Friday, April 23, 2010

ரஞ்சிதா குறித்து சென்னை அபார்ட்மென்டில் பெங்களூர் போலீஸ் விசாரணை!


shockan.blogspot.com
சென்னையில் நடிகை ரஞ்சிதாவைத் தேடி வந்த பெங்களூர் போலீசார் அடுக்குமாடிக் குடியிருப்பில் விசாரணை நடத்தினர்.

நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் லீலையி்ல் ஈடுபட்ட நடிகை ரஞ்சிதாவையும் கைது செய்ய பெங்களூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா விருப்பத்துடன் உல்லமாசமாக இருந்தாரா, அல்லது மிரட்டி உல்லாசமாக இருக்க பணிய வைக்கப்பட்டரா என்றரீதியில் அவரிடம் விசாரணை நடத்த பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் ரஞ்சிதாவைத் தேடி சென்னை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள ரஞ்சிதாவின் சகோதரி லட்சுமி நாகஜோதியின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு பெங்களூர் போலீசார் வந்தனர்.

இங்குதான் ரஞ்சிதாவும் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி மற்றும் ரஞ்சிதாவுடன் அவர்களின் தந்தை அசோக்குமாரும் தங்கியிருந்தார். இந்த வீட்டில் இருந்த தான் ரஞ்சிதா, படப்பிடிப்புகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

ஆனால், ரஞ்சிதா விவகாரம் வெடித்ததில் இருந்து கடந்த 45 நாட்களாக இந்த வீடு பூட்டியே கிடக்கிறது.

இந் நிலையில் இன்று பெங்களூர் போலீஸார் இந்த குடியிருப்புக்கு வந்து காவலாளி, மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால், கடந்த ஒன்றரை மாதமாகவே இந்த வீடு பூட்டிக் கிடப்பதாகவும், வீட்டுக்கு யாரும் வருவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சிதா மீது நடவடிக்கை கோரி வழக்கு:

இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சி. மனோகரன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,

கடந்த மார்ச் மாதம் பல்வேறு தனியார் டி.வி.க்களிலும், பத்திரிகைகளிலும் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாயின. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்மீகத்தில் ஈடுபடும் ஒருவர் தனி நபர் ஒழுக்கத்தை மீறி நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.

அதே நேரம் நித்யானந்தா சாமியாருக்கு நடிகை ரஞ்சிதா செக்ஸ் உணர்வைத் தூண்டுவது போல் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதாகும். எனவே நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்தது போல் ரஞ்சிதா மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். இதன் பேரில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஞ்சிதா மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தீர்களா, இல்லையெனில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசு வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா பதிலளிக்கையில்,
ஏற்கனவே நித்யானந்தா மீது பல புகார்கள் வந்துள்ளன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே ரஞ்சிதா மீது தனி வழக்குப்பதிவு செய்ய தேவையில்லை. ஏற்கனவே நித்யானந்தா மீதுள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதையடுத்து போலீஸ் தரப்பிலும் மனுதாரர் தரப்பிலும் வரும் திங்கட்கிழமைக்குள் உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment