Friday, April 16, 2010

""அழகிரியை மையமா வச்சு கேபிள் சர்ச்சை சுழன்றடிக்குதே?''


shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... சட்டமன்றக் கட்டிடத்தைக் கட்டித் திறப்பதில் கலைஞர் எப்படி வேகம் காட்டினாரோ, அதுபோலவே சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வரு வதிலும் தன்னோட வேகத்தைக் காட்டி, தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதைக் கவனிச் சீங்களா?''

""மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி யோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்குதே!''

""ஆமாங்க தலைவரே... தீர்மானத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிர்ப்பாக 61 வாக்குகளும் பதிவாச்சு. அ.தி.மு.க.வால் ஓரங்கட்டப்பட்ட ரவிச்சந்திரனையும் ராஜேந்திர னையும் ஓட்டுப்போட வரவேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். அ.தி.மு.க. சி.வி. சண்முகமும் சந்திராவும் சட்டமன்றத்துக்கே ஆப்சென்ட்டாம். உடல்நிலை சரியில்லாததால நத்தம் விஸ்வநாதனால வரமுடியலை. ஆதரவு நிலை எடுத்த பா.ம.க. எம்.எல்.ஏ. கலியவரதன் ஓட்டுப்போடுறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால பாத்ரூம் போயிருக்காரு. அவரு திரும்பி உள்ளே வர்றதுக்குள்ளே எல்லா கதவுகளையும் சாத்திப்புட்டாங்களாம்.''

""பா.ம.க.வின் ஆதரவு இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமானதா இருந்திருக் குன்னு சொல்லு.''

""அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி. பதவிக் காலம் முடிவடைவதால், மீண்டும் அந்தப் பதவி யைத் தக்க வைத்துக்கொள்ள தி.மு.க.வின் ஆதரவை எதிர்பார்த்து பா.ம.க தலைமை தொடர்ந்து செயல்பட்டுகிட்டிருக்குது. பென்னாகரம் இடைத்தேர்தலில் இதைத் தான் கலைஞரும் சூசகமா, ராமதாஸ் என்கிட்டே போனில் பேசிய தொனி வேறுன்னு இரண்டு முறை சொன்னார். மேலவையைக் கொண்டுவரும் இந்த தீர்மானத்தை ஆதரிக்கணும்னு அன்பு மணியிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். தீர்மானத்தை பா.ம.க. ஆதரித்ததால் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் உறுதின்னு அவுங்க தரப்பில் பேசிக்கிறாங்க. மேலவை யைக் கொண்டு வர சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கு பாராளு மன்றமும் ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி யின் கையெழுத்தை வாங்கணும். மீண்டும் மேலவையைக் கொண்டுவர தமிழக பா.ஜ.க. ஆதரவுக் குரல் கொடுத்திருப்பதால் பார்லி மெண்ட்டிலும் காங்கிரஸ்- பா.ஜ.க. எம்.பி.க் களின் ஆதரவோடு ஓ.கே. ஆயிடும் சூழல் நிலவுவ தால், மேலவை மீண்டும் அமைவ தில் பிரச்சினையில்லை. புதிய சட்ட மன்றத்தின் நடுக்கூடத்தில் மேலவை செயல் படும்னு கலைஞர் அறிவித்திருக்கிறார்.''

""மேலவையைக் கொண்டுவருவது பற்றி ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க. அறிவித்தாலும், இந்த முறை பொதுத்தேர்தல் நெருங்கி வர்ற நேரத்திலே இத்தனை வேகம் காட்டியதற்கு என்ன பின்னணியாம்?''

""ஓட்டெடுப்பில் கலந்துக்கிட்ட தி.மு.க. தரப்பினரிடம் பேசினேங்க தலைவரே.. .. வரும் தேர்தலிலும் தி.மு.க.வே ஜெயித்து மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமா இருக்குது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தால், மு.க. ஸ்டாலின் முதல்வராயிடுவார். அப்ப கலைஞர், பேராசிரியர், ஆற்காட்டார், கோ.சி.மணி, வீரபாண்டியார், துரைமுருகன் போன்ற கட்சியின் சீனியர்கள் எந்தப் பொறுப்பில் இருப்பதுங்கிற சிக்கல் ஏற்படக்கூடாதுங்கிறதுக்காகத்தான் மேலவை கொண்டு வரப்படுதாம். தி.மு.க. சீனியர்களுக்கு மேலவை. இளையவர்களுக்குப் பேரவை.''

""தன் பெயரில் பேரவை அமைத்து செயல்படக்கூடாதுன்னும், அப்படி செயல்படு கிறவர்கள் மேலே தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்கும்னும் மு.க.அழகிரி திடீர்னு அறிக்கை விட்டதோட பின்னணி என்ன?''

""அழகிரி தனி ஆவர்த்தனம் நடத்திக் கிட்டிருப்பதா ஸ்டாலின் தரப்பில் வருத்தம் இருந்தது. தென்மண்டல அமைப்புச் செய லாளரின் கட்டுப்பாட்டுக்குள் மேலும் சில மாவட்டங்களைக் கொண்டுவர அழகிரி கொடுக்கும் நிர்பந்தத்தை அனுமதிக்கக்கூடாதுங் கிறதில் ஸ்டாலின் தரப்பு உறுதியா இருந்ததைப் பற்றி போன முறை நாம பேசியிருந்தோம். அழகிரி பேரவையும் ஸ்டாலின் தரப்புக்கு ஒரு நெருக் கடியான விஷயமாகவே இருந்தது. கட்சித் தலைமை ஏன் நடவடிக்கை எடுப்பதில்லைன்னு கேள்வி எழுப்புனாங்க. இந்த நிலையில், அழகிரி பேரவை பற்றி நிறைய புகார்கள் தலைமைக்கு வந்ததால் கலைஞரும் வருத்தத்தில் இருந்தார்.''

""பேரவை சார்பில் எக்கச்சக்கமா பேனர்கள் வைக்கப்பட்டபோதே, நடவடிக்கை எடுக்கப் படும்னு கலைஞர் சொல்லியிருந்தாரே?''

""பேரவைன்னு பெயரை சொல்லிக்கிட்டு, நிறைய வசூல் நடப்பதாகவும் புதுப்புகார்கள் வந்ததையடுத்து, அழகிரியிடம் கனிமொழி பேசியிருக்கிறார். கலைஞரின் மனவருத்தத்தை எடுத்துச்சொல்லி, பேரவை செயல்பாடுகளுக்கு எதிரா அழகிரியிடமிருந்தே அறிக்கை வெளி வரணும்னு கலைஞர் விரும்புவதை கனிமொழி எடுத்துச்சொல்ல, அதையடுத்துதான் அழகிரி யிடமிருந்து இந்த அறிக்கை வெளிவந்திருக்குது. அதுமட்டுமில்லீங்க தலைவரே... அழகிரி தன்னோட ஆதரவாளர்கள்கிட்டே, நான் சொல்ல விரும்பியதையெல்லாம் பேட்டியா சொல்லிட் டேன். இனி எதுவும் பேசப்போவதில்லைன்னு சொன்னதோடு, கட்சிக்காரர் வீட்டு கல்யாண விழாவில்கூட பேச மறுத்துட்டாராம்.''

""அழகிரியை மையமா வச்சு கேபிள் சர்ச்சை சுழன்றடிக்குதே?''

""ஏப்ரல் 14-ந் தேதியன்னைக்கு ஜேக் கம்யூனிகேஷன்ஸ்ங்கிற கேபிள் நிறுவனம் தொடங்கப்படுது. இதில் அழகிரி மகன் துரைதயாநிதியும், அழகிரியின் நண்பர் ஆவடி ஜெயராமனின் மகன் ஜேக் ஜெயராமனும் பங்குதாரர்கள். கேபிள் நெட்வொர்க்கை வலிமையா வைத்திருக்கும் சுமங்கலி கேபிள் நிறுவனம் சார்பில் ஜெயராமன்கிட்டே, சென்னையில் மட்டும் உங்க பிசினஸை தொடங்க வேணாம்னு சொல்லியிருக்காங்க. அவர் முடியாதுன்னதாலே, அழகிரிகிட்டே பேசியிருக்குது சுமங்கலி தரப்பு. அழகிரியோ உறுதியா இருந்துட்டாராம். தன் நண்பர் தரப்பிடம், திட்டமிட்டபடி ஆரம்பிச்சடுங்கன்னு அழகிரி சொல்ல, அழைப்பிதழும் ரெடியா யிடிச்சி. மதுரையிலிருந்து அழகிரி உட்பட கட்சி பிரமுகர்கள் திரளா சென்னைக்கு திங்கள் இரவே கிளம்பிட்டாங்க. சுமங்கலி கேபிள் விஷனின் உரிமையாளரான தயாநிதி மாறனுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு சப்போர்ட்டாக இருக்கிற நிலையில், ஜேக் ஜெயராமனை வைத்து அழகிரி தரப்பில் கேபிள் நிறுவனம் தொடங் கப்படுவது பதட்டத்தை உண்டாக்கியிருக்குது.''

""அடுத்த மேட்டர்?''

""சட்டீஸ்கர் மாநிலத்தில் 76 சி.ஆர்.பி.எஃப். போலீசாரை மாவோயிஸ்ட்டுகள் தாக்கி அழித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, ராஜினாமா செய்வதா உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் கொடுத்த விவகாரம், போன வெள்ளிக்கிழமையன்னைக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திடிச்சி. ப.சியின் ராஜினாமா விவகாரம் தொடர்பா டெல்லியிலிருந்து இன்னொரு தகவலும் கிடைச்சிருக்குங்க தலைவரே... இந்த தாக்குதலுக்கு யார் பொறுப் புன்னு மீடியாக்களில் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு விவாதம் நடந்தது. அதுபோல, இதே கேள்வியைக் கேட்க எதிர்க்கட்சி களும் ரெடியாயி டிச்சின்னு மத்திய அரசுக்கு தகவல் வர, பிரதமர் அலுவல கத்திலிருந்து ப.சியைத் தொடர்புகொண்டு, ராஜினாமா கடிதம் கொடுங்கன்னு கேட்க, அதன்படி ப.சி.யும் கடிதம் கொடுக்க, சம்பவத் துக்குப் பொறுப் பேற்று ப.சி. ராஜி னாமா செய்ததாக வும், அதை ஏத்துக் கலைன்னு மத்திய அரசு ஒரு டிராமா நடத்தியிருக்காம். ராஜினாமா கடித விவகாரத்தால் டென்ஷனில் இருந்த ப.சி, பாண்டிச்சேரிக்கு வந்து காங்கிரஸ் மந்திரிகளை ஒரு பிடி பிடிச்சிட்டார்.''

""அரசியலில்தான் உள்குத்துகள் சகஜமாச்சே.. அ.தி.மு.கவிலும் ஒரு உள்குத்து விவகாரம், வெளிக்குத்து அளவுக்கு சீரியஸாகியிருக்குது. அ.தி.மு.க. எம்.பி. ஓ.எஸ்.மணியன் தாக்கப்பட்ட வழக்கில், இன்னைக்கு வரைக்கும் முன்ஜாமீன் கிடைக்காமல் தலைமறைவா இருக்கிறார் ர.ர.வான வாய்மேடு பழனியப்பன்.''

""எங்கே மறைந்திருக்கிறாராம்?''

