Sunday, April 25, 2010

திரைக்கூத்து!


shockan.blogspot.com



திரைக்கூத்து!
கொக்கரக்கோ!




ஃபைட்டு!


டைரக்டர் ஹரியின் படத்தில் கஞ்சா கருப்புவை பேசிவைத்திருந் தார்களாம். ஆனால் இப்போது விவேக் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

"ஹரியண்ணன் என்கிட்ட பேசி வச்சிருக்கது தெரிஞ்சும் விவேக் இப்படி குறுக்க புகுறலாமா?' என நெருக்கமானவர்களிடம் சொல்லி வேதனைப்பட்ட கருப்பு ‘"என் னண்ணே இது?' என ஹரியிடமே கேட்க... ‘

கருப்பை சமாதானப்படுத்திய ஹரி "என்னோட அடுத்த படத்தில் கண்டிப்பா நீங்கதான்' எனச் சொன்னாராம்.




பாட்டி!


"என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்' என அறிக்கை வாசித்திருக்கிறார் பூஜா. விளையாடியது சில பத்திரிகைகள் தான். சங்கதி என்ன?

பத்து நாட்களுக்கு முன்... ‘"நான் சினிமாவை விட்டு விலகுகிறேன். கல்யாணம் கட்டிக்கப் போறேன்' என பூஜாவின் பேட்டி வந்திருந்தது. இதற்குத்தான் ‘"விளையாடாதீர்கள்' அறிக்கை.

"நான் கடவுள்' படத்திற்காக தனக்கு விருது கிடைக்கும் என ரொம்பவே எதிர்பார்த்தார் பூஜா. ஆனால் கிடைக்காத வருத்தம் அவருக்கு இருந்தது. அதனால் வந்த வாய்ப்புகளை கோபத்தில் தவிர்த்தார். என்றாலும்கூட... தன் 90 வயது பாட்டியின் மல-ஜலங்களை அள்ள வேலையாட்கள் சங்கடப்பட்டதால், தானே அருகே இருந்து பார்த்துக் கொள்வதற்காக இலங்கை சென்றுவிட்டார் பூஜா.

பூஜாவின் அம்மாவுக்கும் கால்வீக்கம். இதனாலேயே தற்காலிக விடுப்பு மாதிரி இலங்கைக்குப் போனாராம் பூஜா. இப்போது பாட்டிக்கு தேவலை. ஜூன் மாசம் முதல் திரும்ப நடிக்கப் போறேன் எனச் சொல்லியிருக்கிறார். கல்யாணம் ஆனால் கூட நடிப்புக்கு தடை போடக் கூடாது என கணவருக்கு கண்டிஷன் போடுவாராம் அம்மணி.




பார்ட்டி!




பார்ட்டி என்றால் படுகுஷி ஆகிவிடுவார் ஸ்ரேயா. இதனாலேயே கோலிவுட்டில் இருப்பு கொள்ளாமல் அடிக்கடி மும்பை பறந்து விடுவார். கடந்த வாரம் நடந்த காக்டெயிலில் ஓவராகிவிட்டதால் பார்ட்டியில் கலந்து கொண்ட எல்லாரோடும் சண்டைக்குப் போய் பாட்டில்களையும் போட்டு உடைத்திருக் கிறார்.

ஸ்ரேயாவின் தொல்லை எல்லை மீறவே வலுக்கட்டாய மாக தூக்கிக் கொண்டு போய் காரில் திணித்து அனுப்பி வைத்தார்களாம். ஹேங் ஓவரால் மூன்றுநாள் அவதிப்பட்ட ஸ்ரேயா அதன் பிறகு தன் தவறை உணர்ந்து அன்றைக்கு பார்ட்டியில் கலந்துகொண்ட எல்லாருக்கும் போன் போட்டு ஸாரி சொல்லியிருக் கிறார்.




பக்தி!


நாத்திகரான மணிவண்ணன் சமீபத்தில் சீரடி சாய்பாபா கோயிலுக்குப் போய் வந்ததை மணிவண்ணனால் நாத்திக பாதைக்கு திரும்பிய பலரும் ஆச்சர்யத்தோடு பாக்கு றாங்களாம்.

அப்படியா?



அந்த கவர்ச்சி குண்டு நடிகை முருங் கைக்காய் நடிகர் பெயரில் படம் தயாரிக்கிறார். அம்மணி சும்மாவே சரக்குப் பார்ட்டி. பெங்களூரில் சரக்கு தாராளமயமாச்சே. ஷூட்டிங்கிற் காக லொகேஷன் பார்க்கப் போன இடத்தில் ஃபுல் ஊத்தாம். போதை தெளியாமல் காரிலிருந்து இறங்குகையில் தடுமாறி விழுந்து காயம் பட... ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம்.

No comments:

Post a Comment