவருக்கு ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்று லலித் மோடியின் தந்தை கே.கே. மோடி கூறியுள்ளார்.

மோடியின் தந்தை கே.கே.மோடி, தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் மோடி விரும்பினால் புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கட்டும். அதற்காக ரூ.400 கோடி பணம் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மால்பரோ, போர் ஸ்கொயர், ரெட்அன்ட் ஒயிட் ஆகிய சிகரெட் வகைகளை தயாரித்து விற்கும் காட்பிரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் கே.கே. மோடி. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.3500 கோடியாகும்.

தற்போது தனது மகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கே.கே. மோடி. இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர் லலித் மோடி. இதனால் கூடஅவர் நீக்கப்பட்டிருக்கலாம்.

அவரை சிலர் குறி வைத்து நீக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடி மனம் தளரக் கூடாது. எதிர்த்துப் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

லலித் மோடிக்கு எங்களது குடும்பத்தினர் அனைவரும் முழு ஆதரவாக உள்ளோம். லலித் மோடி விரும்பினால் ஐபிஎல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க ரூ. 400 கோடியைத் தர நான் தயார்.

நீங்கள் வெற்றிகரமாக இயங்கினால் அதை சிலர் விரும்பாமல் போகலாம். உங்களைக் குறிவைக்கலாம். அதுதான் லலித் மோடி விவகாரத்தில் நடந்துள்ளது. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி ஒரு இடத்தில் அதிகஅளவில் பணம் புழங்கினால் அங்கு அரசியலும் நுழைந்து விடுகிறது.

லலித் மோடியின் வாழ்க்கை முறையை நான் குறை சொல்ல மாட்டேன். அது மோடி குடும்பத்தினர் அனைவரிடமும் உள்ளதுதான். மோடியின் தம்பியும் அவரைப் போலத்தான்.

மோடி செய்த ஒரே தவறு ஒரு கம்பெனியின் சிஇஓ போல நடந்து கொண்டது மட்டுமே. மற்றபடி அவரிடம் எந்த்த் தவறும் இல்லை. அவரை நம்பித்தான் அணி உரிமையாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோடி மீதான நம்பிக்கைதான் இந்த அமைப்பு இவ்வளவு தூரம்வளரக் காரணம் என்றார் மோடி.

இதற்கிடையே, தனது தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை விரைவில் லலித் மோடி ஏற்கவுள்ளாராம்.

குட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா!


shockan.blogspot.com
இந்தோனேஷிய கடல் பகுதியில் குட்டித் தீவு ஒன்றை வாங்க நித்யானந்தா திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

நித்யானந்தாவிடம் ஏராளமான பணம் இருப்பதும், அதை பல்வேறு நாடுகளில் அவர் முடக்கி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

அவரது பெங்களூர் தலைமை தியான பீடம் சார்பில் 4 வங்கிகளில் பல்வேறு கணக்குகளும், 2 டிரஸ்ட் கணக்குகளும் உள்ளன.

2003ம் ஆண்டு தியான பீட சாரிடபிள் டிரஸ்டும், 2005ல் நித்யானந்தா தியான பீட டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இவற்றின் கணக்குகளிலும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த இரு டிரஸ்டுகளும் கடந்த ஆண்டு தலா ரூ.5 கோடி மற்றும் ரூ.8.5 கோடி வரி செலுத்தியுள்ளன.

நித்யானந்தாவின் வீடியோ வெளியாகி வழக்குகள் பதிவானதும் இந்த வங்கி கணக்குகள் அனைத்தையும் கர்நாடக போலீசார் முடக்கிவிட்டன.

நித்யானந்தா ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவரது தம்பி கோபிநாத் நடத்தி வந்துள்ளார்.

அதன்மூலம் கடவுள் சிலைகளை வெளிநாடுகளில் விற்றதன் மூலம் ஆசிரமத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது தவிர மற்ற நாடுகளில் உள்ள தியான பீட கிளைகளுக்கு வந்த பணம் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வருமானத்தை அவர் இந்தியாவில் கணக்கில் காட்டவில்லை. இதனால் அது குறித்து அமலாக்கப் பிரிவினரிடம் போலீசார் தகவல் தந்து விசாரி்க்குமாறு கோரியுள்ளனர்.

தியான பீடம், டிரஸ்ட் இரண்டையும் தாண்டி நித்யானந்தாவுக்கு இன்னொரு தனியான கணக்கும் உள்ளது. அதிலும் ரூ. 32 கோடி இருப்பது கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு வங்கிகளிலும் நித்யானந்தாவின் பணம் உள்ளதா என்ற விசாரணை நடக்கிறது.

நித்யானந்தாவி்ன் 2 டிரஸ்டுகளிலும் அவரது செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தா, அவரது மனைவி ஜமுனா ராணி இருவரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

மேலும் இந்த இரு டிரஸ்டுகளுக்கும் வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. அந்த சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு பிடுதி தியான பீடத்துக்கு வருமான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி ஏராளமான பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க ஆசைப்பட்ட நித்யானந்தா, அதற்காக இந்தோனேசியாவல் சிலரை தொடர்பு கொண்டிருந்தாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

இரவில் மட்டுமே விசாரிக்க வேண்டும்- கர்நாடக போலீஸுக்கு ரஞ்சிதா கோரிக்கை

shockan.blogspot.com
பகலில் விசாரணை க்கு வந்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே இரவில் மட்டும் விசாரணையை நடத்துங்கள். அதையும் ரகசிய இடத்தில் நடத்துங்கள் என்று கர்நாடக சிஐடி போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளாராம் நடிகை ரஞ்சிதா.

நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா.

Wednesday, April 28, 2010

யூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்ளது

 
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற பாடகியான எம்.ஐ.ஏ (M.I.A.) வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஆல்பமான 'போர்ன் ஃபிரீ' ('Born Free') என்பதை யூட்டியூப் (YouTube) தளமானது நீக்கியுள்ளது. இந்தப் புதிய வீடியோவை எம்.ஐ.ஏ இம்மாதத்தில்தான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் குறித்த வகை மக்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேற்கத்தைய சமூகத்திலும் இவ்வாறான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை எம்.ஐ.ஏ நீண்ட நாட்களாகக் கொண்டுள்ளார். அதை அவர் தனது ஆல்பத்திலும் வெளிக்காட்டியதால் அது உடனும் பெருமளவு சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து, அந்த வீடியோவை யூட்டியூப் தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.



இதேவேளை சில நாடுகளில் இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு வயது வரம்பு இடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து யூட்டியூப் தளத்தின் பேச்சாளரைக் கேட்டபோது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக தாம் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்ததோடு, பெருந்தன்மையான இந்த வன்முறைகளைக் காண்பிக்க தமது இணையம் மறுத்துள்ளதையும் உறுதிப்படுத்தினார். யூட்டியூப்பில் ஆபாசப் படங்கள் மற்றும் வக்கிரச் சம்பவங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர்கள், இவ்வீடியோ 18 வயதுக்குக் குறைந்த பயனர்களுக்குப் பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.










Gordon Brown calls Gillian Duffy a bigoted woman on microphone in Rochdale during election campaign

கமல் தமிழ் இனத் துரோகியா?


shockan.blogspot.com
இலங்கையில் ஜூன் மாதம் நடக்க விருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவிற்கு எதிரான கிளர்ச்சிகள் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை முற்றுகையிட்டு "அமிதாப்பச்சனே...... ஈழத் தமிழினத்தை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் இந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது' என்று ஆர்ப்பரித்துள்ளனர் மும்பை யில் உள்ள "நாம் தமிழர்' இயக் கத்தினர். அப்போது வீட்டில் இருந்த அமிதாப், தனக்கு எதிராக போராட்டம் நடத்திய "நாம் தமிழர்' இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து அவர்களின் உணர்வுகளை கேட்டறிந்ததுடன் இது பற்றி என் நிலையை விரைவில் தெரிவிக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

இதே விழாவில் தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் களும் தொழில்நுட்பவியலாளர்களும் கலந்துகொள்ள தீர்மானித்திருப்பதால் அவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் தமிழகத்தில் நடத்த, நாம் தமிழர் இயக்கம், இந்து மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் கேட்டபோது, ""இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டமைப்பின் கீழ் ஐ.ஐ.எஃப்.ஏ. என்கிற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. முதன் முதலில் 2000-த்தில் துவக்கப்பட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு வருஷமும் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. உலக நாடுகளில் இந்திய திரைப்படத்தின் தொழில் வணிகத்தை பெருக்கவும் ஹிந்தி திரைப்படங்களை வெளிநாடுகளில் முதன்மைப் படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கம். இந்திய திரைப்பட விருதுகள் என்றாலும் இதுவரை ஒரு தமிழ்த் திரைப்படத் திற்கும் விருது வழங்கப்பட்டதில்லை.

இதற்கு முன்பு லண்டன், துபாய், நெதர்லாந்த் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விழாவை நடத்தியிருக்கிறது. அப்போது அந்த நாடுகளின் சுற்றுலா பொருளாதாரம் பன்மடங்கு அதி கரித்தது. இதனாலேயே இந்த விழாவை நடத்த பல நாடுகள் போட்டி போடுகின்றன. இந்த விழாவை இந்த வருஷம் தங்கள் நாட்டில் நடத்த கனடா, அயர்லாந்த், தென்கொரியா ஆகிய 3 நாடுகள் போட்டி போட்டது. இறுதியாக தென்கொரியாவில் நடத்துவ தென்று முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 27 வரை இதான் முடிவு.