""முத்துப்பேட்டையில் அலையாத்திக் காடுகள் நிறைந்திருக்கும் பகுதியில் மறைந்திருக்காராம். அவரையும் அவரோட ஆளான, ஆயக்காரன்புலம் கவுன்சிலர் வீரபாண்டியனையும் ஓ.எஸ்.எம். தரப்பு ஆட்கள் தேடி அலைஞ்சிக்கிட்டிருக்காங்க. பெயில் கிடைத்த வீரபாண்டியன், நடுசேத்தி அருள்மணி வீட்டில் தங்கி, தன் செல் போனில் பழனியப்பனிடம் பேசிக்கிட்டிருந்த நேரத்தில், மாஜி சி.பி.ஐ. ஒ.செ.வும் மாஜி கவுன்சிலருமான இளங்கோவனின் மகன் பகத்சிங்கும், அவரது அண்ணன் மகன் நக்கீரனும் வீரபாண்டியனோட கழுத்தை குறிவைத்து அரிவாளைப் போட, அது போன் பேசிக்கொண்டிருந்த வீரபாண்டி யனோட கையை வெட்டிடிச்சி. மறுபடியும் அவரை வெட்ட முயற்சித்தபோது, ஆட்கள் வந்ததால விட்டுட்டு ஓடிட்டாங்க. வெட்டுப் பட்ட வீரபாண்டியன் தலித் இனத்தவர். வெட்டியவங்க ஓ.எஸ்.மணியனோட சமுதாயத்தைச் சேர்ந்தவங்க. அதனால இந்த உள்கட்சி மோதல் இப்ப ஜாதி ரீதியான பதட்டத்தை நாகை மாவட்டத்தில் உருவாக்கியிருக்குது. ஓ.எஸ்.எம் தரப்பும், வாய்மேடு பழனியப்பன் தரப்பும் ஒருத்தர் மீது ஒருத்தர் வெறிகொண்டு ஆயுதங் களோடு அலைஞ்சுக்கிட்டிருக்காங்க.''

""பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரியின் சென்னை விசிட் பற்றி சொல்றேம்ப்பா. மயிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதின் கட்காரி ரொம்ப உற்சாகமா பேசினார். அதற்கப் புறம் கட்சி நிர்வாகிகளோடு நடந்த ஆலோ சனையில், யாருடன் கூட்டணி வைக்கலாம்னு சொல்லுங்கன்னு கட்காரி கேட்க, என்ன பதில் சொல்றதுன்னு தமிழக பா.ஜ.க தலைவர்களுக்குத் தெரியலை. தி.மு.க, அ.தி.மு.க 2 கட்சிகளுமே நமக்கு சாதகமா இல்லைங்கிறதை எப்படி அகில இந்தியத் தலைவர்கிட்டே சொல்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருந்தாங்க.''

""அ.தி.மு.க. ஏரியா தகவல்கள்?''

""ஜெ. வீட்டில் பி.ஏ.வா வேலைபார்த்த கார்த்திகேயனை மன்னார்குடிக்கு அனுப்பிட்டு, மன்னார்குடியில் கணக்கு பார்த்துக்கிட்டிருந்த கிருஷ்ணமூர்த்திங்கிறவரை பி.ஏ.வாக் கியிருக்காங்க. சிறுதாவூரில் நடந்த ஆலோசனையின் போது கார்த்திகேயன் மேலே கட்சி நிர்வாகிகள் புகார்களை அடுக்கியிருக்காங்க. ஜெ.வுக்கு அனுப்பப்படும் முக்கிய கடிதங்களை மறைச்சிட்டார்னும், நிர்வாகிகள் நியமனத்தில் பணம் வாங்கிட் டாருன்னும், ஜெ.வின் மூவ்கள் பற்றி வெளியே சொல்றாருன்னும் புகார்கள் சொல்லப்பட்டி ருக்கு. ஜெ.வின் விசாரணையிலும் இதெல்லாம் உண்மைன்னு தெரிஞ்சதாலதான் கார்த்திகேயன் விரட்டப்பட்டு கிருஷ்ணமூர்த்தியை பி.ஏ.வாக்கியிருக்காங்க. இவர் சசிகலாவின் சிபாரிசாம்.''

""கார்டன் சம்பந்தமான ஒரு தகவலை நான் சொல்றேன். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு காரணம், போயஸ் கார்டன் வீட்டில் வாசல் சரியில்லாத துதான்னு ஆஸ்தான ஜோதிடர் ஒருத்தர் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு வாஸ்து நிபுணர் இதுபற்றி சொன்னப்ப, எங்கம்மா சந்தியா வைத்த வாசல் இது. மாற்றமாட்டேன்னு ஜெ. சொல்லியிருந்தார். இப்ப ஆஸ் தான ஜோதிடரும் சொன்ன பிறகு, கார்டன் வீட்டின் வாசலை கொஞ்சம் தள்ளி வைக்கும் வேலை கள் நடந்துக் கிட்டிருக்கு.''

No comments:

Post a Comment