Monday, April 26, 2010

சுறாவின் காதலி நான்


shockan.blogspot.com

விஜய்யுடன் நடித்த அனுபவம்?
முதல் முறையா நாங்க ஜோடி சேர்ந்திருக்கோம். விளம்பரம் பார்த்தவங்க எங்க ஜோடி சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. குறிப்பா Ôநான் நடந்தால் அதிரடிÕ பாடல்ல, ரெண்டு பேருமே ரொம்ப ஸ்டைலிஷா இருக்கோம்னு பாராட்டுறாங்க. இதுக்கு டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார், கேமராமேன் ஏகாம¢பரத்துக்குதான் நன்றி சொல்லணும். விஜய் ரொம்ப எளிமையான டைப். காட்சிகள்ல வசனத்தை புரிஞ்சிட்டு நடிக்க நான் நேரம் எடுத்துக்குவேன். அதுவரைக்கும் பொறுமையா இருந்து, அவர் ஒத்துழைப்பு கொடுப்பார்.
காமெடி?
அதை பத்தி சொல்லியே ஆகணும். விஜய் படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அவரே நல்லா காமெடி பண்ணுவார். கூட வடிவேலும் இருக்கார். சொல்லவா வேணும்? இவங்களுக்கு நடுவில நானும் காமெடி பண்ணணும்னு ராஜகுமார் சொன்னார். பயந்துபோனேன். காரணம், இவங்களுக்கு இணையா நான் காமெடி பண்ண முடியாதுன்னுதான். கடைசியா விஜய் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். அந்த காட்சிகள் ரொம்ப என்டர்டெயின்மென்டா வந்திருக்குன்னு டைரக்டர் பாராட்டினார்.
ஆக்ஷன் படமிது. உங்களுக்கு முக்கியத்துவம் எப்படி?
Ôஅயன்Õ, Ôபடிக்காதவன்Õகூட ஆக்ஷன் படங்கள்தானே. அதுல என்னோட பார்ட் ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. அதே மாதிரிதான் ÔசுறாÕவும். மீனவ குடும்பங்களை சுத்தி நடக்கிற கதையிது. சுறாவின் காதலி நான். அந்த குப்பத்துக்கு நான் வர்றதும் விஜய்யை விரும்புறதும் அதுக்கு பிறகு நடக்கிற சம்பவங்களும் விறுவிறுப்பா இருக்கும்.
யூனிட் பற்றி?
தமிழ் படங்கள்ல எப்போவுமே எனக்கு பெஸ்ட் யூனிட்தான் கிடைச்சிருக்கு. அந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்வேன். வெளியில நமக்கு எத்தனையோ கவலைகள் இருக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, அதையெல்லாம் மறந்து கேரக்டரோடு ஒன்றிப்போகணும். அதுக்கு ரொம்பவே ஹெல்ப்பா இருக்கிறது பட யூனிட்தான். யூனிட்ல டைரக்டர்லேருந்து லைட்பாய் வரைக்கும் சுறுசுறுப்பா சிரிச்ச முகத்தோடு இருக்கும்போது, நம்ம வேலை ஈஸி ஆயிடும். ÔசுறாÕ படத்தை நாம திட்டமிட்டபடி முடிக்க யூனிட் முக்கிய காரணம்.

No comments:

Post a Comment