திடீரென்று இலங்கையின் சுற்றுலா அமைச்சர் அச்சலாஜகோடா, "சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கை நடத்துகிறது' என்று அறிவித்தார். இது பற்றி நாங்கள் விசாரித்த போது, போர் நடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங் கையை காப்பாற்றிக்கொண்டிருந்தது ஐரோப்பிய நாடுகள் வழங்கி வந்த வர்த்தகத்திற்கான வரிச்சலுகைகள்தான். யுத்தத்திற்குப் பிறகு ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்காக இந்த வரிச்சலுகையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தன ஐரோப்பிய நாடுகள். இதனால் இன்றளவும் பொருளாதார வீழ்ச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது ராஜபக்சே அரசு. இதனை சரிக்கட்டத்தான் இந்திய அரசின் உதவியுடன் விழாவை இலங்கைக்கு கடத்தியிருக்கிறார் ராஜபக்சே. இந்த விழாவை நடத்துவதன் மூலம் உலக நாடுகளில் உள்ள தொழில் நிறு வனங்களும் சுற்றுலா பயணிகளும் எவ்வித பயமுமின்றி இலங்கைக்குள் வருவார்கள். அதன் மூலம் இலங்கை யின் பொருளாதாரம் மேம்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

அதனால் இந்த விழாவை பிரமாண்டப்படுத்த ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இவரது மனைவி ஜெயாபச்சன், கரன் ஜோகர், மன்மோகர் ஷெட்டி, பகலஜ் நிஸ்லாணி, ரமேஷ்ஷிப்பி, ஷான் சிராப், வினோத்கண்ணா உள்ளிட்ட பிரபலங்களை விழாவின் தூதராக நியமித்துள்ளது இலங்கை. தவிர அமிதாப், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஹிந்தி பிரபலங்களின் ஆட்டம் பாட்டம் என கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் இந்தியாவி லிருந்து அனைத்து மொழிகளையும் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கேமராமேன்கள், டெக்னிஷியன்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களை தவிர இந்தியா உள்பட சர்வதேச நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்களும் கலந்துகொள்கிறது.

இந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, மாதவன், விஜய், அஜீத், டைரக்டர் மணிரத்னம் உள்ளிட்டோரை கூட்டமைப்பின் வாயிலாக அழைத்திருக்கிறது இலங்கை அரசு.

ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே அரசின் அழைப்பை ரஜினிகாந்த் மட்டும் நிராகரித்து விட்டார். கமலஹாசனும் மணிரத்னமும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களின் நிலை என்ன வென்று தெரியவில்லை.

கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டி சீனாவில் நடந்தது. ஒலிம்பிக் ஜோதியை இந்தியா வுக்கு எடுத்து வந்தபோது, திபெத்தியர்களை சீனா அடி மைப்படுத்தி வைத்துள்ளதை சுட்டிக்காட்டி ஜோதியை வாங்க மறுத்தவர் இந்திய கால்பந்து டீமின் கேப்டன் பாய்சுங் பூட்டியா. அவரது உணர்வுகளில் 1 சதவீதமாவது நமது ஹிந்தி திரைப்படத் துறையினருக்கும் தமிழகத் திரைப்படத் துறையினருக்கும் இருக்கவேண்டாமா? இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக திரைத்துறையினர் யார் சென்றாலும் அவர்களுக்கு எதிரான போராட்டம் தீவிர மடையும்'' என்று விரிவாகவும் ஆவேசமாகவும் பேசினார் கண்ணன்.

அமிதாப்பிற்கு எதிரான போராட் டங்களை முன்னெடுத்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானிடம் பேசிய போது,

""மும்பையில் மட்டுமல்ல தமிழகத்திலும் இந்த போராட்டங்களை முன்னெடுக்க விருக்கிறோம். இலங்கைக்கு செல்வதை பரிசீலிப்பதாக அமிதாப் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளையும் ஈழத்தில் ராஜபக்சே நடத்திய கொடூரங்களையும் திரைப்படத்துறையினர் உணர வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இவ்விழாவில் யார் கலந்துகொண்டாலும் அவர்கள் தமிழினத் துரோகிகள். அந்த துரோகிகளை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிரான எங்களின் கிளர்ச்சிகள் வீரியமாக எழும்'' என்கிறார் கோபமாக.

"பலேபாண்டியா' பயங்கரம்!


shockan.blogspot.com
நடிகர் திலகம் நடித்து, ஓகோ என்று ஓடிய "பலே பாண்டியா' தலைப்பில் இப்போது ஒரு படம் தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் சித்தார்த். இவர் பிரபல இயக்குநர்களான சஞ்சய் பன்சாலி, ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், கே.எஸ். ரவிகுமார், எஸ்.பி. ஜனநாதன் ஆகியவர்களின் படங்களுக்கு விளம்பர டிசைனர்.

இந்தப் படத்தின் ஹீரோ விஷ்ணு. இவர் "வெண்ணிலா கபடிக்குழு' ஹீரோவாக நடித்தவர். நாயகி பியா "கோவா', "பொய் சொல்லப் போறோம்' படங்களில் நடித்தவர். அமர், ஜிப்ரான் என்ற இரு வில்லன்கள் அறிமுகமாகின்றனர்.

இயக்குநர் சித்தார்த் ஆர்.எஸ். மணியின் பேரன். மணி யார்?

எடிட்டராக வாழ்க்கையைத் தொடங்கி பின் இயக்குநராகி, தயாரிப்பாளராகவும் விஸ்வரூபம் எடுத்தவர். சிவாஜி- பத்மினி நடித்த "புனர்ஜென்மம்', ஜெமினி- சாவித்திரி நடித்த "மாமன் மகள்', கண்ணம்மா நடித்த "கண்ணகி' படங்களை இயக்கியவர். கர்நாடக சங்கீத மேதை டி.கே. பட்டம்மாள் இவர் பாட்டி. இத்தகைய திரைப்பட பின்னணி கொண்ட சித்தார்த் இயக்கும் "பலே பாண்டியா' கதையைக் கேட்டதும் தயாரிக்க முன் வந்து விட்டார்கள் கல்பாத்தி அகோரம் நிறுவனத்தார்.

வாலி, தாமரை இவர் களோடு டாக்டர் பர்ன் என்ற மலேஷியாக்காரர் "இவன் தேடல் வேட்டை' என்ற பாடலை எழுதி, பாடியும் இருக்கிறார்.

போகவர எட்டு மணி நேரமாகும் கடல் மத்தியில் படமாக்கி சாதனை படைத்திருக்கிறார் சித்தார்த்.

ஹீரோ விஷ்ணு முதல் பாதியில் அப்பாவியாகவும் பின்பாதியில் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.

இசைக் குடும்ப ரத்தம் ஓடும் இயக்குநர் சித்தார்த், பின்னணிப் பாடகரான தேவன் ஏகாம்பரத்தை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்திருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்கா. ஆனால் தமிழ் சினிமாமீது மாளாத காதல் கொண்டு இசை கற்று பின்னணிப் பாடகராக கடந்த பத்தாண்டுகளாகப் பாடி வருகிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் "காதலர் தினம்' படத்தில் "ஓ மரியா...' பாடலை பாடி புகழ் பெற்றவர்!

எப்படியோ "பலே பாண்டியா' மெகாஹிட்டானால் சரி!

97 தடவை நடிகைக்கு முத்தம்...


shockan.blogspot.com
திரைப்பட உலகில் இப்போதெல்லாம் தங்களைத் தாங்களே புரமோட் செய்து கொள்கிறார்கள். அந்த மாதிரி புதுமுக நடிகர் சதீஷ் .எஸ் "கால்கொலுசு' என்ற படத்தைத் தயாரிக்கிறார். எழுத்து இயக்கமும் சதீஷ்தான். ஹீரோவும் இவரே.

காதலின் சுகத்தையும் வலியையும் உணர்த்தும் கதை. சுகத்தையும் வலியையும் கொடுப்பவர்கள் நீது, சஹானா ஆகிய இரு நாயகிகள்.

கிராமத்துக் காதலர்களான சதீஷ்- நீதுவைப் பிரிப்பதற்காக அவர்கள் குடும்பத்தினர் பல தில்லாலங்கடி திட்டங்களைத் தீட்டுகிறார்கள். வில்லன்களை வைத்து ஹீரோவை அடித்து அச்சமூட்டி பிரிக்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் காதலைப் பிரிக்க முடியவில்லை. அவர்களைப் பிரிக்க ஒரு பெண் குட்டியைக் களம் இறக்குகிறார்கள். அந்த கவர்ச்சிப்புயல் சஹானா.

சஹானா தன் கவர்ச்சி வலையில் நாயகன் சதீஷை மாட்ட வைக்க முயல்கிறார். அதைப் புரிந்துகொண்ட சதீஷ், சஹானாவின் கவர்ச்சி வலையில் மயங்குவதுபோல் நாடகமாடுகிறார். இந்தக் காட்சிகளில் சஹானாவும் சதீஷும் மிகமிகமிக நெருக்கமாக ரசிகர்களை சூடேற்றும் விதமாக நடித்திருக்கிறார்கள்.

இதைப் பார்க்கும் நீதுவும் தனது காதலனைத் தன் வசப்படுத்துவதற்காக ஹீரோவின் உதட்டோடு உதடாக முத்தம் கொடுக்கிறார். இந்தக் காட்சி 97 முறை படமாக்கப்பட்டது.

(ஹீரோவுக்கு இது அல்வா சாப்பிட்ட மாதிரிதானே இருந்திருக்கும்?)

இந்தப் படத்தின் இன்னொரு ஹைலைட்- கண் பார்வையற்ற சந்தோஷ், இசைக் கல்லூரியில் படித்த சஞ்சீவ் இருவரும் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.

இன்னொரு செய்தி சொல்ல மறந்திட்டேன். இந்தப் படத்தின் பாடல்களையும் இயக்குநர் சதீஷே எழுதி இருக்கிறார்.

இன்னொரு டி. ராஜேந்தர் உருவாகி இருக்கிறார். வெற்றி பெற்றால் வாழ்த்தலாம்.

வாய்ப்பு தேடும் வானம் பாடி!


shockan.blogspot.com
சென்னை வளசரவாக்கம் லாஜாட்லின் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை படித்தவர் சஜனா. அதன்பின் பெங்களூருவில் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். நடிப்புமீது மாறாத காதல் இந்த இளம் சிட்டுவுக்கு! அதனால் நடிகையாகத் தேவையான நடனம், நீச்சல், யோகா எல்லாம் கற்று நடிக்கத் தயாராக இருக்கிறார்.

தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் சரளமாக- அச்சரம் பிறழாமல் பேசக்கூடியவர்.

உங்களுக்குப் பிடித்த நடிகைகள் யார் யார்?

""தமிழில் ஜோதிகா, மலையாளத்தில் காவ்யா மாதவன், இந்தியில் காஜல் அகர்வால்'' என்கிறார் சஜனா.

புதுமுகங்களைத் தேடி மும்பைக்கு அலையும் இயக்குநர்களே! அழகுப் பதுமையாக ஒரு சிட்டு சென்னையிலேயே இருக்கிறது.

கூப்பிடும் தூரத்தில் ஒரு தேவதை இருக்கு! பிடியுங்கோ; நடிக்க வையுங்கோ!

குண்டுப் பையனைக் காதலிக்கும் ஒல்லி...


shockan.blogspot.com
கே. வேணுகோபால் வழங்க, சஹானா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பி. ராம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம்- "விநாயகா'. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த "விநாயகடு' என்ற படத்தின் ரீமேக்கான இப்படத்தை, விஜய்க்கு "லவ் டுடே' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி, தொடர்ந்து "துள்ளித் திரிந்த காலம்', "காதல் சுகமானது', "ஆரியா' போன்ற படங்களை இயக்கிய பாலசேகரன் இயக்குகிறார்.

"விநாயகா' படத்தில் புதுமுகம் கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கிறார். பையா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த சோனியா, இப்படத்தில் கதாநாயகியாக அறிமுக மாகிறார். மற்றொரு நாயகியாக பூனம்கவுர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். மற்றும் கிளி, சின்ராசு, சத்யா கிருஷ்ணா ஆகியோரும் நடிக்கிறார் கள்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினி யராக இருக்கும் கதாநாயகன், சாட்டிங் செய்யும்போது, சென்னை யில் உள்ள ஒரு இளம் பெண் அறிமுகமாகிறார். சாட்டிங்கிலேயே இருவரும் நட்பாகி, ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாமலே நாளடைவில் காதலர்களாகிறார்கள். முகம் தெரியாத தன் காதலியைத் தேடி கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு வருகிறார் கதாநாயகன்.

இருவரும் ஏற்கெனவே திட்ட மிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வருகிறார்கள். படு குண் டான கதாநாயகனைக் கண்டதும் அதிர்ச்சியடைகிறார் கதாநாயகி. அது மட்டுமல்ல; இத்தனை நாட்கள் சாட்டில் உரையாடி யதும், காதலித்ததும் தான் இல்லை என்றும்; அவளது தோழி என்றும் அவனிடம் பொய் சொல்கிறாள். அதைக் கேட்டு அப்ஸெட் டாகும் கதாநாயகன் தன் காதலில் வெற்றி அடைந்தானா, இல் லையா என்பதே "விநாயகா' படத்தின் கதை.

இப்படத்தின் கதைப்படி கதாநாய கன் மற்றவர்களை விட படு குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சுமார் 90 கிலோ எடையுள்ள கிருஷ் ணன் என்பவரை தேடிக் கண்டுபிடித்து இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலசேகரன்.

"உண்மையான காதலுக்கு உருவம் முக்கியமில்லை; உள்ளம்தான் முக்கியம்' என்ற கருத்தை மையப் படுத்தி "விநாயகா' திரைப்படம் உருவாகிறது.

பிபாஷா ஊட்டிய கேக்!


shockan.blogspot.com
பிரபல மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர ராஜன் வாரிசு இந்திரஜித் 12 நாட்களில் படமாக்கி திரைக்கு வந்து கின்னஸ் சாதனை படைத்த "சிவப்பு மழை' படம் மூலமாக ஒளிப்பதி வாளராக அறிமுகமாகியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் முதல் படத்தின் கின்னஸ் சாதனைச் சான்றிதழை தமிழக முதல்வர் கலைஞரிடம் காண்பித்து, ஆசி பெற்றுள்ளார்.

இந்த கின்னஸ் சாதனை படத்தின் அனுபவத்தைப் பற்றி ஒளிப்பதிவாளர் இந்திரஜித்திடம் கேட்டோம்:

""ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணனிடம் உதவி கேமராமேனாக விஜய் நடித்த "திருப்பாச்சி', ஸ்ரீகாந்த் நடித்த "பம்பரக் கண்ணாலே', "டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' என்ற இந்திப் படத்திலும் பணியாற்றினேன்.

அடுத்து பிரபல ஒளிப்பதிவாளர் ரவி யாதவிடம் ஏழு இந்திப் படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்தேன். அக்ஷய் கன்னா, ஷாயித் கபூர், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்த "36 சைனா டவுண்', சஞ்சய் தத், பிபாஷா பாசு, அஜெய் தேவ்கன் நடித்த "மிஸ்டர் ப்ராடு', பாபி தியோல், அக்ஷய் கண்ணா நடித்த "நக்காப்', பிபாஷா பாசு, கேத்ரினா கயிப் நடித்த "ரேஸ்', ஹர்மன் பவேஜா, ஜெனிலீயா நடித்த "இட்ஸ் மை லைப்', செலீனா ஜெட்லீ, இஷா கோபிகர் நடித்த "ஹலோ டார்லிங்', விவேக் ஓபராய், அருணா, நந்திதா சென் நடித்த "பிரின்ஸ் போன்ற பிரம்மாண்ட படங்களிலும் உதவி யாளராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு.

"கனவு காண்கிறேன்' பாடலை ஏவி.எம். ஸ்டுடியோவில் ஐந்தே மணி நேரத்தில் வைத்தியநாதன் இயக்கத்தில் பாபி நடன அமைப்பில் நான் படமாக்கி யதை யூனிட் முழுவதும் பாராட்டினார்கள். இந்த வாய்ப் பைத் தந்த ஹீரோ சுரேஷ் ஜோகிம், தயாரிப் பாளர் மீனா சக்திவேல், டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மறக்க மாட்டேன்.

லண்டனில் நடந்த இன்னொரு மகிழ்ச்சியான விஷயம்.

"மிஸ்டர் ப்ராடு' படப்பிடிப்பில் எனது பிறந்த நாளை எனது நண்பர் மூலமாகத் தெரிந்த ரவி யாதவ், இயக்குநர் அப்பாஸ் மூஸ்தான் இருவரும் பெரிய கேக் ஒன்று ஆர்டர் செய்து, படப்பிடிப்பு நடந்த கப்பலில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். ரவி யாதவ், அப்பாஸ், மூஸ்தான், பிபாஷா பாசு ஆகியோர் கேக் ஊட்டி வாழ்த்து சொன்னது என் வாழ் நாளில் மறக்க முடியாத சம்பவம்!'' என சிலிர்க் கிறார் இந்திரஜித்!

உலக சினிமா வரலாற்றில் முதல் படம்!


shockan.blogspot.com
27 வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடித்து வெள்ளிவிழா கண்டு, மிகப்பெரிய வெற்றியடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிய படம்- "மலையூர் மம்பட்டியான்'.

தியாகராஜனுக்கு ஜோடியாக சரிதா, சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி நடிக்க, ஜெய்சங்கர், செந்தாமரை, சங்கிலிமுருகன் ஆகியோரும் அதில் நடித்தனர். 1983-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மலையூர் மம்பட்டியான், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் கிருஷ்ணம்ராஜுவும், கன்னடத்தில் அம்பரீஷும், இந்தியில் ரஜினி காந்தும் மம்பட்டியானாக நடித்தனர். இந்தியில் ரஜினிக்கு ஜோடியாக சரிகா நடித்தார். இப்படத்தில் நடித்த ரஜினிக்கு இந்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

27 வருடங்களுக்குமுன் பல மொழிகளிலும் சரித்திர சாதனையை நிகழ்த்திய மலையூர் மம்பட்டியான் படத்தை பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க மீண்டும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகிறது.

இப்படத்தை தியாகராஜனே இயக்கி தயாரித்து வருகிறார். தான் கதாநாயகனாக நடித்த படத்தை தனது மகனை வைத்து அவரே இயக்கி தயாரிப்பது இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல; உலக சினிமா வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.

மம்பட்டியானாக பிரசாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக சரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானும், சில்க் ஸ்மிதா நடித்த வேடத்தில் இந்தி யில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகையான மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். ஜெய்சங்கர் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க, கவுண்டமணி நடித்த வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

சங்கிலிமுருகன் நடித்த போலி மம்பட்டியான் வேடத்தில் ரியாஸ் கானும், செந்தாமரை நடித்த பண்ணையார் வேடத்தில் கோட்டாசீனிவாசராவும், அவருக்கு உதவியாளராக மனோபாலாவும், பிரசாந்தின் அப்பாவாக விஜயகுமாரும், அம்மாவாக "என்னுயிர்த்தோழன்' கதாநாயகி ரமாவும் நடிக்கி றார்கள். இவர்கள் தவிர கலை ராணி, ஹேமலதா என மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டமே நடிக்கும் மம்பட்டியான் படம் கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகிறது. ரிலீஸ் எப்போ?

ஐஸ்வர்யாராய் எதிர்ப்பு:மணிரத்னம் எச்சரிக்கை


shockan.blogspot.com
இதிகாச காவியமான ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களில் மாற்றம் செய்து இந்த நவீன காலத்திற்கேற்ற முறையில் படமாக எடுக்கிறார், பிரபல டைரக்டர் மணிரத்னம்.


தமிழ் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்திற்கு இந்தியில் ராவண் என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரும், துணை வேடங்களில் கோவிந்தா, ரவி கிஷண், நிகில் திவேதி, தேஜஸ்வினி கோல்காபூர், பிரியாமணி ஆகியோரும் நடிக்கின்றனர்.


இந்தப் படம் வரும் ஜுன் மாதம் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் டப்பிங் செய்யப்பட இருக்கிறது.


படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டது.


படத்தின் கதைப்படி, 90 அடி உயரத்தில் இருந்து கீழே சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றில் அபிஷேக்பச்சன் குதிப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சியில் அபிஷேக்பச்சனுக்கு பதில், `டூப்' நடிகரை வைத்து படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார்.







ஆனால் அந்த காட்சியில், நான்தான் நடிப்பேன் என்று அபிஷேக்பச்சன் பிடிவாதம் செய்தார். ஆற்றுக்குள் மிகப்பெரிய பாறைகள் இருக்கக்கூடும். அதில் மோதினால், உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மணிரத்னம் எச்சரித்தார். என்றாலும், அபிஷேக்பச்சன் பயப்படாமல், அந்த காட்சியில் தானே நடிப்பதாக கூறினார்.


படப்பிடிப்பில் உடன் இருந்த ஐஸ்வர்யாராயும், கணவர் அபிஷேக்பச்சனிடம் அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவரை அபிஷேக்பச்சன் சமாதானப்படுத்தினார்.


ஒகேனக்கல்லை சேர்ந்த குழந்தைகள் கூட இந்த உயரத்தில் இருந்து குதித்து விளையாடுகிறார்கள். அந்த குழந்தைகளுக்கு உள்ள துணிச்சல் என்னிடம் இல்லையா?என்று கேட்டு மனைவியை அடக்கினார். பின்னர், அந்த காட்சியில் நடிப்பதற்காக 90 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறினார்.


படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் `என்ன ஆகுமோ?'' என்று பயந்து கொண்டிருக்க, அபிஷேக்பச்சன் வெற்றிகரமாக அந்த காட்சியில் நடித்து முடித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.

ரஞ்சிதா இருக்கும் இடத்தை தெரிவித்த நித்யானந்தா


shockan.blogspot.com
நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை கர்நாடக சிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார் நித்யானந்தா.



நித்யானந்தா கொடுத்த செல்போன் எண் மூலம் ரஞ்சிதாவிடம் கர்நாடக சிஐடி போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது விசாரணைக்கு பெங்களூரு வருமாறு ரஞ்சிதாவுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இரண்டொரு நாளில் ரஞ்சிதா பெங்களூரு வந்து கர்நாடக சிஐடி போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்தபோது ரஞ்சிதாவுடன் நித்யானந்தா 174 முறை தொலைபேசி மூலம் பேசியுள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அந்த எண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது அவரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன.



இந்நிலையில் ரஞ்சிதாவின் வேறு ஒரு தொலைபேசி எண்ணை போலீசாரிடம் நித்யானந்தா தந்தார். அதன்மூலம் ரஞ்சிதாவிடம் போலீசார் பேசி விசாரணைக்காக பெங்களூர் சிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.



அதேசமயம், ரஞ்சிதா தப்பி விடாமல் தடுப்ப்பதற்காக அவர் மறைந்துள்ள இடத்திற்கு போலீஸ் தனிப்படையும் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பந்த்தும் பல்வலியும்!

shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... மக்கள் பிரச்சினைக் காக அ.தி.மு.க தன் கூட்டணிக்கட்சி களை அரவணைத்து ஒரு போராட்டத்துக்கு வந்திருப்பது தமிழக அரசியலில் முக்கியமான விஷயம்தானே!''

""பொதுவேலை நிறுத்தத்தைச் சொல்றியா? அது தேசிய அரசியல் சமாச்சாரமாச்சே!''

""தேசிய அளவில் இடதுசாரிகள் முன்னெடுத்த பொதுவேலை நிறுத்தம்னாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் நடந்ததுங்கிறதால அதற்கொரு எதிர்பார்ப்பு இருந்தது. வேலைநிறுத்தத்திலும் விளக்கப் பொதுக் கூட்டத்திலும் கூட்டணிக்கட்சிகளை இணைச் சுக்கணும்னு அ.தி.மு.க.வினருக்கு ஜெ உத்தர விட்டிருந்தார்.''

""கூட்டணிக் கட்சியினரே ஆச்சரியப்பட்ட விஷயமாச்சே!''

""ஆனா, பல இடங்களில் அ.தி.மு.கவினருக்கும் கூட்டணிக்கட்சியினருக்கும் சரியான ஒத்துழைப்பு இல்லை. வடசென்னை மா.செ. சேகர்பாபு நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் ஃபார்வர்டு பிளாக் பாலாஜி கொந்தளிச் சிட்டார். இடதுசாரி கட்சிகள் அனைத்துக்கும் ஒரேவிதமான மரியாதை தரணும்னு ஜெ சொல்லியிருக்கும்போது, எங்களுக்கு மட்டும் போஸ்டர்களில் ஏன் முக்கியமில்லைன்னு கேட்க, எம்.எல்.ஏக்கள் உள்ள கட்சிக்குத்தான் முக்கியத்துவம்னு சேகர்பாபு சொன்னதோடு, உங்க கட்சி உருவாக்கிய நடிகர் கார்த்திக் இப்ப எங்கேன்னு நக்கலடித் திருக்கிறார். கடுப்பான ஃபார்வர்டு பிளாக் பாலாஜி, சி.பி.எம்.-சி.பி.ஐ. கட்சிகளுக்கு எம்.எல்.ஏ. கிடைக்கிறதுக்கு முன்னாடியே தமிழ்நாட்டில் ஜெயித்த கட்சி ஃபார்வார்டு பிளாக். கார்திக்கை நாங்க நீக்கிட்டோம். உங்க கட்சி வளர்த்த எஸ்.வி.சேகர் இப்ப எங்கேன்னு கவுண்ட்டர் அட்டாக் கொடுக்க, சேகர் பாபுவுக்கும் பாலாஜிக்கும் கைகலப்பு ஏற்படுற நிலைமை உரு வாகியிருக்குது. மற்ற நிர்வாகிகள்தான் சமாதானப் படுத்தியிருக்காங்க.''

""பொதுவேலை நிறுத்தத்தை முறியடிக்கணும்ங்கிற நோக்கதோடு, பந்த் நாளில் பஸ்- ரெயில் ஓடும்னு அரசாங்கம் அறிவித்திருந்ததே?''

""எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தினால், ஆளுங்கட்சியின் நடவடிக்கை அப்படி இருப்பது வழக்கம்தானே.. அதே நேரத்தில், வணிகர் சங்கமும் இந்த பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துக்கலை. மே 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகளை மூடுவதால், ஏப்ரல் 27-ந் தேதி மூடுவது சாத்தியமல்லன்னு சங்கத் தலைவர் வெள்ளையன் சொல்லிட்டார். அதோடு, மக்கள் பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கையில்லைன்னும் சொல்லிட் டார். மற்ற வணிகர் சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துக்கலை. பந்த் நாளில் நாகப்பட்டிணத்தில் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொள்வதுன்னு ஜெ. திட்டமிட்டிருந்ததை போன முறையே சொல்லியிருந்தோம். ஆனா, பல்வலி அதிகமாயிட்டதால நாகப் பட்டிணம் போக முடியுமா, போனாலும் ஆர்ப்பாட்டத்தில் பேசமுடியுமான்னு பந்த்துக்கு முதல்நாள் நள்ளிரவு வரை ஆலோ சனை நடத்திக் கொண் டிருந்தார் ஜெ.''

""பாரம்பரிய மான குமுதம் பத்திரிகையின் உள்விவகாரம், சட்டமன்றம் வரைக்கும் எதிரொலிச் சிருக்குதே!''

""குமுதம் குழு மத்தின் எம்.டி. வரதராஜன் மீது குமுதம் ஆசிரியர் ஜவகர்பழனி யப்பன் மோசடி புகார் கொடுக்க, போன வெள் ளிக் கிழமை யன்னைக்கு சாயங்காலம் வரதராஜன் அரெஸ்ட் ஆனார். சனி-ஞாயிறு பெயில் எடுக்க முடியாத நாட்கள் என்பதால் இந்த அரெஸ்ட் ரொம்ப பரபரப்பா இருந்தது. ஆனா, நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்ட வரதராஜன், பெயிலில் விடப் பட்டார். இதுதான் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. இது சம்பந்தமா விளக்கம் கொடுத்த முதல்வர், அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கான சட்டங்கள் இல்லை என்றாலும்கூட, அதற்கான நிலைமைகள் இல்லை என்றாலும்கூட, அவைகளுக்கிடையிலும் அவர் சிறை புகத்தான் வேண்டும் என்பதுபோல வலியுறுத்தத் தேவையில்லை என்பதை நம்முடைய அரசு வழக்கறி ஞர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவரை ரிமாண்ட் செய்வதற்கு வற்புறுத்தவேண்டாம் என்று எடுத்துக்கூறி அவர் சில நிபந்தனைகளோடு உடனடியாக அனுப்பப்பட்டிருக்கிறார்னுசொன்னார். அதோடு, நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு குழு அமைத்தாவது அதற்கான ஏற்பாடுகளை, குமுதம் வாழவேண்டும் என்பதற்காக நிச்சயமாக இந்த அரசும் செய்யும்னும் சொல்லியிருக்கிறார்.''

""ஆயுள் கைதியாக சிறையிலிருக்கும் நளினியிட மிருந்து செல்போன் எடுக்கப் பட்டது சம்பந்த மான சர்ச்சை இன்னும் நீடிச்சிக்கிட்டிருக்குதே?''

""2008 மார்ச் மாதம் ஆக்டிவேட் செய்யப்பட்ட அந்த போனின் சிம்கார்டு மூலம் இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கும், தன்னோட வக்கீலுக்கும் நளினி பேசியிருக்கிறார்னு சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருந்தார். அந்த செல்போனில் இருந்தது ஏர்டெல் சிம்கார்டு. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கனகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது பெயரில் வாங்கப்பட்டிருந்தது. போலீசார் கனக சமுத்திரத்துக்குப்போய் ரவியைத் தேடுனப்ப, 10 ரவி இருந்திருக்காங்க. அதில் கட்டிட மேஸ்திரி ரவியின் டாக்குமெண்ட்தான் சிம்கார்டுக்காக கொடுக்கப்பட்ட ஜெராக்ஸோடு ஒத்துப்போயிருக்குது. அவரை போலீஸ் தூக்கிட்டு வந்திடிச்சி.''

""அப்புறம்?''

""ரவியோட சம்சாரம், எம்புருஷனுக்கு எதுவும் தெரியாதுங்கன்னு அழுது புலம்பினார். போலீசோ ரவியை மிரட்டு மிரட்டுன்னு மிரட்ட, ரொம்பவும் தயக்கத்தோடு உண்மையைச் சொல்ல ஆரம்பிச்சாரு. வேலூர்ல ஒரு மொபலை வாங்குனப்ப சிம்கார்டு ஃப்ரீயா கொடுத்தாங்க. அதை எனக்குத் தனிப்பட்ட முறையில் பழக்கமான நாகஜோதிக்கிட்டே அன்பா கொடுத்துட்டேன். அதற்கப்புறம் எதுவும் தெரியாதுங்கன்னு ரவி சொல்லியிருக்காரு. ஞானதீபம்ங்கிற பத்திரிகையில் புரூஃப் ரீடரா இருக்கும் நாகஜோதியை போலீஸ் மடக்கி விசாரிக்க, அந்த மொபைல்ல ஒருநாள்தான் பேசினேன். அப்புறம் அது தெலைஞ்சிபோச்சு. கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டாம்னு விட்டுட்டேன்னு சொல்லியிருக்கிறார். இதனடிப்படையில், ஏர்டெல் நிறுவனத்தில் போலீசார் விசாரித்ததில், மொபைல் காணாமல் போனதா நாகஜோதி சொன்ன தேதியிலிருந்து 3 மாசத்துக்கு அதில் எந்த அவுட்கோயிங், இன்கமிங் எதுவுமில்லையாம். அதற்கப்புறம்தான் ரீ-சார்ஜ் செய்திருக்காங்க. நாகஜோதி தொலைத்த மொபைலை நளினியிடம் கொடுத்தது யாருன்னு இப்ப போலீஸ் விசாரிச்சிக்கிட்டிருக்குது.''

""ஓ...''

""மாலத்தீவு பயணத்தை முடிச்சிட்டு அழகிரி திரும்பிட்டார். பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்காமல் இருந்ததால், எதிர்க்கட்சிகள் சரமாரியா கேள்வி எழுப்ப, சபாநாயகர் மீராகுமாரே, அவர் எங்கே சென்றிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாதுன்னு சங்கடத்தோடு சொன்னார். மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்றதுங்கிற முடிவோடு மாலத்தீவில் தன் நலன்விரும்பிகளிடம் அழகிரி ஆலோசனை நடத்திக்கிட்டிருந்தப்பவே, அவர்கிட்டே கலைஞர் பேசியிருக்கிறார். இதை யடுத்து, மாலத்தீவிலிருந்து திரும்பிய பிறகு, டெல்லிக்குப் பறந்தார் அழகிரி. பார்லிமெண்ட் கூட்டத்தொடர் முடிந்ததும் தென்மாவட்டம் முழுக்க டூர் போக திட்டமிடிருக்கிறார். தன்னோட செல்வாக்கு என்னங்கிறதை பல்ஸ் பார்க்கத்தான் இந்த டூர் புரோகிராமாம்.''

""பார்லிமெண்ட் பற்றி சொன்னதும், ஸ்பெக்ட்ரம் விஷயம் தொடர்பா ஆ.ராசா சமீபத்தில் கொடுத்த விளக்கம் ஞாபகத்துக்கு வருது. ரொம்ப பவர்ஃபுல்லான விளக்கம்னு சீனியர் பார்லிமென்ட் டேரியன்களே சொல்றாங்களே...''

""ஆமாங்க தலை வரே... ... என்னதான் எக்ஸ்பர்ட்டா இருந் தாலும் டாக்டரோட சப்ஜெக்ட் இன்ஜினிய ருக்கு தெரியாது. இன் ஜினியரோட சப்ஜெக்ட் டாக்டருக்குத் தெரியாது. இதைத்தான் ஸ்பெக்ட்ரம் விஷயம் தொடர்பா பார்லிமெண்ட்டில் ஆ.ராசா அழுத்தமா சொன்னார். 2ஜி, 3ஜி அலைவரிசை குறித்து ஊடகங்கள், நிறுவனங்கள், தனிநபர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமே குழப்பமும் அறியாமையும் நிலவுகின்றது. உறுப்பினர் மலைச்சாமி (அ.தி. மு.க) அவர்களும் அலைவரிசை குறித்து அறியாமை யிலேயே உள்ளார். 2ஜி சேவை என்பது சாமானிய மக்க ளுக்கானது. அதை ஏலம்விடத் தேவை யில்லை. ஒதுக்கீட்டு அடிப்படையில் வழங்கணும்னு தேசியஜனநாயக கூட்டணி அரசில் முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில், வளர்ந்த நாடுகளின் நடைமுறையைப் பின்பற்றி 3ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த வேண் டும்ங்கிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கை முடிவு.3ஜி அலைக்கற்றை ஏலம் 45ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்னு தெளிவா பதில் கொடுத்தார்.''

""ரயில் குண்டுவெடிப்பு சதித் திட்டத்திற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கிட்டார்ங்கிற குற்றச் சாட்டோடு 13 வருசமா சிறைப்பட்டிருக்கும் குணங்குடி அனீபா, கடந்த 26-ந் தேதி யிலிருந்து புழல் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியிருக் கிறார். இந்தப் பிரச்சினையை முன்வைத்து மே 5-ந் தேதி உயர்நீதிமன்றம் நோக்கி மிகப்பெரிய கண்டனப்பேரணியை த.மு.மு.க நடத்துது.''

அது சம்பந்தமா நான் சொல்றேன்.. குனங்குடி அனீபாவுக்கு எதிரா அரசு முன்வைத்த 2 சாட்சிகளுமே, அவர் அந்த சதி ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கலைன்னு சொல்லிட்டாங்க. அனீபா மீதான வழக்கின் விசாரணையும் முடிந்து தீர்ப்பு வழங்கவேண்டிய தருணம் இது. லீவில் சென்ற பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரேம்குமார் பணிக்குத் திரும்பினார். தீர்ப்பு அளிக்கப்போற நேரத்தில், புதிதாக சார்ஜ்ஷீட் போடணும்னு அரசுத்தரப்பில் பெட்டிஷன் போடுறாங்க. இதுதான், அனீபாவின் சாகும்வரை உண்ணா விரதத்துக்கு காரணம். கொலைவழக்கில் சிக்கிய ஜெயேந்திரருக்கு ஜாமீன். அனீபாவுக்கு 13 வருட சிறையான்னு கேட்கிறார் த.மு.மு.க தலைவர் ஜவாஹி ருல்லா.

Tuesday, April 27, 2010

பெண்களுடன் நித்யானந்தா! சிக்கிய புதிய சி.டி.!


shockan.blogspot.com
எப்போதும் வண்ணமயமான... பெண் பக்தர்கள் புடை சூழக் காட்சிதரும் நித்யானந்தா... கடந்த ஒருவாரமாகக் காக்கிகள் புடைசூழ பொறியில் மாட்டிக்கொண்ட எலிபோல காட்சி யளிக்கிறார்.

நான்கு நாட்கள் இவரை கஸ்டடியில் எடுத்த கர்நாடக சி.ஐ.டி. போலீஸ்... அன்று சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு இரவு 11 மணிக்குக் கொண்டுவந்தனர். கோர்ட்டிலிருந்து வெளியே வரும்போது சீனிவாசன் என்ற ஆசிரியர் "நீ எல்லாம் சாமியாரா?' என்றபடி காலில் இருந்த செருப்பை எடுத்து அவர்மேல் வீசினார். அன்று இரவு அவரை நிம்மதியாக உறங் கச்சொல்லிவிட்டு... மறுநாள் காலை வீடியோ காமிராவோடு விசாரணையை ஆரம்பித் தார்கள்.

சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி.யோகப்பா மேற்பார்வையில் சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் சீனிவாசமூர்த்தி, உசேன், சந்திரசேகர் ஆகியோர் மாறி மாறி விசாரணையில் இறங்கினார்கள். அப்போது...

"நடிகை ரஞ்சிதாவை எப்படி வளைத்தாய்?' என நித்யானந்தாவிடம் கேள்வியை ஆரம்பிக்க... ஒரு அசட்டுப் புன்னகையை மட்டுமே பதிலாக வீசினார் நித்யானந்தா. ‘சரி... படுக்கையில் நீ அமைதியாகத்தான் இருக்கிறாய். ரஞ்சிதாதான் செயல்படுகிறார். இது எப்படி?’’ என்று மீண்டும் அதிகாரிகள் ரஞ்சிதா விஷயத்தையே டச் பண்ண... அதற்கும் புன்னகைதான் பதிலாகக் கிடைத்தது.

"ஆசிரமத்தில் இருக்கும் எத்தனை பெண்களை நீ தொட்டிருக்கிறாய்?' என்று அடுத்த கேள்விக்கு அதிகாரிகள் தாவ... "ஓம் பூர் புவஸ்வஹ' என ஏதோ ஒரு மந்திரத்தை பதிலாக உச்சரித்து அதிகாரிகளை எரிச்சலடைய வைத்தார்.

இப்படி அன்று முழுதும் எந்தக் கேள்விக்கும் சரியாக பதில் தராமல்.. புன்னகை... தியானம்... மந்திரம்... என்று அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டினார். மறு நாள் விசாரணைக்கு முன்... முதல்நாள் நடந்த விசாரணையை சரிபார்த்த அதிகாரிகள்.. அதில் ஆடியோ பதிவாகாததைக் கண்டு திகைத்துப்போய்... மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா? என நொந்துபோய்... முதல்நாள் கேள்வி களையே திரும்பக் கேட்க ஆரம்பித்தனர்.

அன்றும் முதல்நாளைப் போலவே... சிரிப்பு.. தியானம்... மந்திரம்... ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்படும் சாப்பாடு என்றே பொழுதைக் கடத்தினார் நித்யா.

இந்த ’காந்திவழி’ விசாரணை இவரிடம் இனி சரிப்படாது எனப் புரிந்து கொண்ட அதிகாரிகள்... மூன்றாம் நாளில் இருந்து ’நேதாஜி பாணியைக் கையிலெடுக்கும் முடிவுக்கு வந்தனர். அப்போது...

""என்னைத் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டீர்களேயானால்.. நான் இந்த உடலை உதறிவிட்டு வெளியே போய் விடுவேன்'' என சீன் போட ஆரம்பித்தார். இதைக்கேட்டு ஏகக்கடுப்பான விசாரணை அதிகாரிகள்.... ""ஏய் யார்கிட்ட கதைவிடறே. உடம்பை விட்டு வெளில போவியா? போய்க்காட்டு பார்க்கலாம்.. எங்கக் கிட்டயே கதையா?...'' என ஆவேசமாக, வெலவெலத்துப்போனார் நித்யா.

"ஒழுங்கா பதிலைச் சொல்லணும். இல்லே ரொம்ப அவஸ்தைப் படுவே..' என நக்கீரன் இதழைக் கையில் வைத்துக் கொண்டு விசாரணையை ஆரம்பித்தனர். ""உன் ஆசிரமத்தில்.... ஃபோட்டோ, சி.டி.க்கள் இருக்கும் அந்த சீக்ரெட் அறைக்குள்ளயும் நாங்க நுழைஞ்சிட்டோம். கேமரா பொருத்தி எப்பவும் கண் காணிப்பிலேயே இருக்கும் அந்த அறைக் கதவை... கோபிகாவும் ஆத்மானந்தாவும் ரேகையை பதியவச்சாத்தான் திறக்க முடியுமா? போலீஸ் நினைச்சா... காத்து நுழைய முடியாத அறைக்குள்ளும் நுழைஞ்சிடும். பாக்குறியா அங்க இருந்து நாங்க எடுத்துவந்த படங்களை?'' என பல பெண்களுடன் நித்யானந்தா இருக்கும் படங்களை அவர் முன் அள்ளிப்போட விக்கித்துப்போனார் நித்யானந்தா.

""நீ தப்பிக்கவே முடியாது, காரணம் பல பெண்கள்.. நீ ஏமாத்தி... கால்பிடிக்கச் சொல்லி... உணர்ச்சிகளைத் தூண்டி... கெடுத்ததா எங்கக் கிட்ட ஒத்துக்கிட்டிருக்காங்க. இதையெல்லாம் எப்படி நிரூபிக்க முடியும்னு நினைக்கிறியா? பிரேமானந்தா விசயத்தில் என்ன நடந்தது தெரியுமா? அவரால் கர்ப்பமான பெண்ணின் கருமுட்டையில் உள்ளது பிரேமானந்தாவின் செமனில் உருவான குழந்தைதானா என்பதை அறிய டி.என்.ஏ. டெஸ்ட்டை ஹைதராபாத்தில் நடத்தி அவரோட அசிங்கத்தை நிரூபிச்சாங்க. இதே பாணியில்தான் உன்னையும் நிரூபிப்போம்'' என்று சொல்ல... முகம்வெளிறிப்போன நித்யானந்தா.... என் மீது பெண்கள் புகார் சொல்லலையே... என்றார்.

""ஏன் சொல்லலை... செக்ஸ் ஃபீலிங்ஸை அடக்கும் வகுப்புன்னு சொல்லி ரகசியமா நீ நடத்திய கூத்து எல்லாம்... எங்கக் கையில் சி.டி.யா இருக்கு. ஆன்மீக வகுப்பில் பெண்களுக்கு முத்தம் கொடுக்குறே... கட்டிப்பிடிக் கிறே... அவங்க உடம்பு முழுக்க கைவச்சி.. உணர்ச்சியைத் தூண்டறே... இதுதான் ஆன்மீகமா? படுக்கையில் கட்டி உருள்றதுக்குதான் ஆசிரமமா?'' என காக்கிகள் கேட்க....

நித்யானந்தாவோ மெதுவான குரலில் “""அது தாந்ரீயம். அதாவது ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய அது ஒரு வழிமுறை'' என்றார் லஜ்ஜையாக. ""சரி ஆசிரமத்தில் சேரும் பெண்களிடமெல்லாம் செக்ஸ் பண்ண ஒப்பந்தம் போட்டிருக்கியே... ரஜனீஷ் கூட இப்படியெல்லாம் பண்ணியது இல்லை. இந்த ஐடியாவை யார் கொடுத்தது?'' என்று கேட்க... நித்யானந்தா தலைகுனிந்து கொண்டார். பெண்களிடமெல்லாம் இப்படி நித்யானந்தா நடந்து கொண்ட செக்ஸ் விவகாரங்கள் குறித்துப் பல வாறாய் விசாரித்த அதிகாரிகள்... அவரது மோசடிகள் குறித்தும் கேள்விகளை வைத்தனர்.

""பிடதியில் ஆசிரமத்துக்காக நாகராஜ் ஷெட்டி என்பவர் கொடுத்த நிலத்தை உன் பெயரில் எப்படி ரிஜிஸ்டர் செய் தாய்? உன் பெயரிலும் உன் தம்பி நித்ய ஈஸ்வரானந்தா பெயரிலும் ராம்நகர் கனரா வங்கியில் கணக்குத் தொடங்கி... ஏராளமான அமெரிக்க டாலர்களை டெபாஸிட் செய்து... அந்நிய செலாவணி மோசடி செய் திருக்கிறாயே... சரியா? கர்நாடகா வில் விவசாயிகள் மட்டுமே விவசாய நிலம் வாங்கலாம். அப்படி இருக்க... பிடதி ஆசிரமத்திற்கு அருகில் பக்தானந்தா பெயரில் 3 ஏக்கர் விவசாயநிலம் வாங்கியது எப்படி?

உன் மோசடிப் பார்ட்னர்கள் யார் யார்? யார் யாரிடமிருந்து கோடிகோடியாய் வாங்கினாய்?'' என சி.ஐ.டி. போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு நித்யானந்தாவிட மிருந்து சரியான பதில் இல்லை. அதற்குள் நித்யானந்தாவின் கஸ் டடிக்காலம் முடிந்ததால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் 4 நாட்கள் கஸ்டடியில் எடுக்க திட்டமிட்டனர். அதன்படி... அவரை 26-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலநீட்டிப்பு கேட்க... 2 நாள்மட்டும் விசாரிக்க அனு மதி கொடுத்தது நீதிமன்றம்.

விசாரணை டீம் அதிகாரி ஒருவரிடம் ஆசிரமத்தில் சிக்கிய சி.டி.க்கள் குறித்து நாம் கேட்ட போது ""35 சி.டி.க்களை நாங்கள் ரகசிய லாக்கர் அறையில் இருந்து எடுத்தோம். அதில் பாலியலைக் கடந்து அதன்வழியாக ஆன்மீகத்தை அடைவதற்கான வகுப்புன்னு அவர் எடுத்த செக்ஸ் கிளாஸ் படங்கள்தான் எல்லாத்திலும் இருந்தது. ஆண்கள் பெண்கள்னு 30 பேர் இருக்கும் பூட்டிய அறைக்குள்.. ஒவ்வொரு பெண்ணா அழைத்து... முத்தம் கொடுப்பார்.. கட்டிப்பிடிப்பார்... உடம்பை வருடு வார்... உடைகளுக்குள் கைவிடுவார். அங்கங்களில் கை வைத்து... ஃபோர்பிளே பண்ணுவார்.. சிலரின் உடைகளைத் தளர்த்துவார். இந்த சமயத்தில் சாமியார் விளையாடும் பெண்ணுக்கும் உணர்ச்சி வரக்கூடாதாம். அந்த கிளாஸில் இருப்பவர்களுக்கும் உணர்ச்சி வரக்கூடாதாம். இப்படி சொல்லியே செக்ஸ் கிளாஸ் எடுத்து... பெண்களை மனரீதியா பலமிழக்கச்செய்து வீழ்த்தியிருக்கார். அந்த சி.டி.க்களைப் பார்க்கும் போது நமக்கே ஒரு மாதிரியா இருக்கு''’’ என்றார் ஒருவித பெருமூச்சோடு.

கூடுதலாக இரண்டு நாள் கஸ்டடி கொடுக்கப்பட்ட நிலையில் நான்தான் கடவுள் என சொல்லிக் கொண்டி ருந்த நித்யானந்தா தனக்கு நெஞ்சுவலி என அலற, பெங்க ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நித்யானந்தா மீது ஸ்ரீ ரவிசங்கர் குற்றச்சாட்டு


shockan.blogspot.com

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் நித்யானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்திலிருந்து அவர் விடுத்த அறிக்கையில், ‘’துறவி என்பது ஆசைக்கிணங்காத வாழ்க்கை. தன் மகிழ்ச்சிக்காக, மக்கள் பலரை ஏமாற்றி, நித்யானந்தா மன்னிக்க முடியாத குற்றத்தை செய்துள்ளார். தனக்கு என்று ஒரு பெண் துணையை வைத்துக் கொண்டு அப்படி அவர் ஆய்வு செய்து, தந்த்ரா வழி என்று சொல்லியிருக்கலாம்.



ஆனால் அவரது செயல், அவர் நிறுவிய பீடத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்த்ததோடு மட்டுமல்லாமல், பலரையும் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு: குஷ்பு மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி


shockan.blogspot.com
நடிகை குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.


நடிகை குஷ்பு பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த போது, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.


கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்துவிட்டது.


இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் வழக்கை விசாரித்து வந்தது.


இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சினிமா படப்பிடிப்பில் சாமி ஆடிய நடிகை


shockan.blogspot.com
மகனே என் மருமகனே படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.


இந்த படத்தில் கதாநாயகி மலையாள நடிகையான ரூபஸ்ரீ ஆவார். இவருக்கு, `தேன்மொழி' என்று பெயர் சூட்டி, தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறார், டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.


தேன்மொழிக்கு, சுத்தமாக தமிழ் பேச தெரியாது. அவர் கோவிலுக்கு வந்து முருகனை வணங்குவது போன்ற காட்சியை, டி.பி.கஜேந்திரன் படமாக்கினார். இதற்காக, முருகன் கோவில் `செட்' போடப்பட்டு, ஆகம விதிகளின்படி முருகன் சிலைக்கு அபிஷேகம்-ஆராதனைகள் நடந்தன.


முருகனுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்றது. கதாநாயகி தேன்மொழி சாமி கும்பிடுவது போன்ற காட்சி படமாகிக்கொண்டிருந்தபோது, திடீரென்று தேன்மொழி, ``டேய்...'' என்று சத்தம்போட்டபடி, சாமி ஆடினார்.


கோவிலில் தேன்மொழியுடன் ஏராளமான பொதுமக்களும் சாமி கும்பிடுவது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக, துணை நடிகர்-நடிகைகள் 50 பேர் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். தேன்மொழிக்கு அருள் வந்து சாமி ஆட ஆரம்பித்ததும், துணை நடிகைகள் ஓடிவந்து ஆரத்தி எடுத்தார்கள்.


உடனே தேன்மொழி, தமிழில் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார். ``நான் இருக்கேன் மகனே...கவலைப்படாதே'' என்று டைரக்டர் டி.பி.கஜேந்திரனின் தலையில் கை வைத்து, ஆசி வழங்கினார். தமிழே தெரியாத அவர், சுத்தமாக தமிழ் பேசியதை பார்த்து, படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பரவசம் அடைந்தார்கள்.


சாமி ஆடிய தேன்மொழிக்கு, துணை நடிகை ஒருவர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்தபின், தேன்மொழி பழைய நிலைக்கு திரும்பினார்.

நடிகை சிந்துமேனன் ரகசிய திருமணம்!


shockan.blogspot.com
பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.


நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் டைரக்டர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான `ஈரம்' படத்தின் கதாநாயகியாக நடித்தார். சிந்து மேனன், கேரளாவை சேர்ந்தவர். பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.


இவருக்கும் லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது.


இந்தநிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.


ஆனால் இந்த செய்தியை சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவில்லை.

பிக் அப் ஆக விட்டால்தானே? - சேரனின் ஆதங்கம்


ல்ல படங்கள் ஓடாமல் போவதற்கு காரணம் அந்தப் படம் பிக் அப் ஆவதற்கு முன்பே தியேட்டர்களிலிருந்து தூக்கப்படுவதுதான் என்கிறார் இயக்குநர் சேரன்.

புதுமுகங்கள் ஈஷ்வர்-தியானா நடித்துள்ள விருந்தாளி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

விழாவில், இயக்குநர் சேரன் பேசுகையில், "தமிழ் பட உலகில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கூட சிலசமயம் ஓடுவதில்லை. இதற்கு காரணம், நிறைய பேர் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க தயாராக இல்லை. ஒரு படம், நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற பேச்சு வெளியே பரவுவதற்குள், கூட்டம் இல்லை என்று அந்த படத்தை தியேட்டரில் இருந்து எடுத்து விடுகிறார்கள். பிக் அப் ஆகும்வரை விட்டால்தானே படங்கள் ஓடும்...

பொக்கிஷம் படம் அப்படித்தான் ஓடாமல் போய்விட்டது. அதே படத்தை இப்போது டி.வி.டி.யில் பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள். இந்த நிலைக்கு காரணம், பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களை 20 தியேட்டர் அல்லது 30 தியேட்டர்களில் திரையிட்டு ஒரே வாரத்தில் காசு பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசைதான்.

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படம் திரைக்கு வந்த ஒரு வாரம் வரை கூட்டம் வரவில்லை. அதற்குள் தியேட்டரில் இருந்து எடுத்து விடுவார்களோ என்று டைரக்டர் கவுதம் கவலைப்பட்டார். நல்ல படம் நிச்சயம் ஓடும் என்று நான்தான் அவருக்கு ஆறுதல் கூறினேன். நல்லவேளையாக அந்த படத்தை தியேட்டரில் இருந்து தூக்கவில்லை. அதன்பிறகு நல்ல படம் என்று கேள்விப்பட்டு, மெதுவாக கூட்டம் வர ஆரம்பித்தது. படமும் வெற்றிபெற்றது.

இந்த நிலை மாற, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

பிரச்சினையை ஆராய குழு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பேசும்போது, சேரன் கோரிக்கைக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

"திரையுலக பிரச்சினைகள் பற்றி பேசி, நல்ல தீர்வு காண்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் ஆகிய அனைத்து தரப்பினரும் பங்கு பெறுவார்கள். அதில் சேரனும் ஒரு உறுப்பினராக சேர்க்கப்படுவார்.

அந்த குழு கூடி, பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது, சேரன் அழைக்கப்படுவார். அங்கே வந்து அவர் தனது கருத்துக்களை கூறலாம். நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்," என்றார்.

விழாவில் நடிகர்கள் கரண், பிரசன்னா, நாசர், பாலாசிங், டைரக்டர்கள் சசி, எழில், பவித்ரன், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், பட அதிபர் டி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் ஆகியோரும் பேசினார்கள்.

விழாவுக்கு வந்தவர்களை, பட அதிபர் ராஜேஷ் கோபிநாத் வரவேற்றார். இயக்குநர் வாட்டர்மேன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை, இயக்குநர்-நடிகர் சிங்கம் புலி தொகுத்து வழங்கினார்.

புயல் வேகத்தில் உதவிய ஸ்டாலின்...


shockan.blogspot.com
சென்னை: தவறான சிகிச்சையாலும் காலாவதியான மருந்தாலும் பார்வை பறி போன மாணவியின் முழு சிகிச்சை செலவையும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். கண்ணில் லென்ஸ் பொருத்த அடுத்த வாரம் அவர் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்படுகிறார்.

சென்னை திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12). வேன் டிரைவராக உள்ளார் தேவேந்திரன்.

கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றனர்.

அவர் சில மாத்திரைகளை எழுதித் தத்தார். அதை சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து ரத்தம், சிறுநீர் ஆகியவை அப்போது பரிசோதிக்கப்பட்டன.

இந் நிலையில், சுரேகாவின் உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகள் வந்தன. வாய் பகுதி புண்ணாகியது. கண்கள் இரண்டிலும் ரத்தம் கட்டி, பார்வை மங்கத் தொடங்கியது.

இதையடுத்து அந்த டாக்டரிடமே மீண்டும் காட்டியபோது, வீரியம் அதிகமான மாத்திரை சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையடுத்து சுரேகாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனை க்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு மாத சிகிச்சைக்குப் பி்ன் கட்டிகளும், வாய் புண்ணும் மறைந்தன. ஆனால், கண் பார்வை சீராகவில்லை. அது மேலும் மங்கியது.

இதனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சுரேகாவை அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேகாவிற்கு பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக பல கண் மருத்துவமனைகளில் காட்டியும் சுரேகாவுக்கு பார்வை வரவில்லை. இதனால் அவரது படிப்பும் நின்றுபோய்விட்டது.

இந் நிலையில் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையிலும் சுரேகா சிகிச்சை பெற்றார். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள், சுரேகாவிற்கு கண்ணில் லென்ஸ் பொருத்தினால் பார்வை கிடைக்கும் என்று கூறினர்.

ஆனால், இந்தியாவில் இந்த லென்ஸ் கிடைக்காது என்றும், வெளிநாட்டில்தான் வாங்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் பணம் செலவழித்துவிட்ட அந்த ஏழைக் குடும்பத்தால் இந்தச் செலவை ஏற்க முடியவில்லை.

இதனால் அரசின் உதவியை எதிர்பார்த்து நேற்று முன்தினம் மகள் சுரேகா, மனைவி கலாவதியுடன் தேவநேதிரன் சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அரசு அதிகாரிகளை சந்தித்து, மகளின் சிகிச்சைக்கு உதவி கோரி மனு கொடுக்க காத்திருந்தார்.

ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறி அவரை எந்த அதிகாரியும் சந்திக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து செய்தி அறிந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி சுரேகா குறித்த விவரங்களை திரட்டிவிட்டு சங்கர நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்களை தொடர்பு கொண்டு சுரேகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவரை மீண்டும் சோதிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து சுரேகாவை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு திமுக மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அவர்கள் சுரேகாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரை மீண்டும் பரிசோதித்த டாக்டர்கள், சுரேகாவுக்கு ஹைதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து லென்ஸ் பொறுத்தினால் பார்வை கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சுகேரா குடும்பத்தினரை தொடர்பு கொண்ட ஸ்டாலின், சுரேகாவுக்கு கண் பார்வை கிடைக்க உலகின் எந்த மூலையில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நான் தயார். அதற்கான முழுச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவரே ஹைதராபாத் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசியதையடுத்து வெளிநாட்டில் இருந்து லென்ஸை வரவழைக்க அந்த மருத்துவமனை சம்மதித்தது.

அடுத்த மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில் ஹைதரபாத் மருத்துவமனைக்கு சுரேகா அழைத்துச் செல்லப்பட்டு லென்ஸ் சுரேகாவின் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படுவேகத்தில் ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கைகளால் சுரேகாவும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

நிருபர்கள் அவர்களை சந்திக்கபோது ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர்கள் தொடர்ந்து பேசக் கூட முடியாமல் கண்ணீர் விட்டபடி இருந்தனர்.

ஆசின் வீட்டில் டோணி?


shockan.blogspot.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, மும்பையில் உள்ள நடிகை ஆசின் வீட்டுக்குச் சென்று அவருடன் பிரமாண்ட எல்.சி.டி. டிவியில் ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகளை இணைத்துப் பேசுவது புதிதல்ல. அதிலும் டோணியை பல நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து பேச்சு வருவது புதிதே அல்ல. சில காலமாக அவரை லட்சுமி ராயுடன் இணைத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.

டோணி சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் லட்சுமி ராயைப் பார்ப்பார் என்று செய்திகள் கூறி வந்தன. அதேபோல ஒரு முறை டோணி தனது வீட்டுக்கு லட்சுமி ராயை அழைத்துச் சென்று வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூட செய்திகள் கூறின.

இந் நிலையில் லட்சுமி ராய் இடத்திற்கு ஆசின் வந்து விட்டதாக புதுச் செய்தி கூறுகிறது. ஆசின் மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். இங்கு தங்கியிருந்தபடிதான் இந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார். முதலில் இங்கு ஆசினுடன் அவரது அப்பாவும் தங்கியிருந்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரவே அப்பா தனியாகப் போய்விட்டதாக கூறப்பட்டது.

இந் நிலையில், கடந்த 21ம் தேதி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள ஆசினின் வீட்டுக்கு டோணி வந்தாராம். பின்னர் ஆசினுடன் இணைந்து, மும்பை இந்தியன்ஸ், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியை பிரமாண்ட எல்சிடி டிவியில் பார்த்து ரசித்தார் டோணி என்று செய்திகள் கூறுகின்றன.

டோணியுடன் இணைந்து 2 விளம்பரப் படங்களில் ஆசின் நடித்தபோதுதான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு தற்போது மேம்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

டோணி வந்திருப்பதை அறிந்து ஆசின் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடி விட்டனராம். இருந்தாலும் அவர்களிடம் சிக்காமல் நைசாக நழுவி விட்டாராம் டோணி.

பெங்களூர் தோல்வி- சோகத்தில் 'குத்து' ரம்யா!


shockan.blogspot.com
அரை இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை யிடம் தோல்வியைத் தழுவியதால் இன்னும் சோகத்தில் இருக்கிறாராம் முன்னாள் குத்து ரம்யாவான இன்னாள் திவ்யா.

தமிழில் நடித்துப் பிரபலமாகி இப்போது கன்னடத்திலேயே செட்டிலாகி விட்டவர் திவ்யா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக பெங்களூரில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளுக்கும் தவறாமல் வந்து உற்சாகப்படுத்தினார். ஆனால் இப்போது பெரும் சோகமாக இருக்கிறார் திவ்யா.

எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் தோல்வியைத் தழுவியதால்தான். இந்தப் போட்டிக்காக மும்பை போய் மைதானத்தில் உற்சாகத்துடன் போட்டியைப் பார்த்தார் திவ்யா. இதுகுறித்து அவர் கூறுகையில், டிராவிட், உத்தப்பா இருக்கிற வரைக்கும் ஜெயித்து விடலாம் என்றிருந்தேன். அவர்கள் அவுட் ஆனதும் நம்பிக்கை போய் விட்டது. இப்போது மிகவும் சோகமாக இருக்கிறேன். நான் நடித்த படம் ஓடாத போது கூட இப்படி இருந்ததில்லை என்று ரொம்பவே விசனப்படுகிறார் திவ்யா.

திவ்யாவைப் போலவே தீவிர பெங்களூர் ரசிகையாக இருந்து வந்தவர் பாலிவுட் நடிகையும், பெங்களூர் மண்ணின் மகளுமான தீபிகா படுகோன். இவரும் பெங்களூர் போட்டிகள் அனைத்துக்கும் தவறாமல் அட்டென்டன்ஸ் கொடுத்தார். கூடவே மல்லையா மகன் சித்தார்த்தும் உடன் இருப்பார். தீபிகாவும் கூட பெங்களூர் அணியின் தோல்வியால் அப்செட்ஆகி விட்டாராம்

தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி



shockan.blogspot.com
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் சாலையில் பேருந்தே நிற்காத கத்தக்குறிச்சி என்னும் குக்கிராமத்தில் பிறந்து வறுமையின் பிடியில் வளர்ந்து, சத்துணவு, கூட இல்லாமல் பயிற்சி மேற்கொண்டு ஓடத் தொடங்கிய தேசிய அளவு போட்டிகளில் ஓடி 100க்கும் மேற்பட்ட தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்று வந்தவர். படிப்படியாக தன் நிலையை உயர்த்திக் கொண்டார்.

இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். பதக்கங்கள் குவிந்தது போல குடும்ப வறுமை நிலையும் வளர்ந்து கொண்டேதான் போனது. சத்தான உணவு மட்டுமில்லை பசியாறக்கூட குடும்பத்தினருக்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்காக விளையாடத் தயாரானார்.






2003ம் ஆண்டு உலக சமாதானத்துக்கான ஓட்டப்பந்தயம் தென்கொரியாவில் நடந்தது. 5 ஆயிரம் மீட்டரில் ஓடி தங்கமும், 800 மீட்டரில் வெள்ளியும், 400 மீட்டரில் வெண்கலமும் வென்றவனர் தொடர்ந்து தனது உலகப் பயணத்தை தொடர்ந்தார்.

2005 ஆசிய தடகள போட்டியில் வெள்ளி, அதே ஆண்டில் இலங்கையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளியும் பெற்றவர். தாய்லாந்து சென்று தங்கம் வென்றார். தொடர்ந்து அதே ஆண்டில் பல வெள்ளிகளைப் பெற்றார். 2006ம் ஆண்டு ‘தோகா’வில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வறுமையை நினைத்து தலைதெரிக்க 800 மீட்டரில் ஓடினார். இந்த ஓட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று நினைத்தார்.

நூலிலையில் தடுமாற்றம் வெள்ளியை பரிசாக கொடுத்தது. வாழ்வின் உச்சத்தை தொட்டு வறுமை அகழ்வது போல கனவு கண்டார். அந்த கனவு அடுத்த நாள்வரை நீடிக்கவில்லை.

போட்டிகளை நடத்திய அமைப்பு அடுத்த நாள் நடந்த போட்டியில் சாந்தியை கலந்து கொள்ள விடாமல் தடுத்தது.



மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றதுடன் ஊருக்கு போகலாம் என்றது. சென்னை வரும் போது மற்றொரு பேரிடி விழுந்து நிலைகுலைய வைத்தது. நிலைகுலைந்து சாந்தி முதல்வர் கலைஞரை சந்திக்க சென்றார். ஆறுதலாக பேசிய முதல்வர் சாந்தி ஏனம்மா கவலைப்படறே உன்னை யாராவது ஏதாவது சொன்னா என்கிட்ட சொல் நான் பாத்துக்கிறேன் என்று ஆறுதலுடன் கூடிய தேறுதல் வார்த்தைகள் நிலைகுலைந்த சாந்தியை நிமிரச் செய்தது. கூடவே ரூ.15 லட்சம் பரிசும், ரூ.1.30லட்சம் மதிப்பில் டி.வியும் கொடுத்தார். பல்வேறு நிறுவனங்கள் பரிசும், பதவியும் தருவதாக அறிவித்தது.






சாந்தி ஊருக்கு வரும் முன்பே வீட்டில் டி.வி.ஓடத்தொடங்கியது. அதன் பிறகு சாந்திக்கு ஆண் தன்மை கூடுதலாக உள்ளது என்று ஆசிய விளையாட்டு வாரியம் அறிவித்து பதக்கம் பறிப்பு அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஓடி தங்க மங்கையாக வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. இந்திய விளையாட்டு ஆணையமும் சாந்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. பரிசும், பதவியும் அறிவித்த நிறுவனங்களும் கை விட்டுவிட்டது.

இந்த நிலையில் தான் முதல்வர் கலைஞர் சாந்தியை அழைத்து தற்காலிகமாக தடகள பயிற்றுனராக ரூ.5,000 சம்பளத்தில் பணியை கொடுத்தார். இந்த பணி மேலும் ஆறுதலாக அமைந்தது சாந்திக்கு.

புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் 80 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கிய சாந்தி அவர்களில் பலரை இன்று மாவட்ட, மாநில, தேசிய தடகள வீரர், வீராங்கனைகளாக உயர்த்தி பதக்கம் பெற வைத்துள்ளார்.

மேலும் பி.டி.உஷா போல தானும் தனியாக 8 வீரர்களை தேர்வு செய்து உணவு, உடை, தங்குமிடம் கொடுத்து பயிற்சியும் தன் சொந்த செலவு செய்து வந்தார். தான் வாங்கும் ரூ.5000 சம்பளம் போதுமானதாக இல்லாததால் தனது சொந்த பயிற்சி மையத்தை மூடவேண்டிய நிலை வந்தது.

புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு காலை 5 மணி முதல் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி கொடுத்து வருவதால் தனக்கும், தன் மாணவர்களுக்கும் இன்று வரை பயிற்சிக்கான சத்தான உணவு கிடைக்கவில்லை. மேலும் தற்காலிக பணியில் சேர்ந்து 2 ½ ஆண்டுகள் முடிந்த நிலையிலும் எனக்கு நிரந்தர பணி கிடைக்காததால் வாங்கும் ரூ.5000 சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் முதல்வர் கலைஞருக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கு நிரந்தர பணி கிடைத்தால் என் குடும்ப வறுமை போகும்.

மேலும் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெறவும், சத்தான உணவு கிடைக்கவும் வழி செய்தால் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கி பெயர் வாங்கித் தருவேன் என்றும் கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கிறார்.

கோரிக்கை மனு அனுப்பியிருப்பது அறிந்து சாந்தியை சந்திக்க மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி கொடுத்து கொண்டிருந்த சாந்தி,

’’என்னோட வறுமை பற்றியும், குடும்ப நிலை பற்றியும் எல்லாருக்குமே ரொம்ப நல்லாவே தெரியும். முதல்வருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். முதல்வருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனாலதான் எனக்கு ஆறுதல் சொன்னதோட பணமும், பரிசும் கொடுத்தார். இது தான் எனக்கு கிடைச்ச பெரிய பரிசா நினைக்கிறேன்.

முதல்வரோட ஆறுதல் வார்த்தைகள் தான் என்னை தொடர்ந்து பயிற்சியாளரா நீடிக்க முடிஞ்சிருக்கு. கூடவே எனக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகள பயிற்சியாளராகவும் என்னை தற்காலிக பணிக்கு ரூ.5000 சம்பளத்தில் நியமித்தார். எல்லாத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நான் வெற்றி பெற்ற செய்தி வெளியான நாளில் என் வீட்டில் அந்த காட்சியை பார்க்க முடியல. டி.வி.இல்ல. அதனால தான் முதல்வர் நான் வரும் முன்னால வீட்டுக்கு டி.வி. தந்தார்.

வெற்றி செய்தியை கேட்ட பல நிறுவனங்கள் எனக்கு ரூபாய் பல லட்சம் பரிசும், உயர்ந்த பதவியும் தர்றோம்னு விளம்பரத்துக்காக அறிவிச்சாங்க. ஆனா பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் அந்த நிறுவனங்கள் காணாமல் ஓடிப் போய்விட்டது. அந்த நேரம் முதல்வர் கலைஞர் மட்டும் தான் ஆறுதலாக இருந்து எப்ப வேணும்னாலும் வந்து பாருமான்னு சொன்னார்.

இப்ப என்னோட மாணவர்களில் 8 பேருக்கு தனியா என் சொந்த செலவுல பயிற்சி கொடுத்தேன். தங்கி பயிற்சி பெற செய்தேன். வசதி போதல இப்ப விளையாட்டு அரங்கில் 80 பேருக்கு பயிற்சி தர்றேன். என்னோட மாணவர்கள் இப்ப தேசிய அளவுலயும் பதக்கம் வாங்கி இருக்காங்க. இன்னும் கொஞ்க நாள்ல இன்னும் உயர்த்துவேன். அதுக்கு போதுமான உணவு இல்லை.

முதல்வரய்யாவும், துணை முதல்வரும் சத்தான உணவுடன் கூடிய விடுதி கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும்.மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க எங்க ஊர்ல இருந்து அதிகாலை வரமுடியல. அதனால புதுக்கோட்டையிலயே வாடகை வீட்ல தங்கிட்டேன். போதுமான வருமானம் இல்லை. அதனால எனக்கு இந்த வேலையை நிரந்தரமாக்கி தர வேணும்னு முதல்வர்கிட்ட மனு கொடுக்க போனேன். கீழேயே வாங்கிகிட்டாங்க. நேரா பார்க்க முடியல. துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு கொடுத்திருக்கேன்’’என்று தெரிவித்தார்.

சாதனை நிகழ்த்திய தமிழச்சி சாந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பாரா முதல்வர்